நீதிமொழிகள் 21
Tamil Bible (BSI 1957) • 31 verses
1ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.
Relatedநீதிமொழிகள் 16:9 · எஸ்றா 6:22 · நீதிமொழிகள் 20:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:10 · நீதிமொழிகள் 16:1 · எஸ்றா 7:27-28
2மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.
Relatedநீதிமொழிகள் 16:2 · லூக்கா 16:15 · நீதிமொழிகள் 16:25 · எரேமியா 17:10 · நீதிமொழிகள் 30:12 · I சாமுவேல் 16:7
3பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.
4மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.
Relatedநீதிமொழிகள் 6:17 · I பேதுரு 5:5 · லூக்கா 18:14 · நீதிமொழிகள் 8:13 · ஏசாயா 2:17 · நீதிமொழிகள் 15:8
5ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
Relatedநீதிமொழிகள் 13:4 · நீதிமொழிகள் 10:4 · எபேசியர் 4:28 · நீதிமொழிகள் 27:23-27 · I தெசலோனிக்கேயர் 4:11-12 · நீதிமொழிகள் 14:29
6பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும்.
Relatedநீதிமொழிகள் 13:11 · நீதிமொழிகள் 10:2 · எரேமியா 17:11 · நீதிமொழிகள் 20:21 · நீதிமொழிகள் 8:36 · I தீமோத்தேயு 6:9-10
7துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள்.
Relatedநீதிமொழிகள் 21:21 · நீதிமொழிகள் 22:22-23 · சங்கீதம் 7:16 · எபேசியர் 5:6 · சகரியா 5:3-4 · மீகா 3:9-12
8குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன்.
Relatedசங்கீதம் 14:2-3 · I யோவான் 2:29 · I கொரிந்தியர் 3:3 · தானியேல் 12:10 · I யோவான் 3:3 · நீதிமொழிகள் 2:15
9சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
Relatedநீதிமொழிகள் 21:19 · நீதிமொழிகள் 19:13 · நீதிமொழிகள் 25:24 · நீதிமொழிகள் 27:15-16 · நீதிமொழிகள் 12:4 · நீதிமொழிகள் 17:1
10துன்மார்க்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங்கிடையாது.
RelatedI யோவான் 2:16 · நீதிமொழிகள் 3:29 · மீகா 3:2-3 · சங்கீதம் 36:4 · மாற்கு 7:21-22 · I கொரிந்தியர் 10:6
11பரியாசக்காரனை தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.
Relatedநீதிமொழிகள் 19:25 · நீதிமொழிகள் 18:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:5 · நீதிமொழிகள் 9:9 · உபாகமம் 21:21 · நீதிமொழிகள் 18:1
12நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.
Relatedசங்கீதம் 37:35-36 · நீதிமொழிகள் 14:11 · சங்கீதம் 107:43 · நீதிமொழிகள் 14:32 · II பேதுரு 3:6-7 · யோபு 5:3
13ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
Relatedநீதிமொழிகள் 1:28 · நீதிமொழிகள் 28:27 · மத்தேயு 6:14 · யாக்கோபு 2:13-16 · எரேமியா 34:16-17 · மத்தேயு 7:2
14அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும்.
Relatedநீதிமொழிகள் 19:6 · நீதிமொழிகள் 18:16 · நீதிமொழிகள் 17:8 · I சாமுவேல் 25:35 · மத்தேயு 6:3-4 · நீதிமொழிகள் 17:23
15நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம்.
Relatedநீதிமொழிகள் 10:29 · மத்தேயு 7:23 · பிரசங்கி 3:12 · ஏசாயா 64:5 · யோபு 29:12-17 · மத்தேயு 13:41-42
16விவேகத்தின் வழியை விட்டுத் தப்பி நடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பான்.
Relatedஎபிரெயர் 10:38 · சங்கீதம் 125:5 · I யோவான் 2:19 · சங்கீதம் 49:14 · செப்பனியா 1:6 · எபிரெயர் 10:26-27
17சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.
Relatedநீதிமொழிகள் 23:21 · I தீமோத்தேயு 5:6 · II தீமோத்தேயு 3:4 · நீதிமொழிகள் 5:10-11 · நீதிமொழிகள் 21:20 · லூக்கா 16:24-25
18நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.
19சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.
20வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.
Relatedமத்தேயு 25:3-4 · பிரசங்கி 5:19 · சங்கீதம் 112:3 · நீதிமொழிகள் 15:6 · பிரசங்கி 7:11 · சங்கீதம் 23:5
21நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.
Relatedமத்தேயு 5:6 · I கொரிந்தியர் 15:58 · நீதிமொழிகள் 22:4 · எபிரெயர் 12:14 · I தீமோத்தேயு 6:11 · நீதிமொழிகள் 15:9
22பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான்.
Relatedபிரசங்கி 7:19 · நீதிமொழிகள் 24:5 · பிரசங்கி 9:13-18 · II சாமுவேல் 5:6-9 · II சாமுவேல் 20:16-22
23தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
Relatedநீதிமொழிகள் 13:3 · நீதிமொழிகள் 18:21 · நீதிமொழிகள் 17:27-28 · யாக்கோபு 1:26 · நீதிமொழிகள் 12:13 · நீதிமொழிகள் 10:19
24அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பேர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.
Relatedசங்கீதம் 1:1 · பிரசங்கி 7:8-9 · மத்தேயு 2:16 · நீதிமொழிகள் 18:12 · நீதிமொழிகள் 19:29 · நீதிமொழிகள் 1:22
25சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.
Relatedநீதிமொழிகள் 13:4 · மத்தேயு 25:26 · நீதிமொழிகள் 12:24 · நீதிமொழிகள் 19:24 · நீதிமொழிகள் 26:16 · நீதிமொழிகள் 12:27
26அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான்.
Relatedசங்கீதம் 37:26 · சங்கீதம் 112:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:33-35 · எபேசியர் 4:28 · II கொரிந்தியர் 8:7-9 · மத்தேயு 5:42
27துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.
Relatedஏசாயா 66:3 · நீதிமொழிகள் 15:8 · மத்தேயு 23:13 · எரேமியா 6:20 · ஏசாயா 1:11-16 · I சாமுவேல் 15:21-23
28பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.
RelatedII கொரிந்தியர் 4:13 · நீதிமொழிகள் 19:5 · நீதிமொழிகள் 19:9 · உபாகமம் 19:16-19 · நீதிமொழிகள் 25:18 · யாத்திராகமம் 23:1
29துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான்.
Relatedஆகாய் 1:7 · I தெசலோனிக்கேயர் 3:11 · நீதிமொழிகள் 11:5 · நீதிமொழிகள் 28:14 · எரேமியா 8:12 · ஆகாய் 2:18-19
30கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 5:39 · நீதிமொழிகள் 19:21 · எரேமியா 9:23 · ஏசாயா 14:27 · I கொரிந்தியர் 3:19-20 · ஏசாயா 8:9-10
31குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
Relatedசங்கீதம் 20:7 · ஏசாயா 31:1 · சங்கீதம் 33:17-18 · சங்கீதம் 147:10 · சங்கீதம் 3:3 · சங்கீதம் 68:20
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS