நீதிமொழிகள் 9
Tamil Bible (BSI 1957) • 18 verses
1ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,
Relatedமத்தேயு 16:18 · வெளிப்படுத்தின விசேஷம் 3:12 · I கொரிந்தியர் 3:9-15 · I இராஜாக்கள் 7:2-3 · I பேதுரு 2:5-6 · கலாத்தியர் 2:9
2தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி,
Relatedமத்தேயு 22:3-14 · ஏசாயா 25:6 · லூக்கா 14:16-17 · நீதிமொழிகள் 9:5 · நீதிமொழிகள் 23:30 · உன்னதப்பாட்டு 8:2
3தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,
Relatedநீதிமொழிகள் 9:14 · நீதிமொழிகள் 8:1-3 · மத்தேயு 22:3-4 · சங்கீதம் 68:11 · நீதிமொழிகள் 1:20-23 · ரோமர் 10:15
4புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.
Relatedநீதிமொழிகள் 6:32 · நீதிமொழிகள் 9:16 · நீதிமொழிகள் 8:5 · மத்தேயு 11:25 · வெளிப்படுத்தின விசேஷம் 3:17-18 · வெளிப்படுத்தின விசேஷம் 22:17
5நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்.
Relatedயோவான் 6:27 · உன்னதப்பாட்டு 5:1 · எரேமியா 31:12-14 · நீதிமொழிகள் 9:17 · ஏசாயா 55:1-3 · யோவான் 6:49-58
6பேதமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.
Relatedநீதிமொழிகள் 13:20 · நீதிமொழிகள் 4:11 · லூக்கா 13:24 · II கொரிந்தியர் 6:17 · சங்கீதம் 26:4-6 · நீதிமொழிகள் 4:14-15
7பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.
Relatedநீதிமொழிகள் 15:12 · நீதிமொழிகள் 23:9 · II நாளாகமம் 36:16 · II நாளாகமம் 25:15-16 · II நாளாகமம் 24:20-22 · I இராஜாக்கள் 18:17
8பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.
Relatedநீதிமொழிகள் 13:18 · சங்கீதம் 141:5 · நீதிமொழிகள் 23:9 · நீதிமொழிகள் 15:12 · நீதிமொழிகள் 29:1 · மத்தேயு 7:6
9ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.
Relatedநீதிமொழிகள் 1:5 · I யோவான் 5:13 · மத்தேயு 13:11-12 · நீதிமொழிகள் 25:12 · I யோவான் 2:20-21 · ஓசியா 6:3
10கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
Relatedசங்கீதம் 111:10 · யோபு 28:28 · நீதிமொழிகள் 1:7 · பிரசங்கி 12:13 · நீதிமொழிகள் 2:5 · I யோவான் 5:20
11என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.
12நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
Relatedயோபு 22:2-3 · II பேதுரு 3:3-4 · எசேக்கியேல் 18:20 · யோபு 22:21 · நீதிமொழிகள் 16:26 · யோபு 35:6-7
13மதியற்ற ஸ்திரீ வாயாடியும் ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.
14அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து,
15தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:
16எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,
Relatedநீதிமொழிகள் 9:4
17மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.
Relatedநீதிமொழிகள் 20:17 · நீதிமொழிகள் 23:31-32 · யாக்கோபு 1:14-15 · நீதிமொழிகள் 30:20 · II இராஜாக்கள் 5:24-27 · ஆதியாகமம் 3:6
18ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS