II சாமுவேல் 22
Tamil Bible (BSI 1957) • 51 verses
1கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, அவன் கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:
Relatedயாத்திராகமம் 15:1 · நியாயாதிபதிகள் 5:1 · ஏசாயா 12:1-6 · சங்கீதம் 116:1-19 · வெளிப்படுத்தின விசேஷம் 7:9-17 · II தீமோத்தேயு 4:18
2கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகருமானவர்.
Relatedசங்கீதம் 18:2-50 · சங்கீதம் 31:3 · சங்கீதம் 71:3 · உபாகமம் 32:4 · சங்கீதம் 91:2 · சங்கீதம் 144:2
3தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் இரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் இரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவர் அவரே.
Relatedசங்கீதம் 9:9 · ஏசாயா 12:2 · நீதிமொழிகள் 18:10 · நீதிமொழிகள் 30:5 · சங்கீதம் 18:2 · ஆதியாகமம் 15:1
4ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன்.
5மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
Relatedயோனா 2:3 · சங்கீதம் 69:14-15 · வெளிப்படுத்தின விசேஷம் 17:15 · சங்கீதம் 93:3-4 · வெளிப்படுத்தின விசேஷம் 17:1 · I தெசலோனிக்கேயர் 5:3
6பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
Relatedசங்கீதம் 116:3 · நீதிமொழிகள் 5:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:24 · யோனா 2:2 · நீதிமொழிகள் 14:27 · யோபு 36:8
7எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
Relatedசங்கீதம் 18:6 · சங்கீதம் 116:4 · யோனா 2:7 · யாத்திராகமம் 3:7 · சங்கீதம் 27:4 · சங்கீதம் 34:15-17
8அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
Relatedசங்கீதம் 97:4 · யோபு 26:11 · நியாயாதிபதிகள் 5:4 · சங்கீதம் 77:18 · மத்தேயு 28:2 · சங்கீதம் 18:7
9அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல் மூண்டது.
Relatedஎபிரெயர் 12:29 · சங்கீதம் 18:15 · ஆபகூக் 3:5 · சங்கீதம் 18:8 · யாத்திராகமம் 19:18 · யாத்திராகமம் 24:17
10வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
RelatedI இராஜாக்கள் 8:12 · சங்கீதம் 97:2 · யாத்திராகமம் 20:21 · சங்கீதம் 144:5 · லூக்கா 23:44-45 · நாகூம் 1:3
11கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின் மீதில் தரிசனமானார்.
Relatedசங்கீதம் 104:3 · எபிரெயர் 1:14 · சங்கீதம் 80:1 · சங்கீதம் 18:10 · ஆதியாகமம் 3:24 · சங்கீதம் 99:1
12ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
13அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
RelatedII சாமுவேல் 22:9
14கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்.
Relatedயோபு 37:2-5 · சங்கீதம் 29:3-9 · I சாமுவேல் 2:10 · I சாமுவேல் 7:10 · I சாமுவேல் 12:17-18 · சங்கீதம் 77:16-19
15அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
Relatedஉபாகமம் 32:23 · யோசுவா 10:10 · ஆபகூக் 3:11 · சங்கீதம் 18:14 · சங்கீதம் 45:5 · சங்கீதம் 144:6-7
16கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
Relatedநாகூம் 1:4 · யாத்திராகமம் 15:8-10 · ஆபகூக் 3:8-10 · சங்கீதம் 114:3-7 · யோபு 38:11 · சங்கீதம் 106:9
17உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
Relatedஏசாயா 43:2 · சங்கீதம் 144:7 · சங்கீதம் 18:16 · சங்கீதம் 130:1 · சங்கீதம் 32:6 · சங்கீதம் 124:4-5
18என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.
19என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
Relatedசங்கீதம் 71:20-21 · சங்கீதம் 23:4 · சங்கீதம் 118:10-13 · I சாமுவேல் 23:26-27 · I சாமுவேல் 19:11-17 · II சாமுவேல் 15:10-13
20என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.
Relatedசங்கீதம் 31:8 · II சாமுவேல் 15:26 · சங்கீதம் 118:5 · சங்கீதம் 22:8 · சங்கீதம் 149:4 · சங்கீதம் 147:11
21கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
Relatedசங்கீதம் 24:4 · I சாமுவேல் 26:23 · சங்கீதம் 7:8 · I இராஜாக்கள் 8:32 · யாக்கோபு 4:8 · யோபு 17:9
22கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லை.
Relatedநீதிமொழிகள் 8:32 · ஆதியாகமம் 18:19 · சங்கீதம் 128:1 · சங்கீதம் 119:1 · சங்கீதம் 36:3 · எபிரெயர் 10:38-39
23அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,
Relatedசங்கீதம் 119:102 · சங்கீதம் 119:30 · யோவான் 15:14 · சங்கீதம் 119:128 · சங்கீதம் 119:86 · உபாகமம் 6:1-2
24அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
Relatedஆதியாகமம் 6:9 · ஆதியாகமம் 17:1 · யோபு 1:1 · எபேசியர் 1:4 · எபிரெயர் 12:1 · II கொரிந்தியர் 5:11
25ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத் தக்கதாகவும், தம்முடைய கண்களுக்கு முன் இருக்கிற என் சுத்தத்திற்குத்தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
26தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,
27புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
Relatedசங்கீதம் 18:26 · மத்தேயு 5:8 · லேவியராகமம் 26:23-28 · ஏசாயா 45:9 · சங்கீதம் 125:5 · உபாகமம் 28:58-61
28சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையானவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பப்பட்டிருக்கிறது.
Relatedசங்கீதம் 72:12-13 · யாக்கோபு 4:6-7 · ஏசாயா 5:15 · யாத்திராகமம் 3:7-8 · ஏசாயா 2:17 · ஏசாயா 2:11-12
29கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.
Relatedசங்கீதம் 27:1 · யோவான் 8:12 · வெளிப்படுத்தின விசேஷம் 21:23 · யோவான் 12:46 · யோபு 29:3 · சங்கீதம் 112:4
30உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
31தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
Relatedஉபாகமம் 32:4 · நீதிமொழிகள் 30:5 · சங்கீதம் 18:30 · மத்தேயு 5:48 · சங்கீதம் 12:6 · சங்கீதம் 119:140
32கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்?
33தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
Relatedஎபேசியர் 6:10 · ஏசாயா 41:10 · சங்கீதம் 28:7-8 · சங்கீதம் 27:1 · பிலிப்பியர் 4:13 · எபிரெயர் 13:21
34அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
35வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
36உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
Relatedஎபேசியர் 6:16 · சங்கீதம் 84:11 · சங்கீதம் 115:14 · சங்கீதம் 18:35 · ஆதியாகமம் 22:17 · ஆதியாகமம் 15:1
37என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
Relatedநீதிமொழிகள் 4:12 · சங்கீதம் 17:5 · I சாமுவேல் 2:9 · சங்கீதம் 121:3 · சங்கீதம் 4:1 · சங்கீதம் 18:36
38என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன்.
Relatedசங்கீதம் 21:8-9 · ரோமர் 8:37 · II சாமுவேல் 8:1-2 · II சாமுவேல் 8:13-14 · II சாமுவேல் 5:18-25 · II சாமுவேல் 10:14
39அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு என் பாதங்களின் கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறிய அடித்து வெட்டினேன்.
Relatedமல்கியா 4:3 · சங்கீதம் 110:5-6 · சங்கீதம் 18:37 · சங்கீதம் 118:10-12 · சங்கீதம் 110:1 · மல்கியா 4:1
40யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர்.
41நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
Relatedயாத்திராகமம் 23:27 · யோசுவா 10:24 · சங்கீதம் 21:8-9 · லூக்கா 19:27 · II தெசலோனிக்கேயர் 1:8-9 · ஆதியாகமம் 49:8
42அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
Relatedஏசாயா 1:15 · I சாமுவேல் 28:6 · நீதிமொழிகள் 1:28 · மீகா 3:4 · லூக்கா 13:25-26 · மத்தேயு 7:22-23
43அவர்களை பூமியின் தூளாக இடித்து, தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறப்பண்ணுகிறேன்.
44என் ஜனத்தின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.
Relatedஏசாயா 55:5 · II சாமுவேல் 8:1-14 · II சாமுவேல் 3:1 · உபாகமம் 28:13 · II சாமுவேல் 19:9 · II சாமுவேல் 19:14
45அந்நியர் இச்சகம் பேசி எனக்கு அடங்கி, என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
Relatedசங்கீதம் 81:15 · சங்கீதம் 66:3 · ஏசாயா 56:3 · சங்கீதம் 18:44-45 · ஏசாயா 56:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:21-23
46அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.
47கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக.
48அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
Relatedசங்கீதம் 94:1 · சங்கீதம் 144:2 · II சாமுவேல் 18:31 · சங்கீதம் 110:1 · II சாமுவேல் 18:19 · I கொரிந்தியர் 15:25
49அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
Relatedசங்கீதம் 140:1 · II சாமுவேல் 7:8-9 · I சாமுவேல் 2:8 · சங்கீதம் 52:1 · சங்கீதம் 140:4 · சங்கீதம் 18:48
50இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
51தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
📖 II சாமுவேல்All 24 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS