I இராஜாக்கள் 14
Tamil Bible (BSI 1957) • 31 verses
1அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்.
Relatedயாத்திராகமம் 20:5 · I சாமுவேல் 4:19-20 · I இராஜாக்கள் 14:12-13 · I சாமுவேல் 31:2 · II சாமுவேல் 12:15 · I இராஜாக்கள் 13:33-34
2அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.
RelatedI சாமுவேல் 28:8 · II சாமுவேல் 14:2 · I இராஜாக்கள் 11:29-38 · II நாளாகமம் 18:29 · லூக்கா 12:2 · I இராஜாக்கள் 22:30
3நீ உன் கையிலே பத்து அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு கலசம் தேனையும் எடுத்துக்கொண்டு அவனிடத்துக்குப் போ; பிள்ளைக்குச் சம்பவிக்கப்போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான்.
RelatedI சாமுவேல் 9:7-8 · I இராஜாக்கள் 13:7 · II இராஜாக்கள் 4:42 · II இராஜாக்கள் 8:7-9 · II இராஜாக்கள் 5:15 · யோவான் 4:47-48
4அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதிருந்தான்.
RelatedI இராஜாக்கள் 11:29 · I சாமுவேல் 4:15 · I சாமுவேல் 3:2 · I சாமுவேல் 4:3-4 · I இராஜாக்கள் 14:2 · யோசுவா 18:1
5கர்த்தர் அகியாவினிடத்தில்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம் கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும்; அவள் உட்பிரவேசிக்கிறபோது, தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார்.
RelatedII இராஜாக்கள் 4:27 · நீதிமொழிகள் 21:30 · ஆமோஸ் 3:7 · II இராஜாக்கள் 6:8-12 · சங்கீதம் 139:1-4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:19-20
6ஆகையால் வாசற்படிக்குள் பிரவேசிக்கும் அவளுடைய நடையின் சத்தத்தை அகியா கேட்டவுடனே, அவன்: யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; உன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிக்கிறதென்ன? துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன்.
Relatedதானியேல் 4:19-25 · லூக்கா 20:20-23 · I இராஜாக்கள் 14:2 · I இராஜாக்கள் 21:18-24 · I இராஜாக்கள் 13:20-22 · I இராஜாக்கள் 14:10-11
7நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன்.
RelatedI இராஜாக்கள் 16:2 · II சாமுவேல் 12:7-8 · I இராஜாக்கள் 12:24 · I சாமுவேல் 15:16 · I சாமுவேல் 2:27-30
8நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப்போல நீ இராமல்,
RelatedI இராஜாக்கள் 15:5 · I இராஜாக்கள் 11:33-38 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:36 · II நாளாகமம் 28:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:22 · I இராஜாக்கள் 11:30-31
9உனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய்.
Relatedசங்கீதம் 50:17 · எசேக்கியேல் 23:35 · நெகேமியா 9:26 · I இராஜாக்கள் 12:28 · II நாளாகமம் 11:15 · யாத்திராகமம் 34:17
10ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணி, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் முதலாயிராதபடிக்கு, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்காரம்பண்ணி, குப்பை கழித்துப்போடப்படுகிறதுபோல யெரொபெயாமின் பின்னடியாரை அவர்கள் கட்டோடே அற்றுப்போகுமட்டும் கழித்துப்போடுவேன் என்றார்.
Relatedஉபாகமம் 32:36 · I இராஜாக்கள் 21:21 · II இராஜாக்கள் 14:26 · II இராஜாக்கள் 9:8-9 · II இராஜாக்கள் 9:37 · I இராஜாக்கள் 15:25-30
11யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் தின்னும்; கர்த்தர் இதை உரைத்தார்.
RelatedI இராஜாக்கள் 16:4 · I இராஜாக்கள் 21:23-24 · வெளிப்படுத்தின விசேஷம் 19:17-18 · எரேமியா 15:3 · I இராஜாக்கள் 21:19 · எசேக்கியேல் 39:17-19
12ஆகையால் நீ எழுந்து, உன் வீட்டுக்குப்போ, உன் கால்கள் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்துப்போவான்.
RelatedII இராஜாக்கள் 1:6 · II இராஜாக்கள் 1:16 · யோவான் 4:50-52 · I இராஜாக்கள் 14:3 · I இராஜாக்கள் 14:16-17
13அவனுக்காக இஸ்ரவேலரெல்லாரும் துக்கங்கொண்டாடி அவனை அடக்கம்பண்ணுவார்கள்; யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டதினால், யெரொபெயாமின் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான்.
RelatedII நாளாகமம் 19:3 · II நாளாகமம் 12:12 · எசேக்கியேல் 18:14-32 · பிலேமோன் 1:6 · II பேதுரு 2:8-9 · எரேமியா 22:18
14ஆனாலும் கர்த்தர் தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பப்பண்ணுவார்; அவன் அந்நாளிலே யெரொபெயாமின் வீட்டாரைச் சங்கரிப்பான்; இப்போதே இது நடந்தேறும்.
RelatedI இராஜாக்கள் 15:27-29 · எசேக்கியேல் 12:22-28 · II பேதுரு 2:3 · பிரசங்கி 8:11 · எசேக்கியேல் 7:2-7 · யாக்கோபு 5:9
15தண்ணீரிலே நாணல் அசைகிறதுபோல, கர்த்தர் இஸ்ரவேலை முறிந்தசையப்பண்ணி, அவர்கள் பிதாக்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்ரவேலை வேரோடே பிடுங்கி, அவர்கள் தங்களுக்கு தோப்பு விக்கிரகங்களை வைத்து, கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், அவர்களை நதிக்கப்பாலே சிதறடித்து,
Relatedயோசுவா 23:15-16 · சங்கீதம் 52:5 · II இராஜாக்கள் 15:29 · நீதிமொழிகள் 2:22 · யாத்திராகமம் 34:13-14 · உபாகமம் 12:3-4
16யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவத்தினிமித்தம் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான்.
RelatedI இராஜாக்கள் 16:2 · I இராஜாக்கள் 13:34 · I இராஜாக்கள் 15:34 · I இராஜாக்கள் 15:30 · I இராஜாக்கள் 12:30 · மத்தேயு 18:7
17அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.
RelatedI இராஜாக்கள் 15:33 · I இராஜாக்கள் 16:23 · I இராஜாக்கள் 16:15 · I இராஜாக்கள் 15:21 · உன்னதப்பாட்டு 6:4 · I சாமுவேல் 4:18-20
18கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.
RelatedI இராஜாக்கள் 14:13
19யெரொபெயாம் யுத்தம்பண்ணினதும் ஆண்டதுமான அவனுடைய மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
RelatedII நாளாகமம் 13:2-20 · I இராஜாக்கள் 14:29-30 · I இராஜாக்கள் 16:27 · I இராஜாக்கள் 15:31 · I இராஜாக்கள் 16:20 · I நாளாகமம் 27:24
20யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Relatedயோபு 14:12 · I இராஜாக்கள் 2:10 · சங்கீதம் 3:5 · I இராஜாக்கள் 11:43 · I இராஜாக்கள் 15:25-31 · சங்கீதம் 4:8
21சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம்பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின் பேர் நாமாள்.
RelatedII நாளாகமம் 12:13 · I இராஜாக்கள் 11:36 · I இராஜாக்கள் 14:31 · I இராஜாக்கள் 11:32 · ஏசாயா 12:6 · I இராஜாக்கள் 8:16
22யூதா ஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தாங்கள் செய்து வருகிற தங்களுடைய பாவங்களினால் தங்கள் பிதாக்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.
RelatedI கொரிந்தியர் 10:22 · II நாளாகமம் 12:1 · சங்கீதம் 78:58 · நியாயாதிபதிகள் 3:12 · உபாகமம் 4:24 · நியாயாதிபதிகள் 4:1
23அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின் கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்புவிக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.
Relatedஉபாகமம் 12:2 · ஏசாயா 57:5 · II இராஜாக்கள் 17:9-10 · எசேக்கியேல் 16:24-25 · எரேமியா 2:20 · எரேமியா 3:13
24தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியெல்லாம் செய்தார்கள்.
Relatedஉபாகமம் 23:17 · II இராஜாக்கள் 23:7 · I இராஜாக்கள் 15:12 · I கொரிந்தியர் 6:9 · I இராஜாக்கள் 22:46 · ஆதியாகமம் 19:5
25ரெகொபெயாம் ராஜ்யபாரம்பண்ணும் ஐந்தாம் வருஷத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து,
26கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
RelatedI இராஜாக்கள் 15:18 · II நாளாகமம் 9:15-16 · பிரசங்கி 2:18-19 · சங்கீதம் 89:35-45 · I இராஜாக்கள் 10:16-17 · I இராஜாக்கள் 7:51
27அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.
RelatedI சாமுவேல் 22:17 · I சாமுவேல் 8:11 · I இராஜாக்கள் 18:46 · புலம்பல் 4:1-2 · I இராஜாக்கள் 14:5 · II சாமுவேல் 15:1
28ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச்சேவகர் அவைகளைப் பிடித்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
RelatedII நாளாகமம் 12:11
29ரெகொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
RelatedI இராஜாக்கள் 15:23 · I இராஜாக்கள் 11:41 · I இராஜாக்கள் 14:19 · II நாளாகமம் 12:15-16 · I இராஜாக்கள் 22:45
30ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
31ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம் பண்ணப்பட்டான்; அம்மோன் ஜாதியான அவன் தாய்க்கு நாமாள் என்று பேர்; அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
📖 I இராஜாக்கள்All 22 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS