I கொரிந்தியர் 10
Tamil Bible (BSI 1957) • 33 verses
1இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும், சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.
Relatedயாத்திராகமம் 14:29 · நெகேமியா 9:11-12 · சங்கீதம் 78:13-14 · சங்கீதம் 106:7-11 · சங்கீதம் 105:39 · யாத்திராகமம் 14:19-22
2எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
Relatedஎபிரெயர் 3:2-3 · ரோமர் 6:3 · யாத்திராகமம் 14:31 · I கொரிந்தியர் 1:13-16 · கலாத்தியர் 3:27 · யோவான் 9:28-29
3எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.
Relatedஉபாகமம் 8:3 · நெகேமியா 9:15 · யாத்திராகமம் 16:35 · யாத்திராகமம் 16:4 · நெகேமியா 9:20 · யாத்திராகமம் 16:15
4எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
Relatedயாத்திராகமம் 17:6 · யோவான் 7:37 · ஏசாயா 48:21 · யோவான் 4:14 · சங்கீதம் 105:41 · சங்கீதம் 78:15
5அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
Relatedஎபிரெயர் 3:17 · யூதா 1:5 · எண்ணாகமம் 26:64-65 · எண்ணாகமம் 14:37 · சங்கீதம் 106:26 · எண்ணாகமம் 14:11-12
6அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
Relatedயூதா 1:7 · I கொரிந்தியர் 10:11 · II பேதுரு 2:6 · எபிரெயர் 4:11 · எண்ணாகமம் 11:4 · செப்பனியா 3:6-7
7ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்.
Relatedயாத்திராகமம் 32:6-8 · சங்கீதம் 106:19-20 · உபாகமம் 9:12 · I கொரிந்தியர் 6:9 · I கொரிந்தியர் 10:14 · உபாகமம் 9:16-21
8அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.
Relatedஎண்ணாகமம் 25:1-9 · I கொரிந்தியர் 6:18 · சங்கீதம் 106:29 · I கொரிந்தியர் 6:9 · வெளிப்படுத்தின விசேஷம் 2:14
9அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.
Relatedஎண்ணாகமம் 21:5-6 · சங்கீதம் 78:18 · எபிரெயர் 3:8-11 · யாத்திராகமம் 17:2 · சங்கீதம் 78:56 · யாத்திராகமம் 17:7
10அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.
Relatedஎண்ணாகமம் 14:2 · எண்ணாகமம் 16:41 · எண்ணாகமம் 14:37 · பிலிப்பியர் 2:14 · I நாளாகமம் 21:15 · II சாமுவேல் 24:16
11இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.
12இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
Relatedரோமர் 11:20 · II பேதுரு 3:17 · நீதிமொழிகள் 16:18 · I கொரிந்தியர் 8:2 · மத்தேயு 26:40-41 · மத்தேயு 26:33-34
13மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
RelatedII பேதுரு 2:9 · II தீமோத்தேயு 4:18 · II தெசலோனிக்கேயர் 3:3 · I பேதுரு 5:8-9 · எபிரெயர் 12:4 · I தெசலோனிக்கேயர் 5:24
14ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 21:8 · I யோவான் 5:21 · II கொரிந்தியர் 7:1 · I பேதுரு 2:11 · வெளிப்படுத்தின விசேஷம் 22:15 · II கொரிந்தியர் 6:17
15உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப்பாருங்கள்.
RelatedI தெசலோனிக்கேயர் 5:21 · I கொரிந்தியர் 8:1 · I கொரிந்தியர் 6:5 · யோபு 34:2-3 · I கொரிந்தியர் 4:10 · I கொரிந்தியர் 14:20
16நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கிமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?
Relatedமத்தேயு 26:26-28 · I கொரிந்தியர் 11:23-29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:42 · எபிரெயர் 3:14 · யோவான் 6:53-58 · I யோவான் 1:7
17அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.
Relatedரோமர் 12:5 · கொலோசெயர் 3:15 · I கொரிந்தியர் 12:12 · I கொரிந்தியர் 12:27 · எபேசியர் 4:25 · எபேசியர் 4:16
18மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?
Relatedலேவியராகமம் 7:6 · எபேசியர் 2:11-12 · பிலிப்பியர் 3:3-5 · லேவியராகமம் 3:11 · கலாத்தியர் 6:16 · ரோமர் 1:3
19இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ?
RelatedI கொரிந்தியர் 8:4 · I கொரிந்தியர் 1:28 · உபாகமம் 32:21 · ஏசாயா 40:17 · I கொரிந்தியர் 13:2 · ஏசாயா 41:29
20அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 9:20 · சங்கீதம் 106:37-39 · உபாகமம் 32:16-17 · II கொரிந்தியர் 4:4 · லேவியராகமம் 17:7 · II நாளாகமம் 11:15
21நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.
Relatedமத்தேயு 6:24 · I இராஜாக்கள் 18:21 · II கொரிந்தியர் 6:15-17 · ஏசாயா 65:11 · I கொரிந்தியர் 10:16 · உபாகமம் 32:37-38
22நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?
Relatedஉபாகமம் 32:21 · உபாகமம் 32:16 · எபிரெயர் 10:31 · யோபு 40:9-14 · சங்கீதம் 78:58 · யோசுவா 24:19
23எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.
RelatedI கொரிந்தியர் 6:12 · I கொரிந்தியர் 8:9 · எபேசியர் 4:29 · ரோமர் 14:19-20 · I தெசலோனிக்கேயர் 5:11 · ரோமர் 15:1-2
24ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.
Relatedரோமர் 15:1-2 · பிலிப்பியர் 2:4-5 · I கொரிந்தியர் 10:33 · பிலிப்பியர் 2:21 · I கொரிந்தியர் 9:19-23 · I கொரிந்தியர் 13:5
25கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை.
RelatedI தீமோத்தேயு 4:4 · I கொரிந்தியர் 8:7 · தீத்து 1:15 · ரோமர் 14:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:15 · ரோமர் 13:5
26பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
Relatedசங்கீதம் 24:1 · சங்கீதம் 50:12 · யாத்திராகமம் 19:5 · உபாகமம் 10:14 · யோபு 41:11 · I தீமோத்தேயு 6:17
27அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்.
RelatedI கொரிந்தியர் 10:25 · லூக்கா 10:7-8 · I கொரிந்தியர் 5:9-11 · லூக்கா 19:7 · லூக்கா 5:29-30 · II கொரிந்தியர் 5:11
28ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
RelatedI கொரிந்தியர் 8:10-13 · ரோமர் 14:15 · I கொரிந்தியர் 8:7 · I கொரிந்தியர் 10:26 · மத்தேயு 6:31-32 · எரேமியா 27:5-6
29உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?
RelatedI கொரிந்தியர் 9:19 · ரோமர் 14:15-21 · I கொரிந்தியர் 8:9-13 · II கொரிந்தியர் 8:21 · I கொரிந்தியர் 10:32 · I தெசலோனிக்கேயர் 5:22
30மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்?
31ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
Relatedகொலோசெயர் 3:17 · கொலோசெயர் 3:23 · I பேதுரு 4:11 · உபாகமம் 12:7 · உபாகமம் 12:18 · சகரியா 7:5-6
32நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல;
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 20:28 · I கொரிந்தியர் 10:33 · ரோமர் 14:13 · I கொரிந்தியர் 8:13 · II கொரிந்தியர் 6:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16
33நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.
📖 I கொரிந்தியர்All 16 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS