I கொரிந்தியர் 9
Tamil Bible (BSI 1957) • 27 verses
1நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:11 · I கொரிந்தியர் 9:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:3 · I கொரிந்தியர் 3:6 · I தீமோத்தேயு 2:7
2நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயிராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாயிருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாயிருக்கிறீர்களே.
3என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மாறுத்தரமாவது:
RelatedII கொரிந்தியர் 13:5 · I கொரிந்தியர் 14:37 · II கொரிந்தியர் 10:7-8 · பிலிப்பியர் 1:17 · II கொரிந்தியர் 13:3 · II கொரிந்தியர் 12:16-19
4புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா?
RelatedI தெசலோனிக்கேயர் 2:6 · II தெசலோனிக்கேயர் 3:8-9 · லூக்கா 10:7 · கலாத்தியர் 6:6 · I கொரிந்தியர் 9:7-14 · I தெசலோனிக்கேயர் 2:9
5மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?
Relatedயோவான் 1:42 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:14 · மத்தேயு 8:14 · எபிரெயர் 13:4 · I கொரிந்தியர் 7:39 · I கொரிந்தியர் 7:7
6அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும்மாத்திரந்தானா அதிகாரமில்லை?
RelatedII தெசலோனிக்கேயர் 3:7-9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:1-2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:36 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:3 · I தெசலோனிக்கேயர் 2:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:12
7எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்?
Relatedநீதிமொழிகள் 27:18 · உபாகமம் 20:6 · II தீமோத்தேயு 2:3-4 · I கொரிந்தியர் 3:6-8 · I தீமோத்தேயு 1:18 · எரேமியா 23:2-3
8இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா?
RelatedI தெசலோனிக்கேயர் 4:8 · ரோமர் 6:19 · I கொரிந்தியர் 7:40 · I தெசலோனிக்கேயர் 2:13 · I கொரிந்தியர் 14:34 · ரோமர் 3:31
9போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?
Relatedஉபாகமம் 25:4 · I தீமோத்தேயு 5:18 · சங்கீதம் 104:27 · யோனா 4:11 · சங்கீதம் 145:15-16 · லூக்கா 12:24-28
10நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது.
RelatedII தீமோத்தேயு 2:6 · ரோமர் 15:4 · ரோமர் 4:23-24 · யோவான் 4:35-38 · I கொரிந்தியர் 3:9 · II கொரிந்தியர் 4:15
11நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?
Relatedரோமர் 15:27 · கலாத்தியர் 6:6 · II கொரிந்தியர் 11:15 · மத்தேயு 10:10 · II இராஜாக்கள் 5:13 · மல்கியா 3:8-9
12மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப்பாடும்படுகிறோம்.
RelatedI கொரிந்தியர் 9:15 · II கொரிந்தியர் 11:12 · I கொரிந்தியர் 9:18 · II கொரிந்தியர் 11:7-10 · I தெசலோனிக்கேயர் 2:6-9 · I கொரிந்தியர் 9:2
13ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?
Relatedஎண்ணாகமம் 18:8-20 · லேவியராகமம் 6:26 · எண்ணாகமம் 5:9-10 · உபாகமம் 18:1-5 · I சாமுவேல் 2:28 · I கொரிந்தியர் 10:18
14அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
15அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும்.
RelatedI தெசலோனிக்கேயர் 2:9 · II தெசலோனிக்கேயர் 3:8 · I கொரிந்தியர் 9:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:34 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:24 · II கொரிந்தியர் 11:9-12
16சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
Relatedரோமர் 1:14 · எரேமியா 20:9 · கொலோசெயர் 4:17 · லூக்கா 9:62 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:16-20
17நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
Relatedகலாத்தியர் 2:7 · I கொரிந்தியர் 3:8 · மத்தேயு 10:41 · கொலோசெயர் 1:25 · I நாளாகமம் 28:9 · ஏசாயா 6:8
18ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.
RelatedII கொரிந்தியர் 11:7-9 · II தெசலோனிக்கேயர் 3:8-9 · I கொரிந்தியர் 10:33 · I கொரிந்தியர் 8:9 · I தெசலோனிக்கேயர் 2:6 · II கொரிந்தியர் 12:13-18
19நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
Relatedகலாத்தியர் 5:13 · மத்தேயு 18:15 · யாக்கோபு 5:19-20 · I கொரிந்தியர் 10:33 · I தீமோத்தேயு 4:16 · மத்தேயு 20:26-28
20யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 16:3 · கலாத்தியர் 5:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:20-26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:2-3 · ரோமர் 11:14 · ரோமர் 6:14-15
21நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.
Relatedரோமர் 2:12 · கலாத்தியர் 3:2 · ரோமர் 2:14 · மத்தேயு 5:17-20 · I கொரிந்தியர் 7:19-22 · தீத்து 2:2-12
22பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
RelatedI கொரிந்தியர் 10:33 · ரோமர் 15:1 · I கொரிந்தியர் 9:19 · ரோமர் 11:14 · கலாத்தியர் 6:1 · I கொரிந்தியர் 8:13
23சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.
RelatedII தீமோத்தேயு 2:10 · I கொரிந்தியர் 9:25-27 · மாற்கு 8:35 · எபிரெயர் 3:14 · கலாத்தியர் 2:5 · I யோவான் 1:3
24பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
Relatedபிலிப்பியர் 3:14 · எபிரெயர் 12:1 · II தீமோத்தேயு 4:7-8 · வெளிப்படுத்தின விசேஷம் 3:11 · பிலிப்பியர் 2:16 · கலாத்தியர் 5:7
25பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
RelatedII தீமோத்தேயு 2:5 · வெளிப்படுத்தின விசேஷம் 2:10 · I தீமோத்தேயு 6:12 · II தீமோத்தேயு 4:7-8 · யாக்கோபு 1:12 · வெளிப்படுத்தின விசேஷம் 3:11
26ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.
RelatedII தீமோத்தேயு 2:5 · II பேதுரு 1:10 · பிலிப்பியர் 1:21 · கொலோசெயர் 1:29 · II தீமோத்தேயு 1:12 · லூக்கா 13:24
27மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
📖 I கொரிந்தியர்All 16 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS