அப்போஸ்தலருடைய நடபடிகள் 12
Tamil Bible (BSI 1957) • 25 verses
1அக்காலத்திலே ஏரோது ராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;
Relatedமத்தேயு 24:9 · யோவான் 15:20 · மத்தேயு 10:17-18 · யோவான் 16:2 · லூக்கா 22:53 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:30
2யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.
Relatedஎபிரெயர் 11:37 · மத்தேயு 4:21-22 · மத்தேயு 20:23 · மாற்கு 10:38 · மாற்கு 10:35 · I இராஜாக்கள் 19:1
3அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது.
Relatedயாத்திராகமம் 23:15 · யோவான் 12:43 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:27 · லேவியராகமம் 23:6-14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:9 · யாத்திராகமம் 12:14-20
4அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்.
Relatedநீதிமொழிகள் 19:21 · லூக்கா 22:33 · லூக்கா 21:12 · யோவான் 13:36-38 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:28 · நீதிமொழிகள் 27:1
5அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.
RelatedI கொரிந்தியர் 12:26 · யாக்கோபு 5:16 · I தெசலோனிக்கேயர் 5:17 · எபேசியர் 6:18-20 · II கொரிந்தியர் 1:11 · மத்தேயு 18:19
6ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 21:33 · எபிரெயர் 13:6 · II தீமோத்தேயு 1:16 · எபேசியர் 6:20 · பிலிப்பியர் 4:6-7 · I சாமுவேல் 23:26-27
7அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 16:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:19 · சங்கீதம் 146:7 · சங்கீதம் 105:18-20 · சங்கீதம் 142:6-7 · சங்கீதம் 107:14
8தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.
9அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்.
Relatedசங்கீதம் 126:1 · எபிரெயர் 11:8 · ஆதியாகமம் 45:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:17
10அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 5:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:26 · ஏசாயா 45:1-2 · ஆதியாகமம் 42:17 · ஆதியாகமம் 40:3 · யோவான் 20:19
11பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.
Relatedதானியேல் 6:22 · தானியேல் 3:28 · II பேதுரு 2:9 · சங்கீதம் 34:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:19 · சங்கீதம் 97:10
12அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
RelatedI யோவான் 5:14-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:5 · மத்தேயு 18:19-20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:5 · ஏசாயா 65:24
13பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள்.
14அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள்.
15அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.
Relatedமத்தேயு 18:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:24 · மாற்கு 16:11 · லூக்கா 24:11 · மாற்கு 16:14 · லூக்கா 24:37-38
16பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.
17அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி; புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 21:40 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:33 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:18 · கலாத்தியர் 2:12
18பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 5:22-25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:23
19ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயாதேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 16:27 · யோவான் 12:10-11 · சங்கீதம் 37:32-33 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:4 · I இராஜாக்கள் 20:43
20அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர்பேரிலும் மிகவும் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதனம் கேட்டுக்கொண்டார்கள்.
Relatedஎஸ்றா 3:7 · மத்தேயு 11:21-22 · எசேக்கியேல் 27:17 · லூக்கா 14:31-32 · லூக்கா 16:8 · ஆதியாகமம் 10:19
21குறித்தநாளிலே: ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.
22அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 14:10-13 · யூதா 1:16 · வெளிப்படுத்தின விசேஷம் 13:4 · சங்கீதம் 12:2 · தானியேல் 6:7
23அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.
Relatedசங்கீதம் 115:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:25-26 · II தெசலோனிக்கேயர் 2:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:14-15 · தானியேல் 5:18-24 · I சாமுவேல் 25:38
24தேவவசனம் வளர்ந்து பெருகிற்று.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 6:7 · II தெசலோனிக்கேயர் 3:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:21 · மத்தேயு 16:18 · கொலோசெயர் 1:6
25பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.
📖 அப்போஸ்தலருடைய நடபடிகள்All 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS