நீதிமொழிகள் 7
Tamil Bible (BSI 1957) • 27 verses
1என் மகனே, நீ என் வார்த்தைகளைக்காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.
Relatedநீதிமொழிகள் 1:8 · வெளிப்படுத்தின விசேஷம் 1:3 · லூக்கா 11:28 · வெளிப்படுத்தின விசேஷம் 22:9 · நீதிமொழிகள் 2:1-7 · யோவான் 14:23
2என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
Relatedசங்கீதம் 17:8 · நீதிமொழிகள் 4:4 · I யோவான் 2:3-4 · லேவியராகமம் 18:5 · I யோவான் 5:1-3 · யோவான் 14:21
3அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதயபலகையில் எழுதிக்கொள்.
Relatedஉபாகமம் 11:18-20 · நீதிமொழிகள் 3:3 · உபாகமம் 6:8-9 · எரேமியா 31:33 · II கொரிந்தியர் 3:3 · ஏசாயா 30:8
4இச்சகவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
Relatedநீதிமொழிகள் 4:6-8 · நீதிமொழிகள் 2:2-4 · யோபு 17:14 · உன்னதப்பாட்டு 8:1 · லூக்கா 11:27-28 · மத்தேயு 12:49-50
5ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.
6நான் என் வீட்டின் ஜன்னலருகே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது,
7பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக்கண்டு அவனைக் கவனித்தேன்.
Relatedநீதிமொழிகள் 6:32 · நீதிமொழிகள் 1:22 · நீதிமொழிகள் 9:16 · நீதிமொழிகள் 10:13 · நீதிமொழிகள் 9:4 · சங்கீதம் 119:130
8அவன் மாலைமயங்கும் அஸ்தமன நேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும்.
RelatedII சாமுவேல் 11:2-3 · I கொரிந்தியர் 6:18 · நீதிமொழிகள் 7:12 · நீதிமொழிகள் 5:8 · நீதிமொழிகள் 4:14-15 · யூதா 1:23
9அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய் நடந்துபோனான்.
10அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
RelatedII கொரிந்தியர் 11:2-3 · I தீமோத்தேயு 2:9 · ஏசாயா 3:16-24 · II இராஜாக்கள் 9:30 · எரேமியா 4:30 · ஆதியாகமம் 38:14-15
11அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை.
Relatedநீதிமொழிகள் 9:13 · தீத்து 2:5 · I தீமோத்தேயு 5:13-14 · நீதிமொழிகள் 31:10-31 · நீதிமொழிகள் 25:24 · ஆதியாகமம் 18:9
12சிலவேளை வெளியிலிருப்பாள், சிலவேளை வீதியிலிருப்பாள், சந்துகள்தோறும் பதிவிருப்பாள்.
Relatedநீதிமொழிகள் 23:28 · நீதிமொழிகள் 9:14 · வெளிப்படுத்தின விசேஷம் 18:3 · எசேக்கியேல் 16:24-25 · எரேமியா 2:33 · எரேமியா 3:2
13அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:
Relatedஆதியாகமம் 39:12 · எண்ணாகமம் 25:6-8 · எசேக்கியேல் 2:4 · ஆதியாகமம் 39:7 · நீதிமொழிகள் 21:29 · எசேக்கியேல் 16:33
14சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.
Relatedநீதிமொழிகள் 21:27 · லேவியராகமம் 7:11 · நீதிமொழிகள் 17:1 · உபாகமம் 12:6-7 · யோவான் 18:28 · நீதிமொழிகள் 15:8
15ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப்புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
16என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்து தேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன்.
Relatedஏசாயா 19:9 · எசேக்கியேல் 27:7 · நீதிமொழிகள் 31:22 · வெளிப்படுத்தின விசேஷம் 2:22 · உன்னதப்பாட்டு 3:7-10 · I இராஜாக்கள் 10:28
17என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன்.
Relatedசங்கீதம் 45:8 · ஏசாயா 57:7-9 · உன்னதப்பாட்டு 4:13-14 · உன்னதப்பாட்டு 3:6 · யாத்திராகமம் 30:23
18வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.
19புருஷன் வீட்டிலே இல்லை, தூரப்பிரயாணம் போனான்.
Relatedமத்தேயு 20:11 · லூக்கா 12:45-46 · மத்தேயு 24:48 · மாற்கு 13:34-36 · லூக்கா 12:39 · மத்தேயு 24:43
20பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
RelatedII நாளாகமம் 2:4
21தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.
Relatedநீதிமொழிகள் 5:3 · நீதிமொழிகள் 7:5 · II இராஜாக்கள் 4:8 · சங்கீதம் 12:2 · லூக்கா 24:29 · நீதிமொழிகள் 6:24
22உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலும்,
23ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.
24ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
Relatedநீதிமொழிகள் 5:7 · நீதிமொழிகள் 4:1 · I யோவான் 2:1 · கலாத்தியர் 4:19 · நீதிமொழிகள் 8:32-33 · I கொரிந்தியர் 4:14-15
25உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே.
Relatedநீதிமொழிகள் 5:8 · நீதிமொழிகள் 6:25 · ஏசாயா 53:6 · மத்தேயு 5:28 · நீதிமொழிகள் 23:31-33 · சங்கீதம் 119:176
26அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள்.
RelatedI பேதுரு 2:11 · நெகேமியா 13:26 · I இராஜாக்கள் 11:1-2 · நீதிமொழிகள் 6:33 · I கொரிந்தியர் 10:8 · II சாமுவேல் 3:6-8
27அவள் வீடு பாதாளத்துக்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS