I கொரிந்தியர் 5
Tamil Bible (BSI 1957) • 13 verses
1உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 21:8 · வெளிப்படுத்தின விசேஷம் 2:21 · கொலோசெயர் 3:5 · லேவியராகமம் 18:8 · எபேசியர் 5:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:29
2இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 2:20-22 · II கொரிந்தியர் 7:7-11 · II கொரிந்தியர் 12:21 · I கொரிந்தியர் 5:13 · எரேமியா 13:17 · எண்ணாகமம் 25:6
3நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,
Relatedகொலோசெயர் 2:5 · I தெசலோனிக்கேயர் 2:17 · II கொரிந்தியர் 13:2 · II கொரிந்தியர் 10:11 · II கொரிந்தியர் 10:1
4நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,
Relatedயோவான் 20:23 · கொலோசெயர் 3:17 · மத்தேயு 18:16-18 · மத்தேயு 16:19 · II கொரிந்தியர் 13:3 · II தெசலோனிக்கேயர் 3:6
5அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
RelatedI தீமோத்தேயு 1:20 · II தெசலோனிக்கேயர் 3:14-15 · கலாத்தியர் 6:1-2 · யாக்கோபு 5:19-20 · யோபு 2:6 · II கொரிந்தியர் 2:6-7
6நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
Relatedகலாத்தியர் 5:9 · I கொரிந்தியர் 15:33 · யாக்கோபு 4:16 · I கொரிந்தியர் 5:2 · லூக்கா 13:21 · I கொரிந்தியர் 4:18-19
7ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
RelatedI பேதுரு 1:19-20 · எபேசியர் 4:22 · கொலோசெயர் 3:5-9 · ஏசாயா 53:7-10 · யாத்திராகமம் 12:15 · யாத்திராகமம் 13:6-7
8ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
RelatedI பேதுரு 2:1-2 · யாத்திராகமம் 12:15 · உபாகமம் 16:3 · லூக்கா 12:1 · மாற்கு 8:15 · மத்தேயு 16:6
9விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.
Relatedஎபேசியர் 5:11 · II தெசலோனிக்கேயர் 3:14 · II கொரிந்தியர் 6:14 · II தெசலோனிக்கேயர் 3:6 · I கொரிந்தியர் 5:7 · நீதிமொழிகள் 9:6
10ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.
RelatedI கொரிந்தியர் 10:27 · யோவான் 17:15-16 · II கொரிந்தியர் 4:4 · மத்தேயு 5:14-16 · I யோவான் 4:5 · எபேசியர் 2:2
11நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
Relatedரோமர் 16:17 · II தெசலோனிக்கேயர் 3:6 · II தெசலோனிக்கேயர் 3:14 · மத்தேயு 18:17 · I கொரிந்தியர் 5:13 · II யோவான் 1:10
12புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?
Relatedமாற்கு 4:11 · I தீமோத்தேயு 3:7 · லூக்கா 12:14 · I கொரிந்தியர் 5:3-5 · கொலோசெயர் 4:5 · I தெசலோனிக்கேயர் 4:12
13புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.
📖 I கொரிந்தியர்All 16 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS