மத்தேயு 4
Tamil Bible (BSI 1957) • 25 verses
1அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
Relatedஎபிரெயர் 2:18 · லூக்கா 4:1-13 · மாற்கு 1:12-15 · எபிரெயர் 4:15-16 · ரோமர் 8:14 · யோவான் 14:30
2அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
Relatedஉபாகமம் 9:18 · யாத்திராகமம் 34:28 · I இராஜாக்கள் 19:8 · லூக்கா 4:2 · உபாகமம் 9:9 · உபாகமம் 9:25
3அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
RelatedI தெசலோனிக்கேயர் 3:5 · ஆதியாகமம் 3:1-5 · எண்ணாகமம் 11:4-6 · லூக்கா 22:31-32 · வெளிப்படுத்தின விசேஷம் 2:10 · சங்கீதம் 78:17-20
4அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி:
Relatedலூக்கா 4:9 · வெளிப்படுத்தின விசேஷம் 11:2 · மத்தேயு 27:53 · ஏசாயா 48:2 · நெகேமியா 11:18 · நெகேமியா 11:1
6நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
Relatedசங்கீதம் 91:11-12 · எபிரெயர் 1:14 · சங்கீதம் 34:7 · II கொரிந்தியர் 11:14 · சங்கீதம் 34:20 · மத்தேயு 4:4
7அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
Relatedஉபாகமம் 6:16 · I கொரிந்தியர் 10:9 · சங்கீதம் 78:41 · சங்கீதம் 78:18 · எபிரெயர் 3:9 · யாத்திராகமம் 17:7
8மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
RelatedI யோவான் 2:15-16 · வெளிப்படுத்தின விசேஷம் 11:15 · லூக்கா 4:5-7 · மத்தேயு 16:26 · சங்கீதம் 49:16-17 · I பேதுரு 1:24
9நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்;
RelatedII கொரிந்தியர் 4:4 · வெளிப்படுத்தின விசேஷம் 22:8-9 · தானியேல் 5:18-19 · யோவான் 16:11 · வெளிப்படுத்தின விசேஷம் 19:10 · I கொரிந்தியர் 10:20-21
10அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
11அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.
Relatedமத்தேயு 26:53 · லூக்கா 22:43 · எபிரெயர் 1:14 · வெளிப்படுத்தின விசேஷம் 5:11-12 · லூக்கா 4:13 · லூக்கா 22:53
12யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய்,
13நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.
14கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,
15இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,
16ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
17அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
Relatedமத்தேயு 3:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38 · மாற்கு 1:14-15 · லூக்கா 5:32 · லூக்கா 24:47 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:30
18இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுகொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:
19என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
20உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
Relatedமாற்கு 10:28-31 · மத்தேயு 19:27 · I இராஜாக்கள் 19:21 · லூக்கா 18:28-30 · சங்கீதம் 119:60 · கலாத்தியர் 1:16
21அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக்கண்டு, அவர்களையும் அழைத்தார்.
Relatedமாற்கு 3:17 · மத்தேயு 10:2 · மாற்கு 1:19-20 · யோவான் 21:2 · லூக்கா 5:10-11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:2
22உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
23பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
Relatedமத்தேயு 9:35 · மாற்கு 1:39 · லூக்கா 7:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38 · மத்தேயு 11:5 · மத்தேயு 13:54
24அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
25கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.
📖 மத்தேயுAll 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS