I கொரிந்தியர் 6
Tamil Bible (BSI 1957) • 20 verses
1உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?
Relatedமத்தேயு 18:15-17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:38 · I கொரிந்தியர் 14:33 · I கொரிந்தியர் 16:1 · I கொரிந்தியர் 6:6-7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:14-15
2பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?
Relatedமத்தேயு 19:28 · தானியேல் 7:22 · வெளிப்படுத்தின விசேஷம் 20:4 · லூக்கா 22:30 · வெளிப்படுத்தின விசேஷம் 3:21 · வெளிப்படுத்தின விசேஷம் 2:26-27
3தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி?
Relatedயூதா 1:6 · மத்தேயு 25:41 · I கொரிந்தியர் 6:4 · லூக்கா 8:14 · லூக்கா 21:34 · II தீமோத்தேயு 4:10
4இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள்.
5உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா?
RelatedI கொரிந்தியர் 15:34 · I கொரிந்தியர் 4:14 · யாக்கோபு 3:13-18 · I கொரிந்தியர் 11:14 · I கொரிந்தியர் 4:10 · நீதிமொழிகள் 14:8
6சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான்.
Relatedபிலிப்பியர் 2:14-15 · I யோவான் 3:11-15 · I யோவான் 2:9-11 · II கொரிந்தியர் 6:14 · ஆதியாகமம் 13:7-9 · I கொரிந்தியர் 6:7
7நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?
Relatedரோமர் 12:17-19 · நீதிமொழிகள் 20:22 · I பேதுரு 3:9 · I பேதுரு 2:19-23 · மத்தேயு 5:39-41 · யாக்கோபு 4:1-3
8நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே.
RelatedI தெசலோனிக்கேயர் 4:6 · கொலோசெயர் 3:25 · லேவியராகமம் 19:13 · மீகா 2:2 · மல்கியா 3:5 · மாற்கு 10:19
9அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
RelatedI தீமோத்தேயு 1:9-10 · கலாத்தியர் 5:19-21 · எபேசியர் 5:4-5 · லேவியராகமம் 20:13 · லேவியராகமம் 18:22 · வெளிப்படுத்தின விசேஷம் 21:8
10திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
RelatedI கொரிந்தியர் 5:11 · கலாத்தியர் 5:21 · எபேசியர் 4:28 · எசேக்கியேல் 22:29 · எசேக்கியேல் 22:27 · I பேதுரு 4:15
11உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
RelatedI கொரிந்தியர் 1:30 · கொலோசெயர் 3:5-7 · ரோமர் 6:17-19 · I கொரிந்தியர் 1:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:16 · I பேதுரு 1:2
12எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.
RelatedI கொரிந்தியர் 10:23-33 · I கொரிந்தியர் 9:27 · எபிரெயர் 12:15-16 · ரோமர் 14:14-23 · I கொரிந்தியர் 8:7-13 · II தெசலோனிக்கேயர் 3:9
13வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்.
RelatedI கொரிந்தியர் 6:19 · I கொரிந்தியர் 3:16 · ரோமர் 6:12 · I கொரிந்தியர் 6:15 · I தெசலோனிக்கேயர் 4:3-7 · மத்தேயு 15:17
14தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார்.
RelatedII கொரிந்தியர் 4:14 · ரோமர் 8:11 · எபேசியர் 1:19-20 · பிலிப்பியர் 3:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:24 · யோவான் 6:39-40
15உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே.
Relatedஎபேசியர் 5:30 · ரோமர் 12:5 · எபேசியர் 4:15-16 · கொலோசெயர் 2:19 · எபேசியர் 4:12 · I கொரிந்தியர் 12:27
16வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.
Relatedஆதியாகமம் 2:24 · எபேசியர் 5:31 · மாற்கு 10:8 · மத்தேயு 19:5-6 · மத்தேயு 21:31-32 · ஆதியாகமம் 34:31
17அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.
Relatedயோவான் 17:21-23 · கலாத்தியர் 2:20 · I கொரிந்தியர் 12:13 · யோவான் 3:6 · எபேசியர் 4:3-4 · எபேசியர் 5:30
18வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ்செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
RelatedI பேதுரு 2:11 · I தெசலோனிக்கேயர் 4:3 · கொலோசெயர் 3:5 · ரோமர் 6:12-13 · II தீமோத்தேயு 2:22 · எபிரெயர் 13:4
19உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
RelatedI கொரிந்தியர் 3:16 · II கொரிந்தியர் 6:16 · I பேதுரு 2:5 · எபேசியர் 2:21-22 · I கொரிந்தியர் 6:15-16 · சங்கீதம் 100:3
20கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
RelatedI கொரிந்தியர் 7:23 · ரோமர் 12:1 · I பேதுரு 2:9 · I பேதுரு 1:18 · எபிரெயர் 9:12 · பிலிப்பியர் 1:20
📖 I கொரிந்தியர்All 16 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS