நீதிமொழிகள் 20
Tamil Bible (BSI 1957) • 30 verses
1திராட்சரசம் பரியாசஞ்செய்யும்; மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.
Relatedஎபேசியர் 5:18 · ஓசியா 4:11 · ஏசாயா 28:7 · I கொரிந்தியர் 6:10 · நீதிமொழிகள் 31:4 · கலாத்தியர் 5:21
2ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான்.
Relatedநீதிமொழிகள் 19:12 · பிரசங்கி 10:4 · நீதிமொழிகள் 8:36 · I இராஜாக்கள் 2:23 · ஆமோஸ் 3:8 · நீதிமொழிகள் 16:14-15
3வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.
Relatedநீதிமொழிகள் 16:32 · நீதிமொழிகள் 17:14 · நீதிமொழிகள் 19:11 · நீதிமொழிகள் 14:29 · எபேசியர் 4:32-5:1 · நீதிமொழிகள் 18:6
4சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.
Relatedநீதிமொழிகள் 10:4 · நீதிமொழிகள் 19:15 · நீதிமொழிகள் 13:4 · மத்தேயு 25:24-28 · மத்தேயு 25:3-10 · நீதிமொழிகள் 26:13-16
5மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.
6மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?
7நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.
Relatedசங்கீதம் 112:2 · சங்கீதம் 37:26 · எரேமியா 32:39 · II கொரிந்தியர் 1:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:39 · III யோவான் 1:3-4
8நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.
Relatedநீதிமொழிகள் 25:5 · நீதிமொழிகள் 20:26 · சங்கீதம் 99:4 · நீதிமொழிகள் 29:14 · சங்கீதம் 92:9 · ஏசாயா 32:1
9என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?
10வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
Relatedநீதிமொழிகள் 20:23 · நீதிமொழிகள் 11:1 · லேவியராகமம் 19:35 · நீதிமொழிகள் 16:11 · உபாகமம் 25:13-15 · மீகா 6:10-11
11பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.
Relatedமத்தேயு 7:16 · லூக்கா 6:43-44 · நீதிமொழிகள் 21:8 · லூக்கா 2:46-47 · லூக்கா 1:15 · சங்கீதம் 51:5
12கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.
Relatedமத்தேயு 13:13-16 · சங்கீதம் 94:9 · சங்கீதம் 119:18 · எபேசியர் 1:17-18 · யாத்திராகமம் 4:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18
13தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.
Relatedநீதிமொழிகள் 19:15 · ரோமர் 12:11 · நீதிமொழிகள் 10:4 · நீதிமொழிகள் 12:11 · ரோமர் 13:11 · யோனா 1:6
14கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.
15பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.
Relatedநீதிமொழிகள் 25:12 · நீதிமொழிகள் 8:11 · நீதிமொழிகள் 16:16 · நீதிமொழிகள் 16:24 · ரோமர் 10:14-15 · நீதிமொழிகள் 3:15
16அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்; அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடுவாங்கிக்கொள்.
Relatedநீதிமொழிகள் 27:13 · யாத்திராகமம் 22:26-27 · நீதிமொழிகள் 22:26-27 · நீதிமொழிகள் 11:15 · நீதிமொழிகள் 7:5 · நீதிமொழிகள் 2:16
17வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.
Relatedபிரசங்கி 11:9 · நீதிமொழிகள் 9:17-18 · புலம்பல் 3:15-16 · யோபு 20:12-20 · எபிரெயர் 11:25 · நீதிமொழிகள் 4:17
18ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.
Relatedநீதிமொழிகள் 15:22 · நீதிமொழிகள் 24:6 · லூக்கா 14:31 · நீதிமொழிகள் 11:14 · நியாயாதிபதிகள் 1:1-2 · நியாயாதிபதிகள் 20:18
19தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.
Relatedநீதிமொழிகள் 11:13 · நீதிமொழிகள் 18:8 · நீதிமொழிகள் 13:3 · ரோமர் 16:18 · லேவியராகமம் 19:16 · நீதிமொழிகள் 24:21
20தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோகும்.
Relatedயாத்திராகமம் 21:17 · நீதிமொழிகள் 30:11 · நீதிமொழிகள் 30:17 · மத்தேயு 15:4 · யூதா 1:13 · உபாகமம் 27:16
21ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.
RelatedI தீமோத்தேயு 6:9 · நீதிமொழிகள் 13:22 · நீதிமொழிகள் 28:8 · நீதிமொழிகள் 28:20 · ஆபகூக் 2:6 · யோபு 27:16-17
22தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.
Relatedரோமர் 12:17-19 · I தெசலோனிக்கேயர் 5:15 · நீதிமொழிகள் 24:29 · நீதிமொழிகள் 17:13 · I பேதுரு 3:9 · உபாகமம் 32:35
23வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.
24கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?
Relatedநீதிமொழிகள் 16:9 · எரேமியா 10:23 · சங்கீதம் 25:12 · சங்கீதம் 37:23 · சங்கீதம் 25:4 · நீதிமொழிகள் 14:8
25பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.
Relatedபிரசங்கி 5:4-6 · மத்தேயு 5:33 · லேவியராகமம் 27:9-10 · எண்ணாகமம் 30:2-16 · மல்கியா 3:8-10 · லேவியராகமம் 5:15
26ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரை சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.
Relatedநீதிமொழிகள் 20:8 · II சாமுவேல் 12:31 · II சாமுவேல் 4:9-12 · சங்கீதம் 101:5-8 · ஏசாயா 28:27-28
27மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
RelatedI கொரிந்தியர் 2:11 · எபிரெயர் 4:12-13 · யோபு 32:8 · I யோவான் 3:19-21 · ஆதியாகமம் 2:7 · ரோமர் 2:15
28தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்.
Relatedநீதிமொழிகள் 16:12 · நீதிமொழிகள் 29:14 · சங்கீதம் 26:1 · சங்கீதம் 101:1 · சங்கீதம் 21:7 · நீதிமொழிகள் 16:6
29வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.
30காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்.
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS