அப்போஸ்தலருடைய நடபடிகள் 22
Tamil Bible (BSI 1957) • 30 verses
1சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவிகொடுப்பீர்களாக என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 7:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:26 · II தீமோத்தேயு 4:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:6
2அவன் எபிரெயுபாஷையிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, அதிக அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்:
3நான் யூதன், சிலிசியாநாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.
Relatedபிலிப்பியர் 3:5-6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:34 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:39
4நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 22:19-20 · I தீமோத்தேயு 1:13-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:9-11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:1-4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:17 · I கொரிந்தியர் 15:9
5அதற்குப் பிரதான ஆசாரியரும் மூப்பர் யாவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையிலே நான் சகோதரருக்கு நிருபங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவிலிருக்கிறவர்களும் தண்டிக்கப்படும்படிக்கு, அவர்களைக் கட்டி, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவ்விடத்திற்குப்போனேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1-2 · லூக்கா 22:66 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:1
6அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:3-8 · வெளிப்படுத்தின விசேஷம் 1:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:12-18 · ஆதியாகமம் 15:2 · மத்தேயு 17:2 · ஏசாயா 24:23
7நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
Relatedஎரேமியா 2:9 · I தீமோத்தேயு 1:13 · மத்தேயு 25:45 · ஆதியாகமம் 22:1 · யாத்திராகமம் 3:4 · ஏசாயா 43:22-26
8அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 26:9 · I சாமுவேல் 8:7 · மத்தேயு 2:23 · சகரியா 2:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:14
9என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:7 · தானியேல் 10:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:13 · யோவான் 12:29-30
10அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 16:30 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:16-18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:37 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:12-16 · சங்கீதம் 143:8-10 · சங்கீதம் 25:8-9
11அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகுகொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.
12அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:3 · III யோவான் 1:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:4 · லூக்கா 2:25 · II கொரிந்தியர் 6:8
13என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வைடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன்.
14அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.
Relatedகலாத்தியர் 1:12 · I கொரிந்தியர் 15:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:16 · I கொரிந்தியர் 9:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:52
15நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 23:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:20 · யோவான் 15:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:39-41 · லூக்கா 24:47-48 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8
16இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள்போகக் கழுவப்படு என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:21 · I கொரிந்தியர் 6:11 · எபிரெயர் 10:22 · தீத்து 3:5 · I பேதுரு 3:21
17பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.
RelatedII கொரிந்தியர் 12:1-4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:26-28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:9-10 · கலாத்தியர் 1:18 · வெளிப்படுத்தின விசேஷம் 1:10
18அவர் என்னை நோக்கி: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:29 · மத்தேயு 10:14 · எசேக்கியேல் 3:6-7 · லூக்கா 21:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:19 · மத்தேயு 10:23
19அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும்,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 22:4 · மத்தேயு 10:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:9-12
20உம்முடைய சாட்சியாகிய ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலைசெய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் வஸ்திரங்களைக் காத்துக்கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 7:58 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:1 · ரோமர் 1:32 · வெளிப்படுத்தின விசேஷம் 2:13 · வெளிப்படுத்தின விசேஷம் 17:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:10
21அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15 · I தீமோத்தேயு 2:7 · எபேசியர் 3:6-8 · ரோமர் 15:16 · கலாத்தியர் 2:7-8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:46-47
22இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 25:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:36 · லூக்கா 23:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:54-57 · யோவான் 19:15
23இவ்விதமாய் அவர்கள் கூக்குரலிட்டுத் தங்கள் மேல்வஸ்திரங்களை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கையில்,
RelatedII சாமுவேல் 16:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:58 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:53 · பிரசங்கி 10:3
24சேனாதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்தரத்தை அறியும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 21:31-32 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:34 · யோவான் 19:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:25-29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:37
25அந்தப்படி அவர்கள் அவனை வாரினால் அழுந்தக் கட்டும்போது, பவுல் சமீபமாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 16:37 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:43 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:27-28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:1
26நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, சேனாதிபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனுஷன் ரோமன் என்றான்.
27அப்பொழுது சேனாதிபதி பவுலினிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.
28சேனாதிபதி பிரதியுத்தரமாக: நான் மிகுந்த திரவியத்தினாலே இந்தச் சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ இந்தச் சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன் என்றான்.
29அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாதிபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 21:33 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:24-26 · எபிரெயர் 11:35 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:38-39
30பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதான ஆசாரியரையும் ஆலோசனைச் சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.
📖 அப்போஸ்தலருடைய நடபடிகள்All 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS