நீதிமொழிகள் 10
Tamil Bible (BSI 1957) • 32 verses
1சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.
Relatedநீதிமொழிகள் 1:1 · நீதிமொழிகள் 17:25 · நீதிமொழிகள் 29:15 · நீதிமொழிகள் 23:15-16 · நீதிமொழிகள் 29:3 · நீதிமொழிகள் 23:24-25
2அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.
Relatedநீதிமொழிகள் 11:4 · நீதிமொழிகள் 12:28 · நீதிமொழிகள் 21:6 · சங்கீதம் 49:6-10 · செப்பனியா 1:18 · ரோமர் 5:21
3கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.
Relatedசங்கீதம் 37:3 · மத்தேயு 6:30-33 · சங்கீதம் 37:25 · சங்கீதம் 34:9-10 · சங்கீதம் 33:19 · சங்கீதம் 37:19
4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
Relatedநீதிமொழிகள் 19:15 · நீதிமொழிகள் 20:4 · நீதிமொழிகள் 13:4 · நீதிமொழிகள் 21:5 · நீதிமொழிகள் 12:24 · நீதிமொழிகள் 6:6-11
5கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புகாலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.
Relatedநீதிமொழிகள் 6:8 · நீதிமொழிகள் 30:25 · நீதிமொழிகள் 17:2 · நீதிமொழிகள் 19:26 · நீதிமொழிகள் 6:6 · நீதிமொழிகள் 12:4
6நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
Relatedஉபாகமம் 28:2 · நீதிமொழிகள் 28:20 · நீதிமொழிகள் 24:25 · யோபு 29:13 · நீதிமொழிகள் 10:11 · II தீமோத்தேயு 1:16-18
7நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.
Relatedசங்கீதம் 112:6 · லூக்கா 1:48 · மாற்கு 14:9 · சங்கீதம் 109:13 · II நாளாகமம் 24:16 · சங்கீதம் 109:15
8இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.
Relatedமத்தேயு 7:24-25 · யாக்கோபு 3:13 · நீதிமொழிகள் 12:1 · நீதிமொழிகள் 9:9 · சங்கீதம் 119:34 · நீதிமொழிகள் 18:6-7
9உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
Relatedநீதிமொழிகள் 28:18 · சங்கீதம் 26:11-12 · மத்தேயு 10:26 · ஏசாயா 33:15-16 · I கொரிந்தியர் 4:5 · லூக்கா 12:1-2
10கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.
Relatedசங்கீதம் 35:19 · நீதிமொழிகள் 6:13 · நீதிமொழிகள் 10:8 · III யோவான் 1:10 · நீதிமொழிகள் 18:21 · நீதிமொழிகள் 18:6-7
11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
Relatedநீதிமொழிகள் 13:14 · எபேசியர் 4:29 · நீதிமொழிகள் 18:4 · நீதிமொழிகள் 10:6 · நீதிமொழிகள் 10:20-21 · நீதிமொழிகள் 15:7
12பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.
RelatedI பேதுரு 4:8 · I கொரிந்தியர் 13:4-7 · நீதிமொழிகள் 17:9 · நீதிமொழிகள் 15:18 · யாக்கோபு 5:20 · யாக்கோபு 4:1
13புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.
Relatedநீதிமொழிகள் 26:3 · நீதிமொழிகள் 6:32 · ஏசாயா 50:4 · நீதிமொழிகள் 15:7 · நீதிமொழிகள் 15:23 · நீதிமொழிகள் 10:10-11
14ஞானவான்கள் அறிவைச் சேர்த்து வைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.
Relatedநீதிமொழிகள் 10:8 · நீதிமொழிகள் 18:7 · நீதிமொழிகள் 13:3 · நீதிமொழிகள் 9:9 · நீதிமொழிகள் 10:10 · நீதிமொழிகள் 18:15
15ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும்.
Relatedநீதிமொழிகள் 18:11 · நீதிமொழிகள் 19:7 · சங்கீதம் 52:7 · நீதிமொழிகள் 14:20 · நீதிமொழிகள் 22:22-23 · பிரசங்கி 7:12
16நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.
Relatedரோமர் 6:23 · ஏசாயா 3:10-11 · யோவான் 6:27 · எபிரெயர் 6:10 · நீதிமொழிகள் 11:18-19 · I கொரிந்தியர் 15:58
17புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.
RelatedII பேதுரு 1:5-11 · நீதிமொழிகள் 15:10 · நீதிமொழிகள் 6:23 · லூக்கா 11:28 · நீதிமொழிகள் 5:12 · நீதிமொழிகள் 3:18
18பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.
Relatedநீதிமொழிகள் 26:24-26 · சங்கீதம் 55:21 · II சாமுவேல் 3:27 · சங்கீதம் 15:3 · II சாமுவேல் 13:23-29 · சங்கீதம் 12:2
19சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
Relatedயாக்கோபு 1:19 · யாக்கோபு 3:2 · நீதிமொழிகள் 17:27-28 · பிரசங்கி 10:13-14 · பிரசங்கி 5:3 · சங்கீதம் 39:1
20நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
Relatedஆதியாகமம் 6:5 · நீதிமொழிகள் 12:18 · எரேமியா 17:9 · மத்தேயு 12:34-35 · நீதிமொழிகள் 15:4 · நீதிமொழிகள் 8:19
21நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.
Relatedஓசியா 4:6 · நீதிமொழிகள் 17:16 · நீதிமொழிகள் 1:29 · மத்தேயு 13:19 · யோபு 4:3-4 · பிரசங்கி 12:9-10
22கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.
Relatedசங்கீதம் 107:38 · ஆதியாகமம் 26:12 · I சாமுவேல் 2:7-8 · ஆதியாகமம் 24:35 · ஆதியாகமம் 12:2 · உபாகமம் 8:17-18
23தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
Relatedநீதிமொழிகள் 15:21 · நீதிமொழிகள் 14:9 · நீதிமொழிகள் 2:14 · நீதிமொழிகள் 26:18-19 · பிரசங்கி 11:9
24துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
25சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்;
Relatedசங்கீதம் 15:5 · சங்கீதம் 58:9 · மத்தேயு 7:24-27 · நீதிமொழிகள் 12:3 · I தீமோத்தேயு 6:19 · ஏசாயா 40:24
26பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
Relatedநீதிமொழிகள் 25:13 · நீதிமொழிகள் 26:6 · நீதிமொழிகள் 25:20 · மத்தேயு 25:26 · ரோமர் 12:11 · ஏசாயா 65:5
27கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போகும்.
Relatedநீதிமொழிகள் 9:11 · நீதிமொழிகள் 3:2 · சங்கீதம் 91:16 · யோபு 15:32-33 · சங்கீதம் 34:11-13 · யோபு 22:15-16
28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.
Relatedயோபு 8:13 · சங்கீதம் 73:24-26 · ரோமர் 15:13 · நீதிமொழிகள் 11:7 · II தெசலோனிக்கேயர் 2:16 · நீதிமொழிகள் 14:32
29கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.
Relatedநீதிமொழிகள் 21:15 · ரோமர் 2:8-9 · பிலிப்பியர் 4:13 · சகரியா 10:12 · சங்கீதம் 84:7 · ஏசாயா 40:31
30நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.
Relatedசங்கீதம் 37:22 · சங்கீதம் 125:1 · சங்கீதம் 37:28-29 · சங்கீதம் 37:9-10 · நீதிமொழிகள் 2:21-22 · நீதிமொழிகள் 10:25
31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.
Relatedசங்கீதம் 37:30 · நீதிமொழிகள் 10:13 · நீதிமொழிகள் 10:20-21 · சங்கீதம் 63:11 · நீதிமொழிகள் 10:11 · சங்கீதம் 31:18
32நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS