நீதிமொழிகள் 17
Tamil Bible (BSI 1957) • 28 verses
1சண்டையோடுகூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.
2புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.
Relatedநீதிமொழிகள் 10:5 · நீதிமொழிகள் 14:35 · பிரசங்கி 4:13 · நீதிமொழிகள் 19:26 · நீதிமொழிகள் 29:15 · நீதிமொழிகள் 11:29
3வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.
Relatedஏசாயா 48:10 · எரேமியா 17:10 · சங்கீதம் 26:2 · நீதிமொழிகள் 27:21 · I நாளாகமம் 29:17 · I பேதுரு 1:7
4துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
RelatedII தீமோத்தேயு 4:3-4 · நீதிமொழிகள் 28:4 · I யோவான் 4:5 · ஏசாயா 30:10 · எரேமியா 5:31 · வெளிப்படுத்தின விசேஷம் 13:3-8
5ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.
Relatedநீதிமொழிகள் 14:31 · யோபு 31:29 · I யோவான் 3:17 · ஒபதியா 1:11-13 · நீதிமொழிகள் 16:5 · நீதிமொழிகள் 24:17-18
6பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.
Relatedசங்கீதம் 127:3-5 · நீதிமொழிகள் 16:31 · நீதிமொழிகள் 13:22 · சங்கீதம் 128:3-6 · யாத்திராகமம் 3:14-15 · ஆதியாகமம் 50:23
7மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.
Relatedநீதிமொழிகள் 29:12 · சங்கீதம் 50:16-17 · சங்கீதம் 101:3-5 · மத்தேயு 7:5 · II சாமுவேல் 23:3 · நீதிமொழிகள் 12:19
8பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம் போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
9குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
10மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 3:19 · நீதிமொழிகள் 9:8-9 · நீதிமொழிகள் 13:1 · நீதிமொழிகள் 19:25 · நீதிமொழிகள் 27:22 · நீதிமொழிகள் 15:5
11துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
RelatedI இராஜாக்கள் 2:46 · II சாமுவேல் 16:5-9 · II சாமுவேல் 18:15 · I இராஜாக்கள் 2:24-25 · II சாமுவேல் 20:22 · மத்தேயு 21:41
12தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி.
RelatedII சாமுவேல் 17:8 · ஓசியா 13:8 · நீதிமொழிகள் 28:15 · நீதிமொழிகள் 27:3 · II இராஜாக்கள் 2:24 · மத்தேயு 2:16
13நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.
Relatedசங்கீதம் 109:4-13 · I பேதுரு 3:9 · ரோமர் 12:17 · சங்கீதம் 55:12-15 · சங்கீதம் 38:20 · சங்கீதம் 35:12
14சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.
Relatedநீதிமொழிகள் 20:3 · நீதிமொழிகள் 25:8 · II தீமோத்தேயு 2:23-24 · I தெசலோனிக்கேயர் 4:11 · பிரசங்கி 7:8-9 · நீதிமொழிகள் 19:11
15துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
Relatedயாத்திராகமம் 23:7 · நீதிமொழிகள் 18:5 · ஏசாயா 5:23 · நீதிமொழிகள் 24:23-24 · ஆமோஸ் 6:12 · ஏசாயா 55:8-9
16ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
Relatedநீதிமொழிகள் 21:25-26 · நீதிமொழிகள் 23:23 · உபாகமம் 5:29 · நீதிமொழிகள் 8:4-5 · நீதிமொழிகள் 18:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:26-27
17சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
Relatedநீதிமொழிகள் 18:24 · யோவான் 15:13-14 · I சாமுவேல் 20:17 · ரூத் 1:16 · நீதிமொழிகள் 19:7 · I சாமுவேல் 18:3
18புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான்.
Relatedநீதிமொழிகள் 11:15 · நீதிமொழிகள் 6:1-5 · நீதிமொழிகள் 22:26-27 · நீதிமொழிகள் 20:16 · நீதிமொழிகள் 22:16
19வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
Relatedநீதிமொழிகள் 16:18 · நீதிமொழிகள் 18:12 · I சாமுவேல் 25:36-38 · யாக்கோபு 3:14-16 · நீதிமொழிகள் 17:14 · நீதிமொழிகள் 29:22-23
20மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
Relatedயாக்கோபு 3:6-8 · நீதிமொழிகள் 10:31 · நீதிமொழிகள் 6:12-15 · சங்கீதம் 18:26 · நீதிமொழிகள் 3:32 · பிரசங்கி 10:12
21மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
Relatedநீதிமொழிகள் 10:1 · நீதிமொழிகள் 19:13 · I சாமுவேல் 2:32-35 · நீதிமொழிகள் 23:15-16 · ஆதியாகமம் 26:34 · நீதிமொழிகள் 17:25
22மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.
Relatedநீதிமொழிகள் 15:13 · நீதிமொழிகள் 12:25 · நீதிமொழிகள் 18:14 · II கொரிந்தியர் 7:10 · பிரசங்கி 9:7-9 · ரோமர் 5:2-5
23துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட. மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான்.
Relatedநீதிமொழிகள் 17:8 · மீகா 7:3 · யாத்திராகமம் 23:8 · உபாகமம் 16:19 · ஏசாயா 1:23 · நீதிமொழிகள் 18:16
24ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும்.
Relatedபிரசங்கி 2:14 · பிரசங்கி 8:1 · சங்கீதம் 119:37 · நீதிமொழிகள் 14:6 · யோவான் 7:17 · I யோவான் 2:16
25மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
Relatedநீதிமொழிகள் 10:1 · நீதிமொழிகள் 15:20 · II சாமுவேல் 13:1-22 · நீதிமொழிகள் 19:13 · பிரசங்கி 2:18-19
26நீதிமானை தண்டம் பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
Relatedநீதிமொழிகள் 17:15 · நீதிமொழிகள் 18:5 · யோவான் 18:22 · யோபு 34:18-19 · ஆதியாகமம் 18:25 · II சாமுவேல் 3:39
27அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
Relatedயாக்கோபு 3:18 · யாக்கோபு 1:19 · நீதிமொழிகள் 14:29 · நீதிமொழிகள் 10:19 · நீதிமொழிகள் 15:28 · யாக்கோபு 3:2
28பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS