நீதிமொழிகள் 15
Tamil Bible (BSI 1957) • 33 verses
1மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
Relatedநீதிமொழிகள் 10:12 · நீதிமொழிகள் 25:15 · நீதிமொழிகள் 15:18 · நீதிமொழிகள் 29:22 · நீதிமொழிகள் 28:25 · நியாயாதிபதிகள் 8:1-3
2ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
Relatedநீதிமொழிகள் 12:23 · நீதிமொழிகள் 15:28 · நீதிமொழிகள் 13:16 · பிரசங்கி 10:12-13 · சங்கீதம் 45:1 · ஏசாயா 50:4
3கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.
Relatedஎபிரெயர் 4:13 · எரேமியா 16:17 · எரேமியா 23:24 · II நாளாகமம் 16:9 · நீதிமொழிகள் 5:21 · யோபு 31:4
4ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
Relatedநீதிமொழிகள் 16:24 · நீதிமொழிகள் 12:18 · நீதிமொழிகள் 18:8 · மல்கியா 4:2 · நீதிமொழிகள் 3:18 · நீதிமொழிகள் 18:14
5மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
Relatedநீதிமொழிகள் 15:31-32 · நீதிமொழிகள் 13:18 · நீதிமொழிகள் 13:1 · நீதிமொழிகள் 19:20 · தீத்து 2:15 · I நாளாகமம் 28:20
6நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.
Relatedநீதிமொழிகள் 8:21 · நீதிமொழிகள் 10:22 · நீதிமொழிகள் 21:20 · சங்கீதம் 112:3 · நீதிமொழிகள் 16:8 · எபிரெயர் 11:26
7ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.
Relatedமத்தேயு 12:34 · எபேசியர் 4:29 · யாக்கோபு 3:6 · நீதிமொழிகள் 10:20-21 · மத்தேயு 10:27 · மத்தேயு 28:18-20
8துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
Relatedநீதிமொழிகள் 15:29 · I நாளாகமம் 29:17 · நீதிமொழிகள் 21:27 · எரேமியா 6:20 · நீதிமொழிகள் 28:9 · ஏசாயா 1:10-15
9துன்மார்க்கருடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
RelatedI தீமோத்தேயு 6:11 · நீதிமொழிகள் 21:21 · மத்தேயு 7:13 · எரேமியா 44:4 · ஆபகூக் 1:13 · ஓசியா 6:3
10வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
Relatedநீதிமொழிகள் 12:1 · நீதிமொழிகள் 13:1 · நீதிமொழிகள் 10:17 · யோவான் 3:20 · யோவான் 7:7 · எசேக்கியேல் 24:13-14
11பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?
Relatedசங்கீதம் 44:21 · சங்கீதம் 139:8 · எபிரெயர் 4:13 · II நாளாகமம் 6:30 · யோபு 26:6 · வெளிப்படுத்தின விசேஷம் 2:23
12பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
Relatedஆமோஸ் 5:10 · யோபு 21:14 · நீதிமொழிகள் 9:7-8 · II தீமோத்தேயு 4:3 · யோவான் 7:7 · II நாளாகமம் 18:7
13மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
Relatedநீதிமொழிகள் 17:22 · யோவான் 14:1 · நீதிமொழிகள் 18:14 · நீதிமொழிகள் 12:25 · நீதிமொழிகள் 15:15 · II கொரிந்தியர் 7:10
14புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.
Relatedநீதிமொழிகள் 9:9 · நீதிமொழிகள் 18:15 · ஏசாயா 30:10 · II பேதுரு 3:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11 · நீதிமொழிகள் 1:5
15சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.
RelatedII கொரிந்தியர் 6:10 · ரோமர் 12:12 · நீதிமொழிகள் 15:13 · நீதிமொழிகள் 17:22 · ரோமர் 5:11 · ரோமர் 5:2-3
16சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
Relatedநீதிமொழிகள் 16:8 · சங்கீதம் 37:16 · பிரசங்கி 5:10-12 · I தீமோத்தேயு 6:6 · நீதிமொழிகள் 28:6 · நீதிமொழிகள் 10:22
17பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.
Relatedநீதிமொழிகள் 17:1 · நீதிமொழிகள் 21:19 · பிலிப்பியர் 2:1 · I யோவான் 4:16 · சங்கீதம் 133:1-3 · மத்தேயு 22:4
18கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
Relatedநீதிமொழிகள் 26:21 · நீதிமொழிகள் 15:1 · நீதிமொழிகள் 29:22 · மத்தேயு 5:9 · நீதிமொழிகள் 14:29 · பிரசங்கி 10:4
19சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
Relatedஏசாயா 35:8 · நீதிமொழிகள் 22:5 · ஏசாயா 30:21 · நீதிமொழிகள் 22:13 · நீதிமொழிகள் 26:13 · எண்ணாகமம் 14:1-3
20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
Relatedநீதிமொழிகள் 29:3 · நீதிமொழிகள் 10:1 · நீதிமொழிகள் 23:15-16 · லேவியராகமம் 19:3 · நீதிமொழிகள் 23:22 · I இராஜாக்கள் 1:48
21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.
Relatedஎபேசியர் 5:15 · நீதிமொழிகள் 10:23 · நீதிமொழிகள் 14:16 · யோபு 28:28 · யாக்கோபு 3:13 · சங்கீதம் 111:10
22ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
23மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
Relatedஏசாயா 50:4 · நீதிமொழிகள் 25:11-12 · எபேசியர் 4:29 · நீதிமொழிகள் 12:14 · நீதிமொழிகள் 16:13 · நீதிமொழிகள் 24:26
24கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.
Relatedகொலோசெயர் 3:1-2 · சங்கீதம் 16:11 · மத்தேயு 7:14 · பிலிப்பியர் 3:20 · எரேமியா 21:8 · யோவான் 14:6
25அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
Relatedசங்கீதம் 146:9 · சங்கீதம் 68:5-6 · உபாகமம் 10:17-18 · நீதிமொழிகள் 12:7 · நீதிமொழிகள் 14:11 · நீதிமொழிகள் 23:10
26துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
Relatedநீதிமொழிகள் 6:16-19 · மத்தேயு 12:34-37 · நீதிமொழிகள் 15:23 · எரேமியா 4:14 · சங்கீதம் 37:30-31 · சங்கீதம் 19:14
27பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
Relatedயாத்திராகமம் 23:8 · நீதிமொழிகள் 1:19 · எரேமியா 17:11 · உபாகமம் 16:19 · ஏசாயா 33:15-16 · நீதிமொழிகள் 11:29
28நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
RelatedI பேதுரு 3:15 · பிரசங்கி 5:2 · நீதிமொழிகள் 29:11 · நீதிமொழிகள் 16:23 · யாக்கோபு 3:6-8 · நீதிமொழிகள் 15:2
29துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
Relatedயோவான் 9:31 · சங்கீதம் 145:18-19 · நீதிமொழிகள் 15:8 · I பேதுரு 3:12 · சங்கீதம் 34:15-17 · யாக்கோபு 5:16-18
30கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.
Relatedலூக்கா 2:10-19 · நீதிமொழிகள் 25:25 · வெளிப்படுத்தின விசேஷம் 22:5 · ஏசாயா 58:11 · வெளிப்படுத்தின விசேஷம் 21:23 · எஸ்றா 9:8
31ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.
Relatedநீதிமொழிகள் 15:5 · நீதிமொழிகள் 25:12 · யோவான் 15:3-4 · நீதிமொழிகள் 19:20 · நீதிமொழிகள் 9:8-9 · ஏசாயா 55:3
32புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
Relatedநீதிமொழிகள் 1:24-33 · வெளிப்படுத்தின விசேஷம் 3:19 · நீதிமொழிகள் 1:7 · ஏசாயா 1:5 · நீதிமொழிகள் 18:15 · நீதிமொழிகள் 8:33-36
33கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
RelatedI பேதுரு 5:5 · நீதிமொழிகள் 18:12 · நீதிமொழிகள் 1:7 · யாக்கோபு 4:10 · சங்கீதம் 34:11 · சங்கீதம் 111:10
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS