II தெசலோனிக்கேயர் 2
Tamil Bible (BSI 1957) • 17 verses
1அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
RelatedI தெசலோனிக்கேயர் 4:14-17 · மாற்கு 13:27 · மத்தேயு 24:31 · I தெசலோனிக்கேயர் 2:19 · II தீமோத்தேயு 4:1 · I தெசலோனிக்கேயர் 3:13
2ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
RelatedI யோவான் 4:1-2 · மாற்கு 13:7 · மத்தேயு 24:4-6 · II தெசலோனிக்கேயர் 3:17 · II பேதுரு 3:4-8 · லூக்கா 21:9
3எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
Relatedமத்தேயு 24:4-6 · I யோவான் 2:18 · எபேசியர் 5:6 · I தீமோத்தேயு 4:1-3 · II தெசலோனிக்கேயர் 2:8-10 · தானியேல் 7:25
4அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
Relatedதானியேல் 7:25 · எசேக்கியேல் 28:2 · ஏசாயா 14:13-14 · வெளிப்படுத்தின விசேஷம் 13:6-7 · எசேக்கியேல் 28:6 · தானியேல் 11:45
5நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா?
RelatedII பேதுரு 1:15 · கலாத்தியர் 5:21 · யோவான் 16:4 · மத்தேயு 16:9 · லூக்கா 24:6-7 · I தெசலோனிக்கேயர் 2:11
6அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.
7அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.
RelatedI யோவான் 4:3 · வெளிப்படுத்தின விசேஷம் 17:7 · II தீமோத்தேயு 2:17-18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:29 · I யோவான் 2:18 · வெளிப்படுத்தின விசேஷம் 17:5
8நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 19:20-21 · II தெசலோனிக்கேயர் 2:3 · ஏசாயா 11:4 · வெளிப்படுத்தின விசேஷம் 20:10 · வெளிப்படுத்தின விசேஷம் 19:15 · தானியேல் 7:10-11
9அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,
Relatedமத்தேயு 24:24 · வெளிப்படுத்தின விசேஷம் 19:20 · எபேசியர் 2:2 · II கொரிந்தியர் 11:3 · யோவான் 4:48 · மாற்கு 13:22
10கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.
RelatedI கொரிந்தியர் 1:18 · நீதிமொழிகள் 1:7 · II கொரிந்தியர் 4:2-3 · ரோமர் 16:18 · யோவான் 8:45-47 · II பேதுரு 2:12
11ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
Relatedரோமர் 1:28 · யோவான் 12:39-43 · I தீமோத்தேயு 4:1 · மத்தேயு 24:11 · சங்கீதம் 81:11-12 · எசேக்கியேல் 21:29
12அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
13கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
RelatedII தீமோத்தேயு 1:9 · எபேசியர் 1:4-5 · I தெசலோனிக்கேயர் 1:4 · I தெசலோனிக்கேயர் 5:9 · ரோமர் 9:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:48
14நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்.
RelatedI தெசலோனிக்கேயர் 2:12 · I பேதுரு 5:10 · ரோமர் 8:17 · I தெசலோனிக்கேயர் 1:5 · ரோமர் 2:16 · I பேதுரு 1:4-5
15ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.
RelatedI கொரிந்தியர் 11:2 · II தெசலோனிக்கேயர் 3:6 · I கொரிந்தியர் 16:13 · II தெசலோனிக்கேயர் 2:2 · பிலிப்பியர் 4:1 · ரோமர் 16:17
16நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும்,
Relatedயோவான் 3:16 · ரோமர் 5:2-5 · I பேதுரு 1:3-8 · தீத்து 3:4-7 · I தெசலோனிக்கேயர் 3:11 · தீத்து 1:2
17உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.
📖 II தெசலோனிக்கேயர்All 3 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS