II கொரிந்தியர் 2
Tamil Bible (BSI 1957) • 17 verses
1நான் துக்கத்துடனே உங்களிடத்தில் மறுபடியும் வராதபடிக்கு எனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டேன்.
RelatedII கொரிந்தியர் 1:23 · II கொரிந்தியர் 13:10 · II கொரிந்தியர் 12:20-21 · II கொரிந்தியர் 2:4 · I கொரிந்தியர் 4:21 · II கொரிந்தியர் 7:5-8
2நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனேயல்லாமல், எவன் என்னைச் சந்தோஷப்படுத்துவான்?
RelatedII கொரிந்தியர் 7:8 · ரோமர் 12:15 · II கொரிந்தியர் 1:14 · I கொரிந்தியர் 12:26 · II கொரிந்தியர் 11:29
3என்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாயிருக்குமென்று, நான் உங்களெல்லாரையும்பற்றி நம்பிக்கையுள்ளவனாயிருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு, அதை உங்களுக்கு எழுதினேன்.
Relatedகலாத்தியர் 5:10 · பிலேமோன் 1:21 · II கொரிந்தியர் 8:22 · II தெசலோனிக்கேயர் 3:4 · II கொரிந்தியர் 7:12 · II கொரிந்தியர் 12:11
4அன்றியும், நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மனயிடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்.
RelatedII கொரிந்தியர் 7:12 · நீதிமொழிகள் 27:5-6 · லேவியராகமம் 19:17-18 · லூக்கா 19:41-44 · பிலிப்பியர் 3:18 · சங்கீதம் 119:136
5துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல, ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான்; நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
RelatedI கொரிந்தியர் 5:12-13 · கலாத்தியர் 5:10 · கலாத்தியர் 4:12 · I கொரிந்தியர் 5:1-5 · நீதிமொழிகள் 17:25
6அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்தத் தண்டனையே போதும்.
7ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல் செய்யவேண்டும்.
Relatedஎபேசியர் 4:32 · கலாத்தியர் 6:1-2 · கொலோசெயர் 3:13 · நீதிமொழிகள் 17:22 · ஏசாயா 28:7 · நீதிமொழிகள் 1:12
8அந்தப்படி, உங்கள் அன்பை அவனுக்குக் காண்பிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
9நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன்.
RelatedII கொரிந்தியர் 10:6 · பிலேமோன் 1:21 · பிலிப்பியர் 2:22 · II கொரிந்தியர் 7:12-15 · யாத்திராகமம் 16:4 · உபாகமம் 8:16
10எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.
11சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
RelatedI பேதுரு 5:8 · எபேசியர் 6:11-12 · II கொரிந்தியர் 11:3 · லூக்கா 22:31 · II கொரிந்தியர் 4:4 · வெளிப்படுத்தின விசேஷம் 12:9-11
12மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 16:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:27 · கொலோசெயர் 4:3 · வெளிப்படுத்தின விசேஷம் 3:7-8 · I கொரிந்தியர் 16:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:1-6
13நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது. ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு, மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன்.
RelatedII கொரிந்தியர் 7:5-6 · II கொரிந்தியர் 12:18 · II கொரிந்தியர் 8:6 · தீத்து 1:4 · II கொரிந்தியர் 8:16 · II தீமோத்தேயு 4:10
14கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
Relatedஎபேசியர் 5:2 · ரோமர் 8:37 · II கொரிந்தியர் 2:15-16 · II கொரிந்தியர் 9:15 · ரோமர் 6:17 · கொலோசெயர் 2:15
15இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.
Relatedஎபேசியர் 5:2 · I கொரிந்தியர் 1:18 · எசேக்கியேல் 20:41 · பிலிப்பியர் 4:18 · ஆதியாகமம் 8:21 · யாத்திராகமம் 29:18
16கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?
RelatedII கொரிந்தியர் 3:5-6 · I பேதுரு 2:7-8 · யோவான் 9:39 · லூக்கா 2:34 · I கொரிந்தியர் 15:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:45-47
17அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.
📖 II கொரிந்தியர்All 13 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS