II கொரிந்தியர் 11
Tamil Bible (BSI 1957) • 33 verses
1என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே.
RelatedI கொரிந்தியர் 1:21 · II கொரிந்தியர் 11:4 · II கொரிந்தியர் 11:21 · II கொரிந்தியர் 11:19 · II கொரிந்தியர் 5:13 · II கொரிந்தியர் 11:16-17
2நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
Relatedஓசியா 2:19-20 · எபேசியர் 5:26-27 · ஏசாயா 54:5 · கொலோசெயர் 1:28 · லேவியராகமம் 21:13-15 · யோவான் 3:29
3ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
Relatedகொலோசெயர் 2:8 · கலாத்தியர் 1:6 · எபேசியர் 4:14 · I யோவான் 4:1 · கொலோசெயர் 2:4 · எபிரெயர் 13:9
4எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
Relatedகலாத்தியர் 1:6-8 · I கொரிந்தியர் 3:11 · I தீமோத்தேயு 2:5 · எபேசியர் 4:4-5 · I கொரிந்தியர் 12:4-11 · கலாத்தியர் 3:2
5மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.
6நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்குமுன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே.
Relatedஎபேசியர் 3:4 · I கொரிந்தியர் 1:17 · I கொரிந்தியர் 1:21 · II கொரிந்தியர் 4:2 · I கொரிந்தியர் 2:13 · II கொரிந்தியர் 12:12
7நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?
RelatedII கொரிந்தியர் 12:13 · II கொரிந்தியர் 10:1 · I கொரிந்தியர் 9:6 · I தெசலோனிக்கேயர் 2:9 · I கொரிந்தியர் 4:10-12 · II தெசலோனிக்கேயர் 3:8
8உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.
9நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.
RelatedII தெசலோனிக்கேயர் 3:8-9 · I தெசலோனிக்கேயர் 2:6 · I தெசலோனிக்கேயர் 2:9 · பிலிப்பியர் 4:10-16 · II கொரிந்தியர் 8:1-2 · நெகேமியா 5:15
10அகாயா நாட்டின் திசைகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லையென்று என்னிலுள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன்.
Relatedரோமர் 9:1 · ரோமர் 1:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:12 · II கொரிந்தியர் 1:23 · ரோமர் 16:5 · II கொரிந்தியர் 11:31
11இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களைச் சிநேகியாதபடியினாலேயோ? தேவன் அறிவார்.
RelatedII கொரிந்தியர் 12:15 · II கொரிந்தியர் 7:3 · II கொரிந்தியர் 6:11-12 · II கொரிந்தியர் 11:31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:8 · எபிரெயர் 4:13
12மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்.
RelatedI கொரிந்தியர் 9:12 · II கொரிந்தியர் 11:9 · I தீமோத்தேயு 5:14 · II கொரிந்தியர் 11:18 · II கொரிந்தியர் 5:12 · II கொரிந்தியர் 10:17
13அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.
Relatedகலாத்தியர் 1:7 · வெளிப்படுத்தின விசேஷம் 2:2 · I யோவான் 4:1 · பிலிப்பியர் 3:2 · கலாத்தியர் 2:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:30
14அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.
Relatedகலாத்தியர் 1:8 · II கொரிந்தியர் 2:11 · II கொரிந்தியர் 11:3 · வெளிப்படுத்தின விசேஷம் 12:9 · மத்தேயு 4:1-10 · ஆதியாகமம் 3:1-5
15ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.
Relatedபிலிப்பியர் 3:19 · வெளிப்படுத்தின விசேஷம் 9:11 · II கொரிந்தியர் 3:9 · யூதா 1:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:10 · II பேதுரு 2:3
16பின்னும் நான் சொல்லுகிறேன்; ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
RelatedII கொரிந்தியர் 11:1 · II கொரிந்தியர் 12:6 · II கொரிந்தியர் 11:21-23 · II கொரிந்தியர் 11:19 · II கொரிந்தியர் 12:11
17இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன்.
RelatedI கொரிந்தியர் 7:12 · பிலிப்பியர் 3:3-6 · II கொரிந்தியர் 9:4 · I கொரிந்தியர் 7:25 · II கொரிந்தியர் 11:18-27 · I கொரிந்தியர் 7:6
18அநேகர் மாம்சத்திற்கேற்றபடி மேன்மைபாராட்டிக்கொள்ளுகையில், நானும் மேன்மைபாராட்டுவேன்.
RelatedII கொரிந்தியர் 11:12 · II கொரிந்தியர் 10:12-18 · II கொரிந்தியர் 11:21-23 · II கொரிந்தியர் 12:5-6 · பிலிப்பியர் 3:3-4 · II கொரிந்தியர் 12:11
19நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய்ச் சகித்திருக்கிறீர்களே.
20ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே.
21நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப்பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாயிருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாயிருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாய்ப் பேசுகிறேன்.
RelatedII கொரிந்தியர் 10:10 · II கொரிந்தியர் 10:1-2 · II கொரிந்தியர் 11:17 · II கொரிந்தியர் 13:10 · பிலிப்பியர் 3:3-6 · II கொரிந்தியர் 11:22-27
22அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிரகாமின் சந்ததியான்.
Relatedபிலிப்பியர் 3:5 · ரோமர் 11:1 · ரோமர் 9:4 · யோவான் 8:33-39 · யாத்திராகமம் 9:1 · யாத்திராகமம் 10:3
23அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.
RelatedII கொரிந்தியர் 6:4-5 · கொலோசெயர் 1:24 · II கொரிந்தியர் 1:9-10 · II கொரிந்தியர் 6:9 · I கொரிந்தியர் 15:10 · II கொரிந்தியர் 11:24-25
24யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன்;
25மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 14:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:37 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1-44 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:33 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:22-23 · எபிரெயர் 11:37
26அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 14:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:50 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:5 · II கொரிந்தியர் 1:8-10
27பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.
RelatedII கொரிந்தியர் 6:5 · பிலிப்பியர் 4:12 · I தெசலோனிக்கேயர் 2:9 · II தெசலோனிக்கேயர் 3:8 · I கொரிந்தியர் 4:11-12 · யாக்கோபு 2:15-16
28இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.
RelatedI கொரிந்தியர் 7:17 · ரோமர் 15:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:18-35 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:23 · ரோமர் 11:13 · கொலோசெயர் 2:1
29ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?
RelatedI கொரிந்தியர் 8:13 · I கொரிந்தியர் 9:22 · கலாத்தியர் 4:8-20 · I கொரிந்தியர் 15:36 · வெளிப்படுத்தின விசேஷம் 3:15-18 · எண்ணாகமம் 25:6-11
30நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்.
RelatedII கொரிந்தியர் 12:5-11 · எரேமியா 9:23-24 · I கொரிந்தியர் 2:3 · நீதிமொழிகள் 25:27 · II கொரிந்தியர் 11:16-18 · நீதிமொழிகள் 27:2
31என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.
32தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக்காத்தான்;
33அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில் வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.
📖 II கொரிந்தியர்All 13 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS