நீதிமொழிகள் 19
Tamil Bible (BSI 1957) • 29 verses
1மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி.
Relatedநீதிமொழிகள் 28:6 · நீதிமொழிகள் 16:8 · மத்தேயு 16:26 · நீதிமொழிகள் 19:22 · நீதிமொழிகள் 20:7 · நீதிமொழிகள் 14:2
2ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
Relatedநீதிமொழிகள் 21:5 · நீதிமொழிகள் 29:20 · பிலிப்பியர் 1:9 · பிரசங்கி 7:9 · ஏசாயா 28:16 · ஓசியா 4:6
3மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 16:9-11 · சங்கீதம் 37:7 · நீதிமொழிகள் 11:3 · II நாளாகமம் 16:9-10 · I சாமுவேல் 22:13-23 · எண்ணாகமம் 16:19-41
4செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான்.
Relatedநீதிமொழிகள் 14:20 · நீதிமொழிகள் 19:6-7 · லூக்கா 15:13-15 · யோபு 19:13-17 · யோபு 6:15-23 · நீதிமொழிகள் 10:15
5பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
Relatedநீதிமொழிகள் 21:28 · நீதிமொழிகள் 6:19 · யாத்திராகமம் 23:1 · நீதிமொழிகள் 19:9 · தானியேல் 6:24 · உபாகமம் 5:11
6பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.
Relatedநீதிமொழிகள் 29:26 · நீதிமொழிகள் 18:16 · நீதிமொழிகள் 17:8 · ஆதியாகமம் 42:6 · ரோமர் 6:23 · நீதிமொழிகள் 19:12
7தரித்திரனை அவனுடைய சகோதரர் எல்லாரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாய் அவன் சிநேகிதர் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.
Relatedசங்கீதம் 88:8 · யாக்கோபு 2:15-16 · நீதிமொழிகள் 18:23 · சங்கீதம் 38:11 · I யோவான் 3:17-18 · நீதிமொழிகள் 19:4
8ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
Relatedநீதிமொழிகள் 16:20 · நீதிமொழிகள் 8:35-36 · நீதிமொழிகள் 4:6 · நீதிமொழிகள் 3:18 · I பேதுரு 3:10 · யோவான் 14:21
9பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 22:15 · நீதிமொழிகள் 19:5 · வெளிப்படுத்தின விசேஷம் 19:20 · II பேதுரு 2:1-3 · வெளிப்படுத்தின விசேஷம் 21:8 · எரேமியா 28:15-17
10மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது.
Relatedநீதிமொழிகள் 30:21-22 · நீதிமொழிகள் 26:1 · லூக்கா 16:23 · லூக்கா 16:19 · II சாமுவேல் 3:39 · ஏசாயா 3:5
11மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
Relatedநீதிமொழிகள் 16:32 · நீதிமொழிகள் 14:29 · யாக்கோபு 1:19 · கொலோசெயர் 3:12-13 · நீதிமொழிகள் 15:18 · நீதிமொழிகள் 20:3
12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
Relatedஓசியா 14:5 · லூக்கா 12:4-5 · நீதிமொழிகள் 20:2 · நீதிமொழிகள் 16:14-15 · நீதிமொழிகள் 28:15 · சங்கீதம் 133:3
13மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
Relatedநீதிமொழிகள் 27:15 · நீதிமொழிகள் 21:9 · நீதிமொழிகள் 25:24 · நீதிமொழிகள் 10:1 · யோபு 14:19 · நீதிமொழிகள் 17:25
14வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.
Relatedநீதிமொழிகள் 18:22 · நீதிமொழிகள் 31:10-31 · நீதிமொழிகள் 13:22 · நீதிமொழிகள் 3:6 · யாக்கோபு 1:17 · II கொரிந்தியர் 12:14
15சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
Relatedநீதிமொழிகள் 23:21 · நீதிமொழிகள் 20:13 · II தெசலோனிக்கேயர் 3:10 · நீதிமொழிகள் 6:9-10 · ரோமர் 13:11-12 · நீதிமொழிகள் 24:33
16கட்டளையை காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
Relatedநீதிமொழிகள் 13:13 · லூக்கா 10:28 · I யோவான் 5:3 · லூக்கா 11:28 · I யோவான் 3:22 · நீதிமொழிகள் 16:17
17ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
Relatedநீதிமொழிகள் 28:27 · எபிரெயர் 6:10 · லூக்கா 6:38 · II கொரிந்தியர் 9:6-8 · மத்தேயு 25:40 · பிரசங்கி 11:1
18நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.
Relatedநீதிமொழிகள் 13:24 · நீதிமொழிகள் 29:15 · நீதிமொழிகள் 22:15 · நீதிமொழிகள் 23:13-14 · எபிரெயர் 12:7-10 · நீதிமொழிகள் 29:17
19கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.
Relatedநீதிமொழிகள் 25:28 · I சாமுவேல் 24:17-22 · நீதிமொழிகள் 29:22 · II சாமுவேல் 16:5-6 · நீதிமொழிகள் 22:24-25 · I சாமுவேல் 22:7-23
20உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
Relatedநீதிமொழிகள் 12:15 · நீதிமொழிகள் 8:34-35 · நீதிமொழிகள் 2:1-9 · நீதிமொழிகள் 4:1 · நீதிமொழிகள் 1:8 · எண்ணாகமம் 23:10
21மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.
Relatedநீதிமொழிகள் 16:9 · ஏசாயா 14:24 · நீதிமொழிகள் 16:1 · சங்கீதம் 33:10-11 · ஏசாயா 46:10 · நீதிமொழிகள் 21:30
22நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப் பார்க்கிலும் தரித்திரன் வாசி.
RelatedII கொரிந்தியர் 8:12 · மாற்கு 14:6-8 · II நாளாகமம் 6:8 · மாற்கு 12:41-44 · தீத்து 1:2 · நீதிமொழிகள் 19:1
23கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
Relatedமத்தேயு 5:6 · நீதிமொழிகள் 14:26-27 · நீதிமொழிகள் 12:21 · ஏசாயா 58:10-11 · I தீமோத்தேயு 4:8 · எபிரெயர் 13:5-6
24சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.
Relatedநீதிமொழிகள் 15:19 · நீதிமொழிகள் 26:13-16 · நீதிமொழிகள் 6:9-10 · நீதிமொழிகள் 24:30-34 · மாற்கு 14:20 · நீதிமொழிகள் 12:27
25பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
Relatedநீதிமொழிகள் 21:11 · நீதிமொழிகள் 17:10 · நீதிமொழிகள் 15:5 · வெளிப்படுத்தின விசேஷம் 3:19 · நீதிமொழிகள் 9:8-10 · உபாகமம் 21:21
26தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.
Relatedநீதிமொழிகள் 10:5 · நீதிமொழிகள் 17:2 · நீதிமொழிகள் 28:24 · நீதிமொழிகள் 30:17 · நீதிமொழிகள் 28:14 · நீதிமொழிகள் 17:25
27என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.
RelatedI தீமோத்தேயு 6:3-5 · மாற்கு 4:24 · நீதிமொழிகள் 14:7 · I யோவான் 4:1 · மத்தேயு 7:15 · II கொரிந்தியர் 11:13-15
28பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.
Relatedயோபு 15:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:11-13 · யோபு 34:7 · லூக்கா 18:2-4 · I இராஜாக்கள் 21:13 · யோபு 20:12-13
29பரியாசக்காரருக்கு தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS