நீதிமொழிகள் 12
Tamil Bible (BSI 1957) • 28 verses
1புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
Relatedநீதிமொழிகள் 15:10 · நீதிமொழிகள் 9:7-8 · சங்கீதம் 119:97-100 · நீதிமொழிகள் 5:12-13 · நீதிமொழிகள் 18:1 · சங்கீதம் 32:9
2நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.
Relatedநீதிமொழிகள் 8:35 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:24 · சங்கீதம் 112:5 · ரோமர் 5:7 · நீதிமொழிகள் 1:31 · ஏசாயா 32:5-7
3துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.
Relatedநீதிமொழிகள் 10:25 · எபேசியர் 3:17 · நீதிமொழிகள் 12:12 · கொலோசெயர் 2:7 · யோபு 27:16-18 · சங்கீதம் 125:1-2
4குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.
Relatedநீதிமொழிகள் 31:10-25 · நீதிமொழிகள் 14:1 · நீதிமொழிகள் 14:30 · நீதிமொழிகள் 19:13-14 · நீதிமொழிகள் 21:19 · I கொரிந்தியர் 11:11
5நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள்.
Relatedசங்கீதம் 139:23 · ஏசாயா 55:7 · சங்கீதம் 41:6-7 · எரேமியா 4:14 · சங்கீதம் 140:1-3 · I கொரிந்தியர் 4:5
6துன்மார்க்கரின் வார்த்தைகள் இரத்தஞ்சிந்தப் பதிவிருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.
Relatedநீதிமொழிகள் 14:3 · எரேமியா 5:26 · நீதிமொழிகள் 1:11-19 · ஏசாயா 59:7 · II சாமுவேல் 17:1-4 · எஸ்தர் 4:7-14
7துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.
Relatedமத்தேயு 7:24-27 · நீதிமொழிகள் 11:21 · நீதிமொழிகள் 10:25 · யோபு 11:20 · எஸ்தர் 9:14 · யோபு 27:18-23
8தன் புத்திக்குத்தக்கதாக மனுஷன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.
Relatedநீதிமொழிகள் 3:35 · II கொரிந்தியர் 10:18 · மல்கியா 2:8-9 · மத்தேயு 27:4-5 · I கொரிந்தியர் 3:10-15 · I கொரிந்தியர் 4:5
9ஆகாரமில்லாதவனாயிருந்தும், தன்னைத்தான் கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும், கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.
10நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.
Relatedஉபாகமம் 25:4 · ஆதியாகமம் 33:13-14 · எண்ணாகமம் 22:28-32 · யாக்கோபு 2:13-16 · I யோவான் 3:17 · ஆதியாகமம் 37:26-28
11தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.
Relatedநீதிமொழிகள் 28:19 · நீதிமொழிகள் 14:23 · I தெசலோனிக்கேயர் 4:11-12 · சங்கீதம் 128:2 · எபேசியர் 4:28 · II தெசலோனிக்கேயர் 3:8
12துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.
Relatedஎரேமியா 17:7-8 · லூக்கா 8:13-15 · நீதிமொழிகள் 29:5-6 · யோவான் 15:5 · சங்கீதம் 1:3 · ஏசாயா 37:31
13துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்.
Relatedநீதிமொழிகள் 21:23 · நீதிமொழிகள் 11:8 · சங்கீதம் 64:8 · நீதிமொழிகள் 6:2 · தானியேல் 6:24 · II பேதுரு 2:9
14அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
Relatedநீதிமொழிகள் 18:20-21 · ஏசாயா 3:10-11 · நீதிமொழிகள் 13:2 · சங்கீதம் 63:5 · மத்தேயு 10:41-42 · நீதிமொழிகள் 15:23
15மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
Relatedநீதிமொழிகள் 3:7 · நீதிமொழிகள் 19:20 · நீதிமொழிகள் 26:12 · நீதிமொழிகள் 14:16 · நீதிமொழிகள் 16:2 · நீதிமொழிகள் 16:25
16மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
Relatedநீதிமொழிகள் 29:11 · யாக்கோபு 1:19 · நீதிமொழிகள் 10:12 · நீதிமொழிகள் 17:9 · நீதிமொழிகள் 25:28 · நீதிமொழிகள் 14:33
17சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
Relatedநீதிமொழிகள் 14:25 · நீதிமொழிகள் 14:5 · நீதிமொழிகள் 24:28 · நீதிமொழிகள் 6:19 · நீதிமொழிகள் 21:28 · நீதிமொழிகள் 19:28
18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.
Relatedநீதிமொழிகள் 16:24 · நீதிமொழிகள் 15:4 · நீதிமொழிகள் 10:20-21 · சங்கீதம் 57:4 · யாக்கோபு 3:6-8 · சங்கீதம் 52:2
19சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்;
Relatedநீதிமொழிகள் 19:9 · சங்கீதம் 52:4-5 · யோபு 20:5 · சகரியா 1:4-6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:3-10 · மத்தேயு 24:35
20தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம்பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம்.
Relatedமத்தேயு 5:9 · மாற்கு 7:21-22 · I பேதுரு 3:8-13 · எரேமியா 17:16 · நீதிமொழிகள் 12:12 · எபிரெயர் 12:14
21நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.
RelatedI பேதுரு 3:13 · சங்கீதம் 91:10 · ரோமர் 8:28 · நீதிமொழிகள் 1:31 · எரேமியா 13:12-14 · நீதிமொழிகள் 14:14
22பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
Relatedசங்கீதம் 5:6 · நீதிமொழிகள் 6:16-17 · நீதிமொழிகள் 11:20 · வெளிப்படுத்தின விசேஷம் 22:15 · எரேமியா 9:24 · நீதிமொழிகள் 11:1
23விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
Relatedநீதிமொழிகள் 13:16 · நீதிமொழிகள் 10:19 · நீதிமொழிகள் 11:13 · நீதிமொழிகள் 10:14 · நீதிமொழிகள் 15:2 · பிரசங்கி 10:12-14
24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்.
Relatedநீதிமொழிகள் 12:27 · நீதிமொழிகள் 21:25-26 · நீதிமொழிகள் 10:4 · நீதிமொழிகள் 13:4 · நீதிமொழிகள் 19:15 · நீதிமொழிகள் 22:29
25மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
Relatedநீதிமொழிகள் 16:24 · நீதிமொழிகள் 15:13 · நீதிமொழிகள் 17:22 · ஏசாயா 50:4 · நீதிமொழிகள் 15:23 · நீதிமொழிகள் 12:18
26நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
RelatedI யோவான் 2:26 · யாக்கோபு 1:13-14 · மத்தேயு 5:46-48 · சங்கீதம் 18:12-13 · நீதிமொழிகள் 17:27 · நீதிமொழிகள் 12:13
27சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
Relatedநீதிமொழிகள் 13:4 · நீதிமொழிகள் 26:15 · சங்கீதம் 37:16 · நீதிமொழிகள் 15:16 · நீதிமொழிகள் 23:2 · நீதிமொழிகள் 16:8
28நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS