I தெசலோனிக்கேயர் 1
Tamil Bible (BSI 1957) • 10 verses
1பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
Relatedரோமர் 1:7 · II தெசலோனிக்கேயர் 1:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:4 · யூதா 1:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:13-15
2தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,
Relatedரோமர் 1:8-9 · எபேசியர் 1:15-16 · பிலேமோன் 1:4 · கொலோசெயர் 1:3 · பிலிப்பியர் 1:3-4 · I கொரிந்தியர் 1:4
3நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,
RelatedI கொரிந்தியர் 13:13 · வெளிப்படுத்தின விசேஷம் 2:19 · கலாத்தியர் 5:6 · ரோமர் 8:24-25 · II தெசலோனிக்கேயர் 1:11 · I யோவான் 5:3
4எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.
RelatedII தெசலோனிக்கேயர் 2:13 · II பேதுரு 1:10 · தீத்து 3:4-5 · ரோமர் 9:25 · கொலோசெயர் 3:12 · எபேசியர் 2:4-5
5எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
RelatedII தெசலோனிக்கேயர் 3:7-9 · மாற்கு 16:20 · I கொரிந்தியர் 2:2-5 · I தெசலோனிக்கேயர் 2:13 · II தெசலோனிக்கேயர் 2:14 · கலாத்தியர் 3:2-5
6நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,
RelatedI கொரிந்தியர் 11:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:52 · I கொரிந்தியர் 4:16 · கலாத்தியர் 5:22 · II தெசலோனிக்கேயர் 3:9 · எபேசியர் 5:1
7இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.
Relatedதீத்து 2:7 · I பேதுரு 5:3 · I தீமோத்தேயு 4:12 · II கொரிந்தியர் 11:9-10 · I தெசலோனிக்கேயர் 1:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:12
8எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று.
Relatedரோமர் 1:8 · ரோமர் 10:14-18 · ஏசாயா 52:7 · வெளிப்படுத்தின விசேஷம் 14:6 · III யோவான் 1:12 · II தெசலோனிக்கேயர் 1:4
9ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,
RelatedI தீமோத்தேயு 4:10 · I கொரிந்தியர் 12:2 · கலாத்தியர் 4:8-9 · சகரியா 8:20-23 · செப்பனியா 2:11 · I தெசலோனிக்கேயர் 2:13
10அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.
📖 I தெசலோனிக்கேயர்All 5 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS