நீதிமொழிகள் 11
Tamil Bible (BSI 1957) • 31 verses
1கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.
Relatedஉபாகமம் 25:13-16 · நீதிமொழிகள் 16:11 · நீதிமொழிகள் 20:23 · லேவியராகமம் 19:35-36 · நீதிமொழிகள் 20:10 · ஓசியா 12:7
2அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
Relatedநீதிமொழிகள் 29:23 · நீதிமொழிகள் 16:18-19 · லூக்கா 18:14 · நீதிமொழிகள் 15:33 · நீதிமொழிகள் 18:12 · நீதிமொழிகள் 3:34-35
3செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
Relatedநீதிமொழிகள் 28:18 · நீதிமொழிகள் 13:6 · சங்கீதம் 26:1 · சங்கீதம் 25:21 · நீதிமொழிகள் 19:3 · யோவான் 7:17
4கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.
Relatedசெப்பனியா 1:18 · நீதிமொழிகள் 10:2 · ஆதியாகமம் 7:1 · எசேக்கியேல் 7:19 · I தீமோத்தேயு 4:8 · சங்கீதம் 49:6-8
5உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.
Relatedநீதிமொழிகள் 5:22 · சங்கீதம் 9:15-16 · நீதிமொழிகள் 11:3 · எஸ்தர் 7:3-10 · மத்தேயு 27:4-5 · நீதிமொழிகள் 1:31-32
6செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள்.
Relatedபிரசங்கி 10:8 · I சாமுவேல் 12:3-4 · I இராஜாக்கள் 2:44 · நீதிமொழிகள் 5:22 · சங்கீதம் 7:15-16 · I இராஜாக்கள் 2:32-33
7துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போகும்.
Relatedநீதிமொழிகள் 10:28 · யோபு 8:13-14 · யோபு 11:20 · சங்கீதம் 146:4 · நீதிமொழிகள் 14:32 · லூக்கா 12:19-20
8நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.
9மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.
Relatedநீதிமொழிகள் 2:10-16 · நீதிமொழிகள் 4:5-6 · I யோவான் 2:27 · I யோவான் 2:21 · II பேதுரு 2:1-3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:30
10நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.
Relatedநீதிமொழிகள் 28:12 · சங்கீதம் 58:10-11 · எஸ்தர் 8:15-16 · நீதிமொழிகள் 28:28 · நியாயாதிபதிகள் 5:31 · யோபு 27:23
11செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்துவிழும்.
Relatedநீதிமொழிகள் 14:34 · நீதிமொழிகள் 29:8 · யாக்கோபு 3:6 · யோபு 22:30 · பிரசங்கி 9:15 · II நாளாகமம் 32:20-22
12மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.
Relatedநீதிமொழிகள் 10:19 · I பேதுரு 2:23 · லூக்கா 18:9 · லூக்கா 16:14 · நீதிமொழிகள் 14:21 · சங்கீதம் 123:3-4
13புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
Relatedநீதிமொழிகள் 20:19 · நீதிமொழிகள் 25:9 · லேவியராகமம் 19:16 · I தீமோத்தேயு 5:13 · நீதிமொழிகள் 26:20-22 · யோசுவா 2:14
14ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
Relatedநீதிமொழிகள் 24:6 · நீதிமொழிகள் 15:22 · நீதிமொழிகள் 20:18 · நீதிமொழிகள் 16:22 · I இராஜாக்கள் 12:1-19 · ஏசாயா 19:11-14
15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.
16நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்.
Relatedநீதிமொழிகள் 31:30-31 · லூக்கா 10:42 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:14-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:39 · I சாமுவேல் 25:32-33 · லூக்கா 11:21-22
17தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.
Relatedமத்தேயு 5:7 · மத்தேயு 25:34-40 · யாக்கோபு 2:13 · யாக்கோபு 5:1-5 · தானியேல் 4:27 · பிலிப்பியர் 4:17
18துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.
Relatedகலாத்தியர் 6:8-9 · பிரசங்கி 10:8 · யாக்கோபு 3:18 · ஓசியா 10:12-13 · நீதிமொழிகள் 22:8 · சங்கீதம் 126:5-6
19நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.
Relatedநீதிமொழிகள் 10:16 · நீதிமொழிகள் 19:23 · நீதிமொழிகள் 12:28 · ரோமர் 2:8-9 · நீதிமொழிகள் 1:16-19 · நீதிமொழிகள் 8:36
20மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்.
Relatedசங்கீதம் 119:1 · சங்கீதம் 140:13 · நீதிமொழிகள் 21:29 · I நாளாகமம் 29:17 · சங்கீதம் 18:25-26 · சங்கீதம் 51:6
21கையோடே கைகோத்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
Relatedசங்கீதம் 112:1-2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:39 · எரேமியா 32:39 · சங்கீதம் 37:26 · நீதிமொழிகள் 16:5 · நீதிமொழிகள் 13:22
22மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.
RelatedI பேதுரு 3:3-4 · நீதிமொழிகள் 31:30 · நாகூம் 3:4-6 · நீதிமொழிகள் 9:13 · II பேதுரு 2:22 · நீதிமொழிகள் 7:10
23நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்.
24வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.
Relatedநீதிமொழிகள் 19:17 · லூக்கா 6:38 · உபாகமம் 15:10 · சங்கீதம் 112:9 · பிரசங்கி 11:6 · ஆகாய் 1:9-11
25உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
Relatedமத்தேயு 5:7 · II கொரிந்தியர் 9:6-9 · ஏசாயா 58:7-11 · மத்தேயு 25:34-35 · ஏசாயா 32:8 · நீதிமொழிகள் 28:27
26தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.
27நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
Relatedசங்கீதம் 7:15-16 · நீதிமொழிகள் 17:11 · சங்கீதம் 57:6 · எஸ்தர் 7:10 · சங்கீதம் 9:15-16 · சங்கீதம் 10:2
28தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.
RelatedI தீமோத்தேயு 6:17 · எரேமியா 17:8 · சங்கீதம் 52:7-8 · சங்கீதம் 1:3 · மாற்கு 10:24-25 · சங்கீதம் 92:12-14
29தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.
Relatedபிரசங்கி 5:16 · நீதிமொழிகள் 14:19 · ஆபகூக் 2:9-10 · நீதிமொழிகள் 15:27 · I சாமுவேல் 25:3 · ஆதியாகமம் 34:30
30நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.
Relatedதானியேல் 12:3 · யாக்கோபு 5:20 · I கொரிந்தியர் 9:19-23 · I தெசலோனிக்கேயர் 2:19 · நீதிமொழிகள் 3:18 · யோவான் 4:36
31இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS