நீதிமொழிகள் 29
Tamil Bible (BSI 1957) • 27 verses
1அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
Relatedநீதிமொழிகள் 6:15 · நீதிமொழிகள் 1:24-31 · சகரியா 7:11-14 · I சாமுவேல் 2:25 · நீதிமொழிகள் 28:18 · யோவான் 13:26
2நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.
Relatedநீதிமொழிகள் 28:12 · நீதிமொழிகள் 11:10 · நீதிமொழிகள் 28:28 · எஸ்தர் 8:15 · பிரசங்கி 10:5 · வெளிப்படுத்தின விசேஷம் 11:15
3ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன் தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.
Relatedநீதிமொழிகள் 27:11 · நீதிமொழிகள் 15:20 · லூக்கா 15:30 · நீதிமொழிகள் 10:1 · நீதிமொழிகள் 28:7 · லூக்கா 15:13
4நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்.
Relatedநீதிமொழிகள் 29:14 · நீதிமொழிகள் 20:8 · தானியேல் 11:20 · மீகா 7:3 · I சாமுவேல் 13:13 · சங்கீதம் 89:14
5பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
6துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.
Relatedயாத்திராகமம் 15:1 · பிரசங்கி 9:12 · II தீமோத்தேயு 2:26 · I பேதுரு 1:8 · சங்கீதம் 132:16 · சங்கீதம் 11:6
7நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.
Relatedயோபு 29:16 · சங்கீதம் 41:1 · நீதிமொழிகள் 21:13 · நீதிமொழிகள் 31:8-9 · கலாத்தியர் 6:1 · I சாமுவேல் 25:9-11
8பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள்.
Relatedநீதிமொழிகள் 11:11 · எரேமியா 15:1 · யாக்கோபு 5:15-18 · யாக்கோபு 3:5-6 · நீதிமொழிகள் 16:14 · உபாகமம் 9:18-20
9ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.
10இரத்தப்பிரியர் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் காப்பாற்றுகிறார்கள்.
RelatedI யோவான் 3:12-13 · யோவான் 15:18-19 · ஆதியாகமம் 4:5-8 · I சாமுவேல் 20:31-33 · I சாமுவேல் 22:11-23 · எரேமியா 13:15-17
11மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
Relatedநீதிமொழிகள் 19:11 · நீதிமொழிகள் 12:16 · மீகா 7:5 · ஆமோஸ் 5:13 · நீதிமொழிகள் 12:23 · நீதிமொழிகள் 14:33
12அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.
Relatedநீதிமொழிகள் 20:8 · சங்கீதம் 52:2-4 · II இராஜாக்கள் 10:6-7 · சங்கீதம் 101:5-7 · I சாமுவேல் 22:8-23 · I இராஜாக்கள் 21:11-13
13தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங்கொடுக்கிறார்.
Relatedமத்தேயு 5:45 · நீதிமொழிகள் 22:2 · சங்கீதம் 13:3 · எபேசியர் 2:1 · லேவியராகமம் 25:35-37 · நெகேமியா 5:5-7
14ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.
Relatedநீதிமொழிகள் 16:12 · ஏசாயா 11:4 · நீதிமொழிகள் 29:4 · சங்கீதம் 72:2-4 · நீதிமொழிகள் 20:28 · சங்கீதம் 89:2
15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
Relatedநீதிமொழிகள் 10:1 · நீதிமொழிகள் 17:25 · நீதிமொழிகள் 29:17 · நீதிமொழிகள் 22:15 · நீதிமொழிகள் 13:24 · நீதிமொழிகள் 22:6
16துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
Relatedசங்கீதம் 58:10 · சங்கீதம் 91:8 · சங்கீதம் 92:11 · சங்கீதம் 37:34 · சங்கீதம் 37:36 · நீதிமொழிகள் 29:2
17உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
Relatedநீதிமொழிகள் 10:1 · நீதிமொழிகள் 29:15 · நீதிமொழிகள் 23:13-14 · நீதிமொழிகள் 13:24 · நீதிமொழிகள் 22:15 · நீதிமொழிகள் 19:18
18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவு கொடான்.
20தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.
Relatedயாக்கோபு 1:19 · நீதிமொழிகள் 26:12 · நீதிமொழிகள் 14:29 · பிரசங்கி 5:2 · நீதிமொழிகள் 29:11 · நீதிமொழிகள் 21:5
21ஒருவன் தன் அடிமையைச் சிறு பிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப் பாராட்டுவான்.
22கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
Relatedநீதிமொழிகள் 15:18 · நீதிமொழிகள் 17:19 · நீதிமொழிகள் 26:21 · நீதிமொழிகள் 14:17 · நீதிமொழிகள் 10:12 · நீதிமொழிகள் 22:24
23மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
Relatedமத்தேயு 23:12 · லூக்கா 14:11 · நீதிமொழிகள் 11:2 · ஏசாயா 66:2 · யாக்கோபு 4:6-10 · I பேதுரு 5:5
24திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.
Relatedலேவியராகமம் 5:1 · நீதிமொழிகள் 8:36 · நீதிமொழிகள் 1:11-19 · ஏசாயா 1:23 · சங்கீதம் 50:18-22 · நீதிமொழிகள் 15:32
25மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
Relatedசங்கீதம் 118:8 · லூக்கா 12:4 · நீதிமொழிகள் 18:10 · சங்கீதம் 91:14 · நீதிமொழிகள் 16:20 · யோவான் 12:42-43
26ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.
Relatedநீதிமொழிகள் 19:6 · நீதிமொழிகள் 19:21 · சங்கீதம் 20:9 · ஏசாயா 46:9-11 · சங்கீதம் 62:12 · தானியேல் 4:35
27நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.
RelatedI யோவான் 3:13 · யோவான் 15:17-19 · சங்கீதம் 139:21 · யோவான் 7:7 · யோவான் 15:23 · நீதிமொழிகள் 29:10
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS