ஏசாயா 8
Tamil Bible (BSI 1957) • 22 verses
1பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார்.
Relatedஏசாயா 30:8 · ஆபகூக் 2:2-3 · ஏசாயா 8:3 · யோபு 19:23-24 · எரேமியா 36:32 · வெளிப்படுத்தின விசேஷம் 13:18
2அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.
RelatedII இராஜாக்கள் 16:10-11 · II கொரிந்தியர் 13:1 · II இராஜாக்கள் 18:2 · II இராஜாக்கள் 16:15-16 · ரூத் 4:2 · ரூத் 4:10-11
3நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு.
4இந்தப் பாலகன், அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார்.
Relatedரோமர் 9:11 · II இராஜாக்கள் 17:5-6 · ஏசாயா 17:3 · யோனா 4:11 · ஏசாயா 7:15-16 · II இராஜாக்கள் 16:9
5பின்னும் கர்த்தர் என்னை நோக்கி:
Relatedஏசாயா 7:10
6இந்த ஜனம் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைபண்ணி, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால்,
7இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,
8யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும்.
9ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,
Relatedஏசாயா 14:5-6 · I இராஜாக்கள் 20:11 · நீதிமொழிகள் 11:21 · சங்கீதம் 37:14-15 · ஏசாயா 17:12-13 · ஏசாயா 7:1-2
10ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்.
Relatedபுலம்பல் 3:37 · ரோமர் 8:31 · யோபு 5:12 · நீதிமொழிகள் 21:30 · சங்கீதம் 46:11 · II சாமுவேல் 15:31
11கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது:
Relatedஎசேக்கியேல் 3:14 · நீதிமொழிகள் 1:15 · எரேமியா 20:9 · சங்கீதம் 32:8 · எரேமியா 20:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:20
12இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,
13சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.
Relatedலூக்கா 12:5 · ஏசாயா 26:3-4 · வெளிப்படுத்தின விசேஷம் 15:4 · மத்தேயு 10:28 · சங்கீதம் 76:7 · மல்கியா 2:5
14அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
RelatedI பேதுரு 2:8 · ரோமர் 9:32-33 · ஏசாயா 28:16 · லூக்கா 2:34 · எசேக்கியேல் 11:16 · சங்கீதம் 46:1-2
15அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
16சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார்.
Relatedதானியேல் 12:4 · எபிரெயர் 3:5 · I கொரிந்தியர் 2:14 · உபாகமம் 4:45 · வெளிப்படுத்தின விசேஷம் 19:10 · ஏசாயா 29:11-12
17நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
18இதோ, நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.
19அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம்பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?
RelatedI நாளாகமம் 10:13 · லேவியராகமம் 20:6 · II நாளாகமம் 33:6 · சங்கீதம் 106:28 · லேவியராகமம் 19:31 · ஏசாயா 29:4
20வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
RelatedII பேதுரு 1:19 · II தீமோத்தேயு 3:15-17 · சங்கீதம் 119:130 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11 · யோவான் 5:39 · ஏசாயா 30:8-11
21இடுக்கண் அடைந்தவர்களாயும் பட்டினியாயும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் தூஷிப்பார்கள்.
22அவர்கள் அண்ணாந்துபார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப்பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.
Relatedஏசாயா 5:30 · எரேமியா 13:16 · மத்தேயு 8:12 · மத்தேயு 22:13 · எரேமியா 30:6-7 · நீதிமொழிகள் 14:32
📖 ஏசாயாAll 66 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS