மாற்கு 4
Tamil Bible (BSI 1957) • 41 verses
1அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள்.
2அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது:
3கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
Relatedயோவான் 4:35-38 · யாக்கோபு 2:5 · I கொரிந்தியர் 3:6-9 · மாற்கு 4:26-29 · மத்தேயு 13:26 · உபாகமம் 4:1
4அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
5சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது;
6வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.
Relatedயாக்கோபு 1:11 · எரேமியா 17:5-8 · யோனா 4:8 · எபேசியர் 3:17 · சங்கீதம் 92:13-15 · சங்கீதம் 1:3-4
7சிலவிதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது.
Relatedஎரேமியா 4:3 · லூக்கா 8:14 · I யோவான் 2:15-16 · ஆதியாகமம் 3:17-18 · மத்தேயு 13:22 · மத்தேயு 13:7
8சிலவிதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.
9கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.
Relatedமத்தேயு 11:15 · மாற்கு 4:23-24 · வெளிப்படுத்தின விசேஷம் 3:22 · வெளிப்படுத்தின விசேஷம் 3:13 · மாற்கு 7:14-15 · லூக்கா 8:18
10அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.
Relatedமத்தேயு 13:10-17 · மாற்கு 7:17 · லூக்கா 8:9-15 · மாற்கு 4:34 · மத்தேயு 13:36 · நீதிமொழிகள் 13:20
11அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
Relatedமத்தேயு 11:25 · லூக்கா 8:10 · I யோவான் 5:20 · யாக்கோபு 1:16-18 · I தெசலோனிக்கேயர் 4:12 · கொலோசெயர் 4:5
12அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
Relatedஏசாயா 6:9-10 · ஏசாயா 44:18 · மத்தேயு 13:14-15 · எரேமியா 5:21 · உபாகமம் 29:4 · யோவான் 12:37-41
13பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 3:19 · மத்தேயு 15:15-17 · I கொரிந்தியர் 3:1-2 · லூக்கா 8:11-15 · லூக்கா 24:25 · எபிரெயர் 5:11-14
14விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 8:4 · மத்தேயு 13:19 · I பேதுரு 1:23-25 · மத்தேயு 13:37 · லூக்கா 8:11 · மாற்கு 4:3
15வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.
RelatedI பேதுரு 5:8 · மத்தேயு 13:19 · லூக்கா 8:12 · II கொரிந்தியர் 2:11 · மாற்கு 4:4 · II கொரிந்தியர் 4:3-4
16அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,
Relatedமாற்கு 6:20 · லூக்கா 8:13 · யோவான் 5:35 · மத்தேயு 13:20-21 · எசேக்கியேல் 33:31-32 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:13
17தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.
Relatedமத்தேயு 11:6 · I தெசலோனிக்கேயர் 3:3-5 · மத்தேயு 12:31 · வெளிப்படுத்தின விசேஷம் 2:10 · யோவான் 15:2-7 · வெளிப்படுத்தின விசேஷம் 2:13
18வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்.
19இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.
RelatedI யோவான் 2:15-17 · I தீமோத்தேயு 6:9-10 · I தீமோத்தேயு 6:17 · பிலிப்பியர் 4:6 · I பேதுரு 4:2-3 · மத்தேயு 19:23
20வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார்.
Relatedகொலோசெயர் 1:10 · லூக்கா 8:15 · யோவான் 15:4-5 · மாற்கு 4:8 · மத்தேயு 13:23 · கலாத்தியர் 5:22-23
21பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும், வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?
Relatedமத்தேயு 5:15 · லூக்கா 11:33 · லூக்கா 8:16 · ஏசாயா 60:1-3 · எபேசியர் 5:3-15 · I கொரிந்தியர் 12:7
22வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்குவராத மறைபொருளுமில்லை.
Relatedலூக்கா 8:17 · பிரசங்கி 12:14 · I கொரிந்தியர் 4:5 · மத்தேயு 10:26-27 · சங்கீதம் 78:2-4 · லூக்கா 12:2-3
23கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
Relatedமாற்கு 4:9 · மத்தேயு 11:15 · வெளிப்படுத்தின விசேஷம் 2:29 · வெளிப்படுத்தின விசேஷம் 2:7 · வெளிப்படுத்தின விசேஷம் 2:11 · வெளிப்படுத்தின விசேஷம் 2:17
24பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.
Relatedஎபிரெயர் 2:1 · லூக்கா 8:18 · மத்தேயு 7:2 · II கொரிந்தியர் 9:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11 · யோவான் 10:27
25உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
Relatedமத்தேயு 13:12 · லூக்கா 8:18 · மத்தேயு 25:28-29 · யோவான் 15:2 · லூக்கா 16:9-12 · லூக்கா 19:24-26
26பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;
Relatedமத்தேயு 13:24 · I கொரிந்தியர் 3:6-9 · I பேதுரு 1:23-25 · லூக்கா 8:11 · ஏசாயா 32:20 · யாக்கோபு 3:18
27இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.
Relatedபிரசங்கி 11:5 · II தெசலோனிக்கேயர் 1:3 · பிரசங்கி 8:17 · I கொரிந்தியர் 15:37-38 · யோவான் 3:7-8 · II பேதுரு 3:18
28எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும்.
Relatedபிலிப்பியர் 1:9-11 · மாற்கு 4:31-32 · ஓசியா 6:3 · மத்தேயு 13:26 · பிலிப்பியர் 1:6 · I தெசலோனிக்கேயர் 3:12-13
29பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.
Relatedயோவேல் 3:13 · மத்தேயு 13:30 · ஏசாயா 57:1-2 · மத்தேயு 13:40-43 · வெளிப்படுத்தின விசேஷம் 14:13-17 · யோபு 5:26
30பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?
31அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது;
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 19:20 · லூக்கா 13:18-19 · ஆதியாகமம் 22:17-18 · மல்கியா 1:11 · தானியேல் 2:44-45 · சகரியா 12:8
32விதைக்கப்பட்ட பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.
Relatedதானியேல் 4:20-22 · தானியேல் 4:10-14 · எசேக்கியேல் 31:3-10 · சங்கீதம் 80:9-11 · சங்கீதம் 91:1 · ஏசாயா 11:9
33அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.
34உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
Relatedயோவான் 16:25 · லூக்கா 24:27 · மாற்கு 4:10 · மத்தேயு 13:36-43 · மத்தேயு 15:15-20 · லூக்கா 8:9-10
35அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
36அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது.
37அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.
38கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையைவைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக்கவலையில்லையா என்றார்கள்.
39அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல்உண்டாயிற்று.
Relatedசங்கீதம் 107:29 · சங்கீதம் 89:9 · சங்கீதம் 29:10 · சங்கீதம் 65:7 · எரேமியா 5:22 · நீதிமொழிகள் 8:29
40அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
41அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
Relatedலூக்கா 8:25 · யோபு 38:11 · I சாமுவேல் 12:18-20 · I சாமுவேல் 12:24 · யோனா 1:9-10 · யோனா 1:15-16
📖 மாற்குAll 16 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS