I சாமுவேல் 16
Tamil Bible (BSI 1957) • 23 verses
1கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
RelatedI சாமுவேல் 15:23 · II இராஜாக்கள் 9:1 · சங்கீதம் 78:68-71 · I சாமுவேல் 15:35 · I சாமுவேல் 10:1 · ரோமர் 15:12
2அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி,
RelatedI சாமுவேல் 9:12 · I சாமுவேல் 20:29 · மத்தேயு 10:16 · லூக்கா 1:34 · எரேமியா 38:26-27 · I இராஜாக்கள் 18:9-14
3ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார்.
RelatedI சாமுவேல் 9:16 · I சாமுவேல் 16:12-13 · II சாமுவேல் 15:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:6 · I சாமுவேல் 9:12-13 · உபாகமம் 17:14-15
4கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள்.
RelatedI இராஜாக்கள் 2:13 · I நாளாகமம் 12:17-18 · I சாமுவேல் 21:1 · லூக்கா 5:8 · II இராஜாக்கள் 9:22 · I இராஜாக்கள் 17:18
5அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம்பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான்.
Relatedயோசுவா 3:5 · லேவியராகமம் 20:7-8 · யாத்திராகமம் 19:10 · யோசுவா 7:13 · யாத்திராகமம் 19:14-15 · I கொரிந்தியர் 11:28
6அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவன்தானாக்கும் என்றான்.
RelatedI சாமுவேல் 17:13 · I நாளாகமம் 2:13 · நியாயாதிபதிகள் 8:18 · I சாமுவேல் 17:22 · I இராஜாக்கள் 12:26 · I நாளாகமம் 27:18
7கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
8அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை என்றான்.
9ஈசாய் சம்மாவையும் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான்.
10இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;
RelatedI நாளாகமம் 2:13-15
11உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்.
Relatedசங்கீதம் 78:70-71 · II சாமுவேல் 7:8 · I சாமுவேல் 17:28 · I நாளாகமம் 17:7 · II சாமுவேல் 13:3 · I சாமுவேல் 17:12-15
12ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர் இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார்.
Relatedஉன்னதப்பாட்டு 5:10 · புலம்பல் 4:7 · I சாமுவேல் 17:42 · I சாமுவேல் 9:17 · சங்கீதம் 89:19-20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:27
13அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.
RelatedI சாமுவேல் 10:6 · எபிரெயர் 1:9 · யோவான் 3:34 · I சாமுவேல் 10:1 · நியாயாதிபதிகள் 11:29 · எண்ணாகமம் 27:18
14கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.
Relatedசங்கீதம் 51:11 · I சாமுவேல் 18:12 · நியாயாதிபதிகள் 9:23 · I சாமுவேல் 28:15 · I சாமுவேல் 18:10 · நியாயாதிபதிகள் 16:20
15அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே.
16சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள்.
RelatedII இராஜாக்கள் 3:15 · I இராஜாக்கள் 10:8 · I சாமுவேல் 18:10 · I சாமுவேல் 16:21-23 · I சாமுவேல் 19:9 · I சாமுவேல் 10:5
17சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
18அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்.
RelatedI சாமுவேல் 3:19 · ஆதியாகமம் 39:23 · ஆதியாகமம் 39:2 · I சாமுவேல் 17:32-36 · I சாமுவேல் 10:7 · மத்தேயு 28:20
19அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டு மந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.
Relatedசங்கீதம் 78:70-72 · I சாமுவேல் 16:11 · I சாமுவேல் 17:15 · I சாமுவேல் 17:33-34 · சங்கீதம் 113:8 · ஆமோஸ் 1:1
20அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான்.
RelatedI சாமுவேல் 10:27 · நீதிமொழிகள் 18:16 · I சாமுவேல் 17:18 · II சாமுவேல் 16:1-2 · ஆதியாகமம் 43:11 · I சாமுவேல் 25:18
21அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்.
Relatedஆதியாகமம் 41:46 · நீதிமொழிகள் 22:29 · சங்கீதம் 146:3 · சங்கீதம் 118:9 · உபாகமம் 10:8 · சங்கீதம் 62:9
22சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொல்லச் சொன்னான்.
23அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனை விட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான்.
📖 I சாமுவேல்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS