கலாத்தியர் 3
Tamil Bible (BSI 1957) • 29 verses
1புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.
Relatedகலாத்தியர் 5:7-8 · II கொரிந்தியர் 11:3 · வெளிப்படுத்தின விசேஷம் 2:20 · கலாத்தியர் 1:6 · I பேதுரு 4:17 · கலாத்தியர் 3:3
2ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?
Relatedரோமர் 10:16-17 · கலாத்தியர் 3:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:8 · கலாத்தியர் 3:5 · எபேசியர் 1:13-14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:15
3ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?
Relatedகலாத்தியர் 5:4-8 · கலாத்தியர் 4:7-10 · எபிரெயர் 7:16-19 · எபிரெயர் 9:9-10 · கலாத்தியர் 6:12-14 · எபிரெயர் 9:2
4இத்தனை பாடுகளையும் வீணாய்ப்பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே.
RelatedII யோவான் 1:8 · I கொரிந்தியர் 15:2 · எபிரெயர் 10:32-39 · எசேக்கியேல் 18:24 · எபிரெயர் 6:4-6 · II பேதுரு 2:20-22
5அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?
Relatedகலாத்தியர் 3:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:9-10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:11-12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:3 · II கொரிந்தியர் 13:3 · I கொரிந்தியர் 1:4-5
6அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
7ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
Relatedகலாத்தியர் 3:9 · ரோமர் 9:7-8 · கலாத்தியர் 3:26-29 · சங்கீதம் 100:3 · ரோமர் 4:24 · யோவான் 8:39
8மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
Relatedஆதியாகமம் 12:3 · ஆதியாகமம் 22:18 · ஆதியாகமம் 28:14 · ஆதியாகமம் 18:18 · ஆதியாகமம் 26:4 · எபிரெயர் 4:2
9அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
10நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.
Relatedஉபாகமம் 27:26 · ரோமர் 8:7 · ரோமர் 3:19-20 · உபாகமம் 11:26-28 · யாக்கோபு 2:9-11 · எரேமியா 11:3
11நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
Relatedஆபகூக் 2:4 · ரோமர் 1:17 · எபிரெயர் 10:38 · கலாத்தியர் 2:16 · பிரசங்கி 7:20 · சங்கீதம் 130:3-4
12நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.
13மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
RelatedI பேதுரு 2:24 · உபாகமம் 21:23 · எபிரெயர் 9:12 · எபிரெயர் 9:15 · I பேதுரு 1:18-21 · எபிரெயர் 10:4-10
14ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.
Relatedகலாத்தியர் 3:28-29 · I கொரிந்தியர் 12:13 · எபேசியர் 2:18 · எசேக்கியேல் 36:26-27 · கலாத்தியர் 3:2 · எசேக்கியேல் 11:19
15சகோதரரே, மனுஷர் முறைமையின்படி சொல்லுகிறேன்; மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதுமில்லை.
16ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள்பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.
Relatedஆதியாகமம் 17:7-8 · ரோமர் 4:13 · லூக்கா 1:55 · ஆதியாகமம் 22:17-18 · கலாத்தியர் 3:27-29 · ரோமர் 4:16
17ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.
Relatedஆதியாகமம் 15:13 · யாத்திராகமம் 12:40-41 · ரோமர் 4:13-14 · எபிரெயர் 11:39-40 · எபிரெயர் 6:13-18 · II கொரிந்தியர் 1:20
18அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.
Relatedரோமர் 4:13-16 · எபிரெயர் 6:12-15 · கலாத்தியர் 2:21 · சங்கீதம் 105:42 · லூக்கா 1:54-55 · சங்கீதம் 105:6-12
19அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 7:53 · ரோமர் 7:7-13 · எபிரெயர் 2:2 · கலாத்தியர் 3:16 · ரோமர் 5:20-21 · I தீமோத்தேயு 1:8-9
20மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.
21அப்படியானால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.
22அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.
Relatedரோமர் 11:32 · எபிரெயர் 9:15 · யோவான் 11:25-26 · கலாத்தியர் 3:23 · I யோவான் 2:25 · யோவான் 3:36
23ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்.
Relatedகலாத்தியர் 5:18 · கலாத்தியர் 3:24-25 · கலாத்தியர் 3:19 · ரோமர் 6:14-15 · ரோமர் 11:32 · ரோமர் 3:19
24இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
Relatedரோமர் 10:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:38-39 · எபிரெயர் 10:1-14 · ரோமர் 7:24-25 · மத்தேயு 5:17-18 · கலாத்தியர் 2:16
25விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.
Relatedரோமர் 6:14 · ரோமர் 7:4 · எபிரெயர் 10:15-18 · எபிரெயர் 7:11-19 · எபிரெயர் 8:3-13 · கலாத்தியர் 4:1-6
26நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
Relatedஎபேசியர் 1:5 · II கொரிந்தியர் 6:18 · யோவான் 1:12-13 · கலாத்தியர் 4:5-6 · I யோவான் 3:1-2 · ரோமர் 8:14-17
27ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
Relatedரோமர் 13:14 · I கொரிந்தியர் 12:13 · ரோமர் 6:3-4 · I பேதுரு 3:21 · எபேசியர் 4:24 · கொலோசெயர் 3:10
28யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
RelatedI கொரிந்தியர் 12:12-13 · கொலோசெயர் 3:11 · ரோமர் 3:29-30 · கலாத்தியர் 5:6 · ரோமர் 10:12-15 · யோவான் 10:16
29நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.
Relatedஎபேசியர் 3:6 · ரோமர் 9:7-8 · கலாத்தியர் 3:7 · ரோமர் 8:17 · ரோமர் 4:16-21 · கலாத்தியர் 4:22-31
📖 கலாத்தியர்All 6 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS