அப்போஸ்தலருடைய நடபடிகள் 1
Tamil Bible (BSI 1957) • 26 verses
1தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்டபின்பு,
2அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 1:9 · எபிரெயர் 9:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38 · ஏசாயா 59:20-21 · யோவான் 20:21 · யோவான் 13:18
3அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
RelatedI கொரிந்தியர் 15:5-7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:31 · யோவான் 20:26 · I யோவான் 1:1 · யோவான் 21:1 · யோவான் 21:14
4அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
Relatedலூக்கா 24:49 · யோவான் 14:16 · யோவான் 15:26 · யோவான் 14:26-28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:33 · லூக்கா 12:12
5ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
Relatedமத்தேயு 3:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:15-16 · I கொரிந்தியர் 12:13 · லூக்கா 3:16 · தீத்து 3:5 · மாற்கு 1:8
6அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா இராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
Relatedலூக்கா 19:11 · லூக்கா 17:20 · தானியேல் 7:27 · மத்தேயு 24:3 · எசேக்கியேல் 37:24-27 · ஏசாயா 9:6-7
7அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
Relatedமத்தேயு 24:36 · I தெசலோனிக்கேயர் 5:1-2 · மாற்கு 13:32 · உபாகமம் 29:29 · மாற்கு 10:40 · தானியேல் 2:21
8பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
Relatedமத்தேயு 28:19 · மாற்கு 16:15 · ரோமர் 15:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:33 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:32 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:8
9இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
Relatedதானியேல் 7:13 · லூக்கா 24:50-51 · மாற்கு 16:19 · யாத்திராகமம் 19:9 · எபேசியர் 4:8-12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:2
10அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்துபார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று:
Relatedலூக்கா 24:4 · யோவான் 20:12 · வெளிப்படுத்தின விசேஷம் 7:14 · மாற்கு 16:5 · தானியேல் 7:9 · மத்தேயு 28:3
11கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 1:7 · I தெசலோனிக்கேயர் 4:16 · மாற்கு 13:26 · யோவான் 14:3 · மத்தேயு 24:30 · மத்தேயு 16:27
12அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
13அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 20:8 · லூக்கா 22:12 · மாற்கு 14:15 · மத்தேயு 10:2-4 · மாற்கு 2:14 · வெளிப்படுத்தின விசேஷம் 1:1-3
14அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 6:4 · எபேசியர் 6:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:42 · கொலோசெயர் 4:2 · ரோமர் 12:12 · லூக்கா 18:1
15அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று:
RelatedI கொரிந்தியர் 15:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:20 · வெளிப்படுத்தின விசேஷம் 3:4 · சங்கீதம் 32:5-6 · லூக்கா 22:32 · யோவான் 21:23
16சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
Relatedசங்கீதம் 41:9 · யோவான் 13:18 · சங்கீதம் 55:12-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:20 · மத்தேயு 26:56 · யோவான் 12:38-40
17அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாயிருந்தான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 1:25 · யோவான் 6:70-71 · மாற்கு 3:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:24 · யோவான் 17:12 · எபேசியர் 4:11-12
18அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.
Relatedமத்தேயு 27:3-10 · சங்கீதம் 55:23 · சங்கீதம் 55:15 · மத்தேயு 26:14-15 · II பேதுரு 2:15-16 · யோபு 20:12-15
19இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 21:40 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:22 · மத்தேயு 28:15 · II சாமுவேல் 2:16
20சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.
Relatedசங்கீதம் 69:25 · சங்கீதம் 109:8-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:25 · லூக்கா 24:44 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:33 · லூக்கா 20:42
21ஆதலால், யோவான் ஞானஸ்நானம்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,
Relatedயோவான் 15:27 · லூக்கா 10:1-2 · யோவான் 10:1-9 · எண்ணாகமம் 27:17 · உபாகமம் 31:2 · II சாமுவேல் 5:2
22அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 1:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:33 · மாற்கு 1:1-8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8-9 · லூக்கா 3:1-18 · யோவான் 15:27
23அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும் மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:
24எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக,
RelatedI சாமுவேல் 16:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:8 · எரேமியா 17:10 · எபிரெயர் 4:13 · வெளிப்படுத்தின விசேஷம் 2:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:23
25இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
RelatedI கொரிந்தியர் 9:2 · ரோமர் 1:5 · யோவான் 6:70-71 · யோவான் 17:12 · கலாத்தியர் 2:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:16-21
26பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
📖 அப்போஸ்தலருடைய நடபடிகள்All 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS