அப்போஸ்தலருடைய நடபடிகள் 6
Tamil Bible (BSI 1957) • 15 verses
1அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 2:41 · யாக்கோபு 5:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:35 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:47 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:39 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:7
2அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.
Relatedஉபாகமம் 1:9-14 · யாத்திராகமம் 18:17-26 · II தீமோத்தேயு 2:4 · நெகேமியா 6:3 · எண்ணாகமம் 11:11-13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:22
3ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.
RelatedI தீமோத்தேயு 3:7-15 · உபாகமம் 1:13 · யாக்கோபு 3:17-18 · I தீமோத்தேயு 5:10 · எண்ணாகமம் 27:18-19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2-3
4நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 1:14 · I தீமோத்தேயு 4:13-16 · பிலிப்பியர் 1:9-11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:42 · II தீமோத்தேயு 4:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2-3
5இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 11:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:5-40 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:1-8:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:3
6அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.
Relatedஎண்ணாகமம் 8:10 · II தீமோத்தேயு 1:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:24 · I தீமோத்தேயு 4:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:17
7தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 19:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:24 · கொலோசெயர் 1:6 · எபிரெயர் 5:9 · ரோமர் 16:26 · ரோமர் 1:5
8ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 4:29-30 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:55 · I தீமோத்தேயு 3:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:15
9அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:41 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:34 · மத்தேயு 27:32 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:10
10அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.
Relatedலூக்கா 21:15 · மத்தேயு 10:19-20 · I கொரிந்தியர் 2:4 · லூக்கா 12:11-12 · யோவான் 7:46 · யோபு 32:8
11அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி;
Relatedமத்தேயு 26:59-60 · I இராஜாக்கள் 21:10-13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:37-39 · யோவான் 9:29 · யோவான் 5:45-47 · ரோமர் 3:8
12ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;
Relatedநீதிமொழிகள் 15:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:2 · மத்தேயு 26:57 · மத்தேயு 5:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:1-3
13பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷணவார்த்தைகளை ஓயாமற்பேசுகிறான்;
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 6:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:28 · மத்தேயு 24:15 · சங்கீதம் 27:12 · சங்கீதம் 35:11 · சங்கீதம் 56:5
14எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள்.
Relatedதானியேல் 9:26 · எபிரெயர் 12:26-28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:1 · கலாத்தியர் 3:19 · கலாத்தியர் 3:23
15ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.
📖 அப்போஸ்தலருடைய நடபடிகள்All 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS