எபேசியர் 5
Tamil Bible (BSI 1957) • 33 verses
1ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,
RelatedI யோவான் 4:11 · I பேதுரு 1:15-16 · எபேசியர் 4:32 · மத்தேயு 5:48 · லூக்கா 6:35-36 · கொலோசெயர் 3:12
2கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
Relatedயோவான் 13:34 · கலாத்தியர் 2:20 · கொலோசெயர் 3:14 · II கொரிந்தியர் 2:15 · மத்தேயு 20:28 · I கொரிந்தியர் 16:14
3மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.
Relatedகொலோசெயர் 3:5 · எபேசியர் 5:5 · கலாத்தியர் 5:19-21 · I கொரிந்தியர் 6:18 · I தெசலோனிக்கேயர் 4:7 · I தெசலோனிக்கேயர் 4:3
4அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
Relatedகொலோசெயர் 3:8 · எபேசியர் 4:29 · I தெசலோனிக்கேயர் 5:18 · நீதிமொழிகள் 15:2 · யாக்கோபு 3:4-8 · மத்தேயு 12:34-37
5விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
Relatedகலாத்தியர் 5:21 · I கொரிந்தியர் 6:9-10 · வெளிப்படுத்தின விசேஷம் 22:15 · கொலோசெயர் 3:5 · எபேசியர் 5:3 · வெளிப்படுத்தின விசேஷம் 21:8
6இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
Relatedரோமர் 1:18 · மத்தேயு 24:4 · கொலோசெயர் 2:8 · I யோவான் 4:1 · கொலோசெயர் 3:6 · II தெசலோனிக்கேயர் 2:10-12
7அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 18:4 · I தீமோத்தேயு 5:22 · எபேசியர் 5:11 · எண்ணாகமம் 16:26 · நீதிமொழிகள் 1:10-17 · சங்கீதம் 50:18
8முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.
Relatedயோவான் 8:12 · I யோவான் 1:7 · யோவான் 12:46 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18 · கொலோசெயர் 1:13 · I பேதுரு 2:9-11
9ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.
Relatedகலாத்தியர் 5:22-23 · III யோவான் 1:11 · I யோவான் 3:9-10 · எபேசியர் 6:14 · ரோமர் 15:14 · I தீமோத்தேயு 6:11
10கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
Relatedரோமர் 12:1-2 · சங்கீதம் 19:14 · எபிரெயர் 12:28 · I பேதுரு 2:5 · I பேதுரு 2:20 · I தெசலோனிக்கேயர் 5:21
11கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
Relatedரோமர் 13:12 · I தீமோத்தேயு 5:20 · II தெசலோனிக்கேயர் 3:6 · II யோவான் 1:10-11 · ரோமர் 16:17 · ரோமர் 6:21
12அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.
Relatedஎபேசியர் 5:3 · ரோமர் 2:16 · எரேமியா 23:24 · பிரசங்கி 12:14 · II சாமுவேல் 12:12 · ரோமர் 1:24-27
13அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது.
14ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.
Relatedஏசாயா 60:1 · ரோமர் 13:11-12 · ஏசாயா 26:19 · I தெசலோனிக்கேயர் 5:6 · ஏசாயா 52:1 · II கொரிந்தியர் 4:6
15ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,
Relatedகொலோசெயர் 4:5 · யாக்கோபு 3:13 · பிலிப்பியர் 1:27 · I கொரிந்தியர் 14:20 · நீதிமொழிகள் 14:8 · I தீமோத்தேயு 6:9
16நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
17ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
Relatedரோமர் 12:2 · I தெசலோனிக்கேயர் 5:18 · கொலோசெயர் 1:9 · எபேசியர் 5:15 · எரேமியா 4:22 · I பேதுரு 4:2
18துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;
Relatedலூக்கா 1:15 · நீதிமொழிகள் 20:1 · ரோமர் 13:13 · கலாத்தியர் 5:21-25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:24 · ஏசாயா 5:22
19சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
Relatedகொலோசெயர் 3:16 · சங்கீதம் 95:2 · I கொரிந்தியர் 14:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25 · சங்கீதம் 147:7 · யாக்கோபு 5:13
20நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
Relatedகொலோசெயர் 3:17 · I தெசலோனிக்கேயர் 5:18 · எபிரெயர் 13:15 · பிலிப்பியர் 4:6 · எபேசியர் 5:4 · II தெசலோனிக்கேயர் 1:3
21தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
Relatedபிலிப்பியர் 2:3 · எபேசியர் 5:24 · எபேசியர் 5:22 · எபிரெயர் 13:17 · I பேதுரு 5:5 · I தீமோத்தேயு 3:4
22மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள்.
Relatedகொலோசெயர் 3:18-4:1 · I பேதுரு 3:1-6 · தீத்து 2:5 · ஆதியாகமம் 3:16 · எஸ்தர் 1:20 · எபேசியர் 5:22-6:9
23கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
RelatedI கொரிந்தியர் 11:3-10 · கொலோசெயர் 1:18 · எபேசியர் 5:25-26 · எபேசியர் 1:22-23 · எபேசியர் 4:15 · I தெசலோனிக்கேயர் 1:10
24ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.
Relatedஎபேசியர் 5:33 · கொலோசெயர் 3:20 · தீத்து 2:7 · தீத்து 2:9 · கொலோசெயர் 3:22 · யாத்திராகமம் 29:35
25புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
RelatedI பேதுரு 3:7 · கொலோசெயர் 3:19 · எபேசியர் 5:28 · ஆதியாகமம் 2:24 · எபேசியர் 5:33 · எபேசியர் 5:2
26தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
Relatedஎபிரெயர் 10:22 · யோவான் 15:3 · எசேக்கியேல் 36:25 · யோவான் 3:5 · யோவான் 17:17-19 · I கொரிந்தியர் 6:11
27கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
Relatedகொலோசெயர் 1:22 · எபிரெயர் 9:14 · I பேதுரு 1:19 · II கொரிந்தியர் 11:2 · எபேசியர் 1:4 · உன்னதப்பாட்டு 4:7
28அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.
29தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.
Relatedஎபேசியர் 5:31 · எசேக்கியேல் 34:14-15 · பிரசங்கி 4:5 · யோவான் 6:50-58 · நீதிமொழிகள் 11:17 · ஏசாயா 40:11
30நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
RelatedI கொரிந்தியர் 6:15 · I கொரிந்தியர் 12:12-27 · ரோமர் 12:5 · ஆதியாகமம் 2:23 · எபேசியர் 1:23 · கொலோசெயர் 2:19
31இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
32இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 21:2 · II கொரிந்தியர் 11:2 · ஏசாயா 54:5 · வெளிப்படுத்தின விசேஷம் 19:7-8 · கொலோசெயர் 2:2 · ஏசாயா 62:4-5
33எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.
RelatedI பேதுரு 3:2-7 · எஸ்தர் 1:20 · எபேசியர் 5:22 · எபேசியர் 5:25 · கொலோசெயர் 3:19 · எபேசியர் 5:28-29
📖 எபேசியர்All 6 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS