ஏசாயா 52
Tamil Bible (BSI 1957) • 15 verses
1எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 21:27 · ஏசாயா 51:17 · சகரியா 3:4 · வெளிப்படுத்தின விசேஷம் 21:2 · ஏசாயா 51:9 · ஏசாயா 35:8
2தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.
Relatedஏசாயா 51:14 · லூக்கா 4:18 · எரேமியா 51:50 · ஏசாயா 61:1 · எரேமியா 51:45 · வெளிப்படுத்தின விசேஷம் 18:4
3விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள்; அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Relatedஆதியாகமம் 46:6 · சங்கீதம் 69:4 · யோபு 2:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:14-15 · சங்கீதம் 25:3 · எரேமியா 50:17
5இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Relatedரோமர் 2:24 · ஏசாயா 37:6 · எசேக்கியேல் 36:20-23 · ஏசாயா 47:6 · புலம்பல் 5:13-15 · எரேமியா 50:17
6இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Relatedஎசேக்கியேல் 37:13-14 · எசேக்கியேல் 20:44 · சகரியா 10:9-12 · எபிரெயர் 8:10-11 · யாத்திராகமம் 33:19 · எண்ணாகமம் 23:19
7சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம்பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
8உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய்க் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், கர்த்தர் சீயோனைத் திரும்பிவரப்பண்ணும்போது, அதைக் கண்ணாரக்காண்பார்கள்.
Relatedஏசாயா 62:6 · எரேமியா 32:39 · எசேக்கியேல் 33:7 · I கொரிந்தியர் 13:12 · ஏசாயா 40:9 · ஏசாயா 56:10
9எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்.
Relatedசங்கீதம் 98:4 · ஏசாயா 51:3 · ஏசாயா 48:20 · ஏசாயா 49:13 · சங்கீதம் 96:11-12 · செப்பனியா 3:14-15
10எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.
Relatedலூக்கா 3:6 · வெளிப்படுத்தின விசேஷம் 14:6 · சங்கீதம் 98:1-3 · வெளிப்படுத்தின விசேஷம் 15:4 · ஏசாயா 51:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:5-11
11புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.
RelatedII கொரிந்தியர் 6:17 · சகரியா 2:6-7 · எபேசியர் 5:11 · ஏசாயா 48:20 · லேவியராகமம் 10:3 · ஏசாயா 1:16
12நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.
Relatedஏசாயா 58:8 · உபாகமம் 20:4 · யாத்திராகமம் 14:19-20 · யாத்திராகமம் 13:21-22 · ஏசாயா 45:2 · யாத்திராகமம் 12:11
13இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.
Relatedபிலிப்பியர் 2:7-11 · மத்தேயு 28:18 · யோவான் 3:31 · ஏசாயா 42:1 · எரேமியா 23:5 · வெளிப்படுத்தின விசேஷம் 5:6-13
14மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.
15அப்படியே, அவர் அநேகம் ஜாதிகளின்மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
Relatedரோமர் 15:20-21 · ஏசாயா 49:7 · ஏசாயா 55:5 · I பேதுரு 1:2 · எசேக்கியேல் 36:25 · சங்கீதம் 72:9-11
📖 ஏசாயாAll 66 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS