கலாத்தியர் 6
Tamil Bible (BSI 1957) • 18 verses
1சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
Relatedரோமர் 15:1 · II தீமோத்தேயு 2:25 · II தெசலோனிக்கேயர் 3:15 · யாக்கோபு 5:19-20 · யூதா 1:22-23 · I யோவான் 5:16
2ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
Relatedரோமர் 15:1 · I தெசலோனிக்கேயர் 5:14 · யோவான் 13:34 · I யோவான் 4:21 · யாக்கோபு 2:8 · யோவான் 15:12
3ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.
Relatedநீதிமொழிகள் 26:12 · I கொரிந்தியர் 8:2 · I கொரிந்தியர் 3:18 · ரோமர் 12:3 · II கொரிந்தியர் 3:5 · யாக்கோபு 1:22
4அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.
RelatedII கொரிந்தியர் 13:5 · சங்கீதம் 26:2 · I கொரிந்தியர் 11:28 · II கொரிந்தியர் 1:12 · II கொரிந்தியர் 11:12-13 · I யோவான் 3:19-22
5அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.
Relatedஎரேமியா 32:19 · ரோமர் 14:10-12 · II கொரிந்தியர் 5:10-11 · ரோமர் 2:6-9 · வெளிப்படுத்தின விசேஷம் 2:23 · மத்தேயு 16:27
6மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்.
7மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
RelatedII கொரிந்தியர் 9:6 · ஓசியா 10:12 · யோபு 4:8 · ரோமர் 2:6-10 · I கொரிந்தியர் 15:33 · நீதிமொழிகள் 11:18
8தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.
9நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
RelatedI கொரிந்தியர் 15:58 · II தெசலோனிக்கேயர் 3:13 · ஏசாயா 40:30-31 · எபிரெயர் 10:35-39 · எபிரெயர் 12:3 · I பேதுரு 2:15
10ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.
Relatedஎபிரெயர் 13:16 · நீதிமொழிகள் 3:27 · I தெசலோனிக்கேயர் 5:15 · தீத்து 3:8 · மத்தேயு 25:40 · லூக்கா 6:35
11என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்.
12மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள்.
Relatedகலாத்தியர் 5:11 · II கொரிந்தியர் 11:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:1 · கொலோசெயர் 2:23 · லூக்கா 16:15 · கலாத்தியர் 2:3
13விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள்.
Relatedபிலிப்பியர் 3:3 · I கொரிந்தியர் 5:6 · II பேதுரு 2:19 · ரோமர் 2:17-25 · மத்தேயு 23:3 · மத்தேயு 23:15
14நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.
Relatedரோமர் 6:6 · கலாத்தியர் 2:20 · எரேமியா 9:23-24 · I கொரிந்தியர் 2:2 · பிலிப்பியர் 3:3 · ரோமர் 1:16
15கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்.
RelatedII கொரிந்தியர் 5:17 · கொலோசெயர் 3:10-11 · கலாத்தியர் 5:6 · எபேசியர் 2:10 · எபேசியர் 4:24 · I கொரிந்தியர் 7:19
16இந்தப் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக.
Relatedகலாத்தியர் 3:29 · ரோமர் 9:6-8 · பிலிப்பியர் 3:3 · கலாத்தியர் 3:7-9 · I பேதுரு 2:5-9 · ரோமர் 4:12
17இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என்சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்.
RelatedII கொரிந்தியர் 1:5 · கொலோசெயர் 1:24 · II கொரிந்தியர் 11:23-25 · II கொரிந்தியர் 4:10 · கலாத்தியர் 5:11-12 · யோசுவா 7:25
18சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.
📖 கலாத்தியர்All 6 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS