அப்போஸ்தலருடைய நடபடிகள் 17
Tamil Bible (BSI 1957) • 34 verses
1அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது.
RelatedI தெசலோனிக்கேயர் 1:1 · பிலிப்பியர் 4:16 · II தெசலோனிக்கேயர் 1:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:4 · II தீமோத்தேயு 4:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11
2பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:10 · லூக்கா 4:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1
3கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 18:28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:22 · லூக்கா 24:32 · கலாத்தியர் 3:1 · I கொரிந்தியர் 15:3-4 · லூக்கா 24:46
4அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும்,, கனம்பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்துகொண்டார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 17:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:43 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:50 · II கொரிந்தியர் 8:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:24
5விசுவாசியாத யூதர்கள் வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு, கூட்டங்கூடி, பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப் பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள்.
Relatedகலாத்தியர் 5:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:13 · ரோமர் 16:21 · கலாத்தியர் 5:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:2 · I தெசலோனிக்கேயர் 2:14-16
6அவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 24:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:19-21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:22 · லூக்கா 23:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:28-31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:12-13
7இவர்களை யாசோன் ஏற்றுக்கொண்டான். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை ராஜா என்று சொல்லி, இராயனுடைய கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்களென்று கூக்குரலிட்டு,
Relatedலூக்கா 23:2 · யோவான் 19:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8-11 · I பேதுரு 2:15 · எஸ்றா 4:12-15
8இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள்.
9பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 17:5
10உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள்.
RelatedI தெசலோனிக்கேயர் 2:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:13-14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:4 · யோசுவா 2:15-16
11அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.
Relatedஏசாயா 34:16 · நீதிமொழிகள் 2:1-5 · யோவான் 5:39 · I தெசலோனிக்கேயர் 2:13 · மத்தேயு 13:23 · I பேதுரு 1:10-12
12அதனால் அவர்களில் அநேகம்பேரும் கனம்பொருந்திய கிரேக்கரில் அநேக ஸ்திரீகளும் புருஷர்களும் விசுவாசித்தார்கள்.
Relatedஎபேசியர் 5:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:50 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:2-4 · I கொரிந்தியர் 1:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:46
13பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறதென்று தெசலோனிக்கேயரான யூதர்கள் அறிந்தபோது, அங்கேயும் வந்து, ஜனங்களைக் கிளப்பிவிட்டார்கள்.
RelatedI தெசலோனிக்கேயர் 2:14-16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:12 · மத்தேயு 23:13
14உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 17:10 · மத்தேயு 10:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:30 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:22
15பவுலை வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்; அங்கே சீலாவும் தீமோத்தேயும் அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி அவர்களுக்குச் சொல்லக் கட்டளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள்.
RelatedI தெசலோனிக்கேயர் 3:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:1 · II தீமோத்தேயு 4:10-11 · தீத்து 3:12 · II தீமோத்தேயு 4:20-21
16அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து,
Relatedசங்கீதம் 119:158 · சங்கீதம் 119:136 · யாத்திராகமம் 32:19-20 · II பேதுரு 2:7 · யோபு 32:18-20 · மாற்கு 3:5
17ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 13:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:2-4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1-4 · லூக்கா 12:3 · நீதிமொழிகள் 8:1-4
18அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம் பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள்.
RelatedI கொரிந்தியர் 1:20-21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:2 · I கொரிந்தியர் 3:18 · I கொரிந்தியர் 4:10 · லூக்கா 11:53 · கொலோசெயர் 2:8
19அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?
Relatedமாற்கு 1:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:20 · யோவான் 13:34
20நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறியமனதாயிருக்கிறோம் என்றார்கள்.
Relatedஓசியா 8:12 · I கொரிந்தியர் 1:23 · I கொரிந்தியர் 2:14 · I பேதுரு 4:4 · I கொரிந்தியர் 1:18 · யோவான் 7:35-36
21அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.
RelatedII தீமோத்தேயு 2:16-17 · கொலோசெயர் 4:5 · எபேசியர் 5:16 · II தெசலோனிக்கேயர் 3:11-12 · I தீமோத்தேயு 5:13
22அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 25:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:35 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:16 · எரேமியா 50:38 · எரேமியா 10:2-3
23எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
Relatedகலாத்தியர் 4:8-9 · யோவான் 4:22 · யோவான் 17:3 · யோவான் 17:25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:30 · I கொரிந்தியர் 1:21
24உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.
RelatedI இராஜாக்கள் 8:27 · உபாகமம் 10:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:48 · ஏசாயா 66:1 · II நாளாகமம் 6:18 · மத்தேயு 11:25
25எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.
Relatedசங்கீதம் 50:8-13 · ஏசாயா 42:5 · ஆதியாகமம் 2:7 · யோபு 33:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:28 · ரோமர் 11:35
26மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
Relatedஉபாகமம் 32:7-8 · ஆதியாகமம் 3:20 · மல்கியா 2:10 · ரோமர் 5:12-19 · I கொரிந்தியர் 15:22 · I கொரிந்தியர் 15:47
27கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
Relatedஎரேமியா 23:23-24 · உபாகமம் 4:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:17 · ரோமர் 1:20 · ரோமர் 2:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:17
28ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
29நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.
Relatedஏசாயா 40:25 · யாத்திராகமம் 20:4 · ஏசாயா 46:5-6 · சங்கீதம் 115:4-8 · ஆபகூக் 2:19-20 · ரோமர் 1:20-23
30அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 14:16 · தீத்து 2:11-12 · லூக்கா 24:47 · ரோமர் 3:25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:17-20 · எபேசியர் 4:17-32
31மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
Relatedமத்தேயு 25:31-46 · ரோமர் 2:16 · II பேதுரு 3:7 · சங்கீதம் 9:8 · II கொரிந்தியர் 5:10 · சங்கீதம் 98:9
32மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 26:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:18 · I கொரிந்தியர் 4:10 · II கொரிந்தியர் 6:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:19
33இப்படியிருக்க, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான்.
34சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்.
📖 அப்போஸ்தலருடைய நடபடிகள்All 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS