எபிரெயர் 1
Tamil Bible (BSI 1957) • 14 verses
1பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,
RelatedII பேதுரு 1:20-21 · யோவேல் 2:28 · எண்ணாகமம் 12:6-8 · லூக்கா 24:27 · I பேதுரு 1:10-12 · ஆதியாகமம் 46:2-4
2இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
Relatedயோவான் 1:3 · I கொரிந்தியர் 8:6 · கொலோசெயர் 1:16-18 · யோவான் 1:14 · I பேதுரு 1:20 · மத்தேயு 28:18
3இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்.
Relatedகொலோசெயர் 1:15-17 · வெளிப்படுத்தின விசேஷம் 4:11 · யோவான் 14:9-10 · யோவான் 1:14 · II கொரிந்தியர் 4:4 · யோவான் 1:4
4இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.
Relatedஎபேசியர் 1:21 · பிலிப்பியர் 2:9-11 · I பேதுரு 3:22 · எபிரெயர் 2:9 · வெளிப்படுத்தின விசேஷம் 5:11-12 · II தெசலோனிக்கேயர் 1:7
5எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?
Relatedசங்கீதம் 2:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:33 · எபிரெயர் 5:5 · II சாமுவேல் 7:14 · I நாளாகமம் 17:13 · சங்கீதம் 89:26-27
6மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.
RelatedI பேதுரு 3:22 · சங்கீதம் 97:7 · உபாகமம் 32:43 · கொலோசெயர் 1:18 · கொலோசெயர் 1:15 · யோவான் 1:14
7தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது.
Relatedசங்கீதம் 104:4 · எபிரெயர் 1:14 · II இராஜாக்கள் 6:17 · II இராஜாக்கள் 2:11 · எசேக்கியேல் 1:13-14 · சகரியா 6:5
8குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
9நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;
10கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;
Relatedசங்கீதம் 102:25-27 · ஆதியாகமம் 1:1 · யோவான் 1:1-3 · எரேமியா 32:17 · ஏசாயா 48:13 · சங்கீதம் 8:3-4
11அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போகும்;
Relatedஏசாயா 51:6 · மாற்கு 13:31 · லூக்கா 21:33 · மத்தேயு 24:35 · ஏசாயா 34:4 · வெளிப்படுத்தின விசேஷம் 21:1
12ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போகும்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.
Relatedசங்கீதம் 102:26-27 · எபிரெயர் 13:8 · யாக்கோபு 1:17 · யோவான் 8:58 · யாத்திராகமம் 3:14 · சங்கீதம் 90:4
13மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?
Relatedசங்கீதம் 110:1 · மாற்கு 12:36 · எபிரெயர் 10:12-13 · மத்தேயு 22:44 · I கொரிந்தியர் 15:25-26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:34-36
14இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?
📖 எபிரெயர்All 13 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS