ஆதியாகமம் 2
Tamil Bible (BSI 1957) • 25 verses
1இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.
Relatedயாத்திராகமம் 31:17 · யாத்திராகமம் 20:11 · சங்கீதம் 33:6 · ஏசாயா 45:18 · ஆதியாகமம் 1:1 · ஏசாயா 42:5
2தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
Relatedஎபிரெயர் 4:4 · யாத்திராகமம் 31:17 · உபாகமம் 5:14 · யாத்திராகமம் 20:8-11 · யாத்திராகமம் 23:12 · யோவான் 5:17
3தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
Relatedலேவியராகமம் 23:3 · மாற்கு 2:27 · எசேக்கியேல் 20:12 · யாத்திராகமம் 31:13-17 · லூக்கா 23:56 · யாத்திராகமம் 34:21
4தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.
Relatedஆதியாகமம் 5:1 · வெளிப்படுத்தின விசேஷம் 1:8 · யாத்திராகமம் 15:3 · ஆதியாகமம் 1:4 · ஆதியாகமம் 36:1 · ஆதியாகமம் 1:31
5நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.
6அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
7தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
Relatedபிரசங்கி 12:7 · யோபு 33:4 · I கொரிந்தியர் 15:45 · ஏசாயா 64:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:25 · I கொரிந்தியர் 15:47
8தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
Relatedஆதியாகமம் 3:24 · எசேக்கியேல் 28:13 · ஆதியாகமம் 13:10 · யோவேல் 2:3 · ஆதியாகமம் 4:16 · எசேக்கியேல் 31:8-9
9தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.
Relatedஆதியாகமம் 3:22 · வெளிப்படுத்தின விசேஷம் 2:7 · வெளிப்படுத்தின விசேஷம் 22:14 · வெளிப்படுத்தின விசேஷம் 22:2 · எசேக்கியேல் 47:12 · நீதிமொழிகள் 11:30
10தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
11முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
12அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு.
13இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
14மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.
Relatedதானியேல் 10:4 · ஆதியாகமம் 15:18 · ஆதியாகமம் 25:18 · ஆதியாகமம் 10:22 · ஆதியாகமம் 10:11 · உபாகமம் 1:7
15தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
16தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
17ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
Relatedரோமர் 6:23 · யாக்கோபு 1:15 · ஆதியாகமம் 3:19 · I கொரிந்தியர் 15:56 · I கொரிந்தியர் 15:22 · கலாத்தியர் 3:10
18பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
Relatedபிரசங்கி 4:9-12 · நீதிமொழிகள் 18:22 · I கொரிந்தியர் 11:7-12 · I பேதுரு 3:7 · ரூத் 3:1 · I தீமோத்தேயு 2:11-13
19தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.
Relatedசங்கீதம் 8:4-8 · ஆதியாகமம் 1:28 · ஆதியாகமம் 9:2 · ஆதியாகமம் 1:20-26 · ஆதியாகமம் 6:20 · ஆதியாகமம் 2:22-23
20அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
Relatedஆதியாகமம் 2:18
21அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
Relatedஆதியாகமம் 15:12 · யோபு 4:13 · I சாமுவேல் 26:12 · யோபு 33:15 · தானியேல் 8:18 · நீதிமொழிகள் 19:15
22தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
RelatedI கொரிந்தியர் 11:8-9 · I தீமோத்தேயு 2:13 · எபிரெயர் 13:4 · நீதிமொழிகள் 18:22 · நீதிமொழிகள் 19:14 · ஆதியாகமம் 2:19
23அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
Relatedஎபேசியர் 5:28-30 · I கொரிந்தியர் 11:8-9 · II சாமுவேல் 5:1 · நியாயாதிபதிகள் 9:2 · ஆதியாகமம் 29:14 · II சாமுவேல் 19:13
24இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
Relatedமத்தேயு 19:3-9 · எபேசியர் 5:28-31 · மாற்கு 10:6-12 · ரோமர் 7:2 · I பேதுரு 3:1-7 · I கொரிந்தியர் 7:2-4
25ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
📖 ஆதியாகமம்All 50 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS