II தெசலோனிக்கேயர் 1
Tamil Bible (BSI 1957) • 12 verses
1பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:
2நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.
RelatedII பேதுரு 3:18 · II பேதுரு 1:5-10 · நீதிமொழிகள் 4:18 · பிலிப்பியர் 1:9 · ஏசாயா 40:29-31 · I தெசலோனிக்கேயர் 4:1
4நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.
Relatedயாக்கோபு 5:7-8 · எபிரெயர் 10:36 · எபிரெயர் 12:1-3 · II கொரிந்தியர் 7:14 · I தெசலோனிக்கேயர் 2:14 · I தெசலோனிக்கேயர் 1:3
5நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது.
Relatedபிலிப்பியர் 1:28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22 · லூக்கா 20:35 · வெளிப்படுத்தின விசேஷம் 19:2 · II தீமோத்தேயு 2:12 · லூக்கா 21:36
6உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.
Relatedசகரியா 2:8 · கொலோசெயர் 3:25 · உபாகமம் 32:41-43 · சங்கீதம் 94:20-23 · ஏசாயா 49:26 · வெளிப்படுத்தின விசேஷம் 6:10
7தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 14:13 · மத்தேயு 16:27 · யூதா 1:14-15 · வெளிப்படுத்தின விசேஷம் 22:16 · தீத்து 2:13 · மத்தேயு 25:31
8கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
RelatedI பேதுரு 4:17 · எபிரெயர் 10:27 · II பேதுரு 3:7 · எபிரெயர் 10:30 · II பேதுரு 3:10-12 · சங்கீதம் 79:6
9அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும்,
Relatedமத்தேயு 25:41 · மத்தேயு 25:46 · வெளிப்படுத்தின விசேஷம் 14:10-11 · II தெசலோனிக்கேயர் 2:8 · வெளிப்படுத்தின விசேஷம் 21:8 · ஏசாயா 2:21
10அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாக்கி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.
RelatedI கொரிந்தியர் 3:13 · யோவான் 17:10 · II தீமோத்தேயு 4:8 · எபேசியர் 1:18 · ஏசாயா 49:3 · எண்ணாகமம் 23:23
11ஆகையால், நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக;
Relatedபிலிப்பியர் 2:13 · கொலோசெயர் 1:9-13 · I தெசலோனிக்கேயர் 1:3 · II தெசலோனிக்கேயர் 2:14 · தீத்து 3:4-7 · II தெசலோனிக்கேயர் 1:5
12நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
📖 II தெசலோனிக்கேயர்All 3 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS