ரோமர் 9
Tamil Bible (BSI 1957) • 33 verses
1எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;
RelatedI தீமோத்தேயு 2:7 · ரோமர் 1:9 · கலாத்தியர் 1:20 · II கொரிந்தியர் 11:10 · பிலிப்பியர் 1:8 · II கொரிந்தியர் 12:19
2நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.
Relatedபிலிப்பியர் 3:18 · எரேமியா 13:17 · சங்கீதம் 119:136 · புலம்பல் 3:51 · ரோமர் 10:1 · லூக்கா 19:41-44
3மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே.
Relatedயாத்திராகமம் 32:32 · எஸ்தர் 8:6 · ரோமர் 11:14 · கலாத்தியர் 3:10 · I கொரிந்தியர் 16:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:23-26
4அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
Relatedஎபேசியர் 2:12 · சங்கீதம் 147:19 · ஆதியாகமம் 17:2 · ரோமர் 9:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:39 · உபாகமம் 7:6
5பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.
6தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.
7அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே.
Relatedஆதியாகமம் 21:12 · எபிரெயர் 11:18 · யோவான் 8:37-39 · கலாத்தியர் 4:23 · பிலிப்பியர் 3:3 · லூக்கா 3:8
8அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.
Relatedயோவான் 1:13 · ரோமர் 4:11-16 · கலாத்தியர் 3:26-29 · ரோமர் 8:14 · கலாத்தியர் 4:22-31 · I யோவான் 3:1-2
9அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே.
Relatedஆதியாகமம் 18:10 · ஆதியாகமம் 18:14 · ஆதியாகமம் 17:21 · ஆதியாகமம் 21:2 · எபிரெயர் 11:11-12 · எபிரெயர் 11:17
10இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,
11பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,
RelatedII தீமோத்தேயு 1:9 · எபேசியர் 1:4-5 · II பேதுரு 1:10 · ரோமர் 8:28-30 · எபேசியர் 1:9-11 · தீத்து 3:5
12மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.
13அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
Relatedமல்கியா 1:2-3 · உபாகமம் 21:15 · ஆதியாகமம் 29:31 · ஆதியாகமம் 29:33 · மத்தேயு 10:37 · நீதிமொழிகள் 13:24
14ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
RelatedII நாளாகமம் 19:7 · சங்கீதம் 145:17 · உபாகமம் 32:4 · சங்கீதம் 92:15 · யோபு 34:10-12 · வெளிப்படுத்தின விசேஷம் 16:7
15அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.
Relatedயாத்திராகமம் 33:19 · ரோமர் 9:16 · மீகா 7:18 · ரோமர் 9:18-19 · யாத்திராகமம் 34:6-7 · ஏசாயா 27:11
16ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.
Relatedஎபேசியர் 2:8 · மத்தேயு 11:25-26 · பிலிப்பியர் 2:13 · எபேசியர் 2:4-5 · I பேதுரு 2:9-10 · தீத்து 3:3-5
17மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.
Relatedயாத்திராகமம் 9:16 · நீதிமொழிகள் 16:4 · யாத்திராகமம் 14:17-18 · யாத்திராகமம் 10:1-2 · யோசுவா 9:9 · யாத்திராகமம் 15:14-15
18ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.
Relatedயாத்திராகமம் 4:21 · யோசுவா 11:20 · ரோமர் 9:15-16 · ரோமர் 11:7-8 · II தெசலோனிக்கேயர் 2:10-12 · உபாகமம் 2:30
19இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.
Relatedதானியேல் 4:35 · II நாளாகமம் 20:6 · I கொரிந்தியர் 15:35 · I கொரிந்தியர் 15:12 · சங்கீதம் 76:10 · யோபு 23:13-14
20அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
21மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
Relatedஏசாயா 64:8 · நீதிமொழிகள் 16:4 · II தீமோத்தேயு 2:20-21 · எரேமியா 18:3-6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15 · ரோமர் 9:22-23
22தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
Relatedநீதிமொழிகள் 16:4 · யூதா 1:4 · I பேதுரு 2:8 · ரோமர் 9:21 · II தீமோத்தேயு 2:20 · யாத்திராகமம் 9:16
23தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?
24அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.
Relatedகொலோசெயர் 3:11 · ரோமர் 10:12 · வெளிப்படுத்தின விசேஷம் 19:9 · எபிரெயர் 3:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:17-20 · கலாத்தியர் 3:28
25அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.
26நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
Relatedஓசியா 1:9-10 · I யோவான் 3:1-3 · ரோமர் 8:16 · கலாத்தியர் 3:26 · ஏசாயா 43:6 · II கொரிந்தியர் 6:18
27அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்;
28அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.
Relatedஏசாயா 10:23 · வெளிப்படுத்தின விசேஷம் 19:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:31 · சங்கீதம் 9:8 · ஏசாயா 30:12-14 · சங்கீதம் 65:5
29அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.
30இப்படியிருக்க நாம் என்ன சொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே.
Relatedபிலிப்பியர் 3:9 · எபிரெயர் 11:7 · கலாத்தியர் 2:16 · ரோமர் 4:11 · ரோமர் 10:20 · கலாத்தியர் 5:5
31நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
Relatedரோமர் 11:7 · யாக்கோபு 2:10-11 · ரோமர் 3:20 · ரோமர் 10:2-4 · கலாத்தியர் 5:3-4 · கலாத்தியர் 3:21
32என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
33இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
Relatedஏசாயா 28:16 · ஏசாயா 8:14-15 · ரோமர் 10:11 · யோவேல் 2:26-27 · I பேதுரு 2:6-8 · சங்கீதம் 118:22
📖 ரோமர்All 16 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS