ஆதியாகமம் 1
Tamil Bible (BSI 1957) • 31 verses
1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
Relatedயோவான் 1:1-3 · எபிரெயர் 11:3 · ஏசாயா 45:18 · வெளிப்படுத்தின விசேஷம் 4:11 · எபிரெயர் 1:10 · கொலோசெயர் 1:16-17
2பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
3தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.
4வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
Relatedபிரசங்கி 2:13 · ஆதியாகமம் 1:18 · பிரசங்கி 11:7 · ஆதியாகமம் 1:31 · ஆதியாகமம் 1:12 · ஆதியாகமம் 1:10
5தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
Relatedசங்கீதம் 74:16 · ஏசாயா 45:7 · சங்கீதம் 104:20 · I தெசலோனிக்கேயர் 5:5 · ஆதியாகமம் 8:22 · சங்கீதம் 19:2
6பின்பு தேவன்; ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
7தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
Relatedசங்கீதம் 148:4 · நீதிமொழிகள் 8:28-29 · மத்தேயு 8:27 · யோபு 38:8-11 · ஆதியாகமம் 1:9 · யோபு 26:8
8தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் ஆயிற்று.
Relatedஆதியாகமம் 1:5 · ஆதியாகமம் 1:19 · ஆதியாகமம் 1:31 · ஆதியாகமம் 1:23 · ஆதியாகமம் 1:10 · ஆதியாகமம் 5:2
9பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
10தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
11அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
Relatedசங்கீதம் 104:14-17 · எபிரெயர் 6:7 · சங்கீதம் 147:8 · ஆதியாகமம் 1:29 · சங்கீதம் 65:9-13 · ஆதியாகமம் 2:9
12பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
13சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
14பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
Relatedசங்கீதம் 104:19-20 · உபாகமம் 4:19 · சங்கீதம் 74:16-17 · சங்கீதம் 148:3 · எரேமியா 31:35 · சங்கீதம் 136:7-9
15அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
16தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
Relatedசங்கீதம் 136:7-9 · உபாகமம் 4:19 · சங்கீதம் 8:3 · சங்கீதம் 148:5 · சங்கீதம் 74:16 · ஏசாயா 40:26
17அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
18பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
19சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
20பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.
Relatedசங்கீதம் 104:24-25 · ஆதியாகமம் 2:19 · I இராஜாக்கள் 4:33 · சங்கீதம் 148:10 · ஆதியாகமம் 1:30 · ஆதியாகமம் 1:7
21தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
Relatedசங்கீதம் 104:24-26 · ஆதியாகமம் 1:25 · ஆதியாகமம் 8:19 · ஆதியாகமம் 8:17 · ஆதியாகமம் 6:20 · ஆதியாகமம் 9:7
22தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.
Relatedஆதியாகமம் 8:17 · யோபு 40:15 · சங்கீதம் 107:38 · ஆதியாகமம் 1:28 · ஆதியாகமம் 35:11 · யோபு 42:12
23சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.
24பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
Relatedசங்கீதம் 50:9-10 · ஆதியாகமம் 6:20 · ஆதியாகமம் 8:19 · யோபு 40:15 · சங்கீதம் 148:10 · ஆதியாகமம் 7:14
25தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
26பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
Relatedகொலோசெயர் 3:10 · எபேசியர் 4:24 · சங்கீதம் 8:4-8 · ஆதியாகமம் 3:22 · ஆதியாகமம் 5:1 · சங்கீதம் 100:3
27தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
Relatedமத்தேயு 19:4 · எபேசியர் 2:10 · மாற்கு 10:6 · ஆதியாகமம் 5:1-2 · ஆதியாகமம் 2:21-25 · எபேசியர் 4:24
28பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
Relatedஆதியாகமம் 9:1 · ஆதியாகமம் 9:7 · லேவியராகமம் 26:9 · சங்கீதம் 128:3-4 · ஆதியாகமம் 22:17-18 · ஆதியாகமம் 1:22
29பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
Relatedஆதியாகமம் 9:3 · சங்கீதம் 104:14-15 · சங்கீதம் 145:15-16 · சங்கீதம் 104:27-28 · சங்கீதம் 147:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:17
30பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.
Relatedசங்கீதம் 104:14 · சங்கீதம் 145:15-16 · சங்கீதம் 147:9 · யோபு 40:15 · யோபு 40:20 · யோபு 38:39-41
31அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
📖 ஆதியாகமம்All 50 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS