அப்போஸ்தலருடைய நடபடிகள் 9
Tamil Bible (BSI 1957) • 43 verses
1சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 8:3 · I தீமோத்தேயு 1:13 · கலாத்தியர் 1:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:11-21 · I கொரிந்தியர் 15:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:58
2இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 19:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:4-5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:25
3அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;
RelatedI கொரிந்தியர் 15:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:12-13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:6 · வெளிப்படுத்தின விசேஷம் 21:23 · I தீமோத்தேயு 6:16 · சங்கீதம் 104:2
4அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
5அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
RelatedI தீமோத்தேயு 1:13 · I சாமுவேல் 3:4-10 · யோபு 40:9-10 · ஏசாயா 45:9 · யோபு 9:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:9
6அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 22:10 · I தீமோத்தேயு 1:14-16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:16 · ரோமர் 10:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:32 · பிலிப்பியர் 2:12
7அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 22:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:13-14 · தானியேல் 10:7 · யோவான் 12:29 · மத்தேயு 24:40-41
8சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 22:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:18 · II இராஜாக்கள் 6:17-20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:11 · ஆதியாகமம் 19:11 · யாத்திராகமம் 4:11
9அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்.
Relatedயோனா 3:6-8 · II நாளாகமம் 33:12-13 · II நாளாகமம் 33:18-19 · எஸ்தர் 4:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:11-12
10தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 22:12 · ஆதியாகமம் 22:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:3 · ஏசாயா 6:8 · ஆதியாகமம் 31:11 · யாத்திராகமம் 3:4
11அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்;
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:30 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:39 · லூக்கா 11:9-10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3 · மத்தேயு 7:7-8
12அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்.
13அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.
RelatedI தீமோத்தேயு 1:13-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:3 · எசேக்கியேல் 3:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:19-20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1 · ரோமர் 16:2
14இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங்கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:59 · II தீமோத்தேயு 2:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:16 · I கொரிந்தியர் 1:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:2-3
15அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
Relatedகலாத்தியர் 1:15-16 · எபேசியர் 3:7-8 · ரோமர் 11:13 · II தீமோத்தேயு 4:16-17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:17-20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:21
16அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.
RelatedI தெசலோனிக்கேயர் 3:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:11 · II கொரிந்தியர் 6:4 · யோவான் 15:20 · II தீமோத்தேயு 1:12 · I பேதுரு 4:14
17அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 8:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:12-14 · I தீமோத்தேயு 5:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:52
18உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 22:16 · II கொரிந்தியர் 3:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38 · II கொரிந்தியர் 4:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:12-13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:37-38
19பின்பு அவன் போஜனம்பண்ணிப் பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 26:20 · I சாமுவேல் 30:12 · கலாத்தியர் 1:17 · பிரசங்கி 9:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:33-36
20தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.
Relatedயோவான் 20:28 · I யோவான் 4:14-15 · கலாத்தியர் 2:20 · கலாத்தியர் 1:23-24 · யோவான் 1:49 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:27-28
21கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:13-14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:3 · II தெசலோனிக்கேயர் 1:10 · கலாத்தியர் 1:13-24 · மத்தேயு 13:54-55 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:6
22சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 18:5 · ஏசாயா 40:29 · லூக்கா 21:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:27-28 · I கொரிந்தியர் 1:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:23
23அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.
Relatedகலாத்தியர் 1:17-18 · I தெசலோனிக்கேயர் 2:15-16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:50 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:19 · II கொரிந்தியர் 11:26 · மத்தேயு 10:16-23
24அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
RelatedII கொரிந்தியர் 11:32 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:19 · சங்கீதம் 37:32-33 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:29-30
25சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள்.
26சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப்பார்த்தான்; அவர்கள் அவனைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 26:20 · கலாத்தியர் 1:17-19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:17-20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:23 · மத்தேயு 10:17-19
27அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்டவிதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 4:36 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13 · எபேசியர் 6:19-20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2 · I கொரிந்தியர் 9:6
28அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து;
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 1:21 · யோவான் 10:9 · எண்ணாகமம் 27:16-17 · சங்கீதம் 121:8 · கலாத்தியர் 1:18 · I இராஜாக்கள் 3:7
29கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான்; அவர்களோ அவனைக் கொலைசெய்ய எத்தனம்பண்ணினார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 6:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:20 · யூதா 1:9 · II கொரிந்தியர் 11:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:20-23
30சகோதரர் அதை அறிந்து, அவனைச் செசரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவுக்கு அனுப்பிவிட்டார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 11:25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:40 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:11 · கலாத்தியர் 1:21 · மத்தேயு 16:13 · மத்தேயு 10:23
31அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.
Relatedசங்கீதம் 111:10 · யோவான் 14:16-18 · ஏசாயா 33:6 · நீதிமொழிகள் 14:26-27 · நீதிமொழிகள் 23:17 · எபேசியர் 6:18-19
32பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:13 · நீதிமொழிகள் 2:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8 · மத்தேயு 27:52 · பிலிப்பியர் 1:1
33அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க்கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.
Relatedலூக்கா 13:16 · யோவான் 9:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:22 · மாற்கு 5:25 · மாற்கு 9:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:8
34பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 3:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:12 · மத்தேயு 9:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:18 · மத்தேயு 9:28-30 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:16
35லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 11:21 · I நாளாகமம் 5:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:42 · ஏசாயா 35:2 · சங்கீதம் 22:27 · II கொரிந்தியர் 3:16
36யோப்பா பட்டணத்தில் கிரேக்குப் பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்.
Relatedதீத்து 3:8 · தீத்து 2:7 · II நாளாகமம் 2:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:31 · எபிரெயர் 13:21 · யாக்கோபு 1:27
37அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 1:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:8 · மாற்கு 14:15 · யோவான் 11:36-37 · யோவான் 11:3-4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:39
38யோப்பா பட்டணம் லித்தா ஊருக்குச் சமீபமானபடியினாலே, பேதுரு அவ்விடத்தில் இருக்கிறானென்று சீஷர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டுமென்று சொல்லும்படி இரண்டு மனுஷரை அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:36 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:26 · II இராஜாக்கள் 4:28-30 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:32
39பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள்.
Relatedநீதிமொழிகள் 10:7 · நீதிமொழிகள் 31:30-31 · எபேசியர் 4:28 · I தெசலோனிக்கேயர் 1:3 · லூக்கா 24:44 · யோபு 31:19-20
40பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.
Relatedமத்தேயு 9:25 · மாற்கு 5:40-42 · லூக்கா 8:54 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:60 · II இராஜாக்கள் 4:32-36 · I இராஜாக்கள் 17:19-23
41அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்கு முன் நிறுத்தினான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 6:1 · மாற்கு 1:31 · ஆதியாகமம் 45:26 · லூக்கா 7:12 · சங்கீதம் 146:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:7
42இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
Relatedயோவான் 11:45 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:21 · யோவான் 12:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:35 · யோவான் 12:44 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:17-18
43பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.
📖 அப்போஸ்தலருடைய நடபடிகள்All 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS