பிரசங்கி 8
Tamil Bible (BSI 1957) • 17 verses
1ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் தாற்பரியத்தை அறிந்தவன் யார்? மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அவன் முகத்தின் மூர்க்கம் மாறும்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 6:15 · உபாகமம் 28:50 · II பேதுரு 1:20 · தானியேல் 4:18-19 · யாத்திராகமம் 34:29-30 · யோபு 33:23
2ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன்; நீ தேவனுக்கு இட்ட ஆணையின்படியே இதைச் செய்.
Relatedதீத்து 3:1 · நீதிமொழிகள் 24:21 · I பேதுரு 2:13-17 · ரோமர் 13:1-5 · I இராஜாக்கள் 2:43 · யாத்திராகமம் 22:11
3நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத் துரிதப்படாதே; பொல்லாத காரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே: அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான்.
Relatedபிரசங்கி 10:4 · நீதிமொழிகள் 14:29 · தானியேல் 4:35 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:8-9 · தானியேல் 5:19 · ஏசாயா 48:4
4ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத் தக்கவன் யார்?
5கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்.
Relatedஎபிரெயர் 5:14 · I பேதுரு 3:13-14 · பிலிப்பியர் 1:9-10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:19 · I நாளாகமம் 12:32 · லூக்கா 20:25
6எல்லாக் காரியத்துக்கும் காலமும் நியாயமுமுண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி.
Relatedபிரசங்கி 3:1 · பிரசங்கி 3:17 · லூக்கா 19:42-44 · பிரசங்கி 3:11 · பிரசங்கி 7:13-14 · லூக்கா 17:26-30
7இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?
Relatedபிரசங்கி 10:14 · நீதிமொழிகள் 24:22 · மத்தேயு 24:50 · பிரசங்கி 9:12 · பிரசங்கி 6:12 · பிரசங்கி 3:22
8ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.
Relatedயோபு 14:5 · சங்கீதம் 89:48 · சங்கீதம் 49:6-9 · எபிரெயர் 9:27 · நீதிமொழிகள் 14:32 · பிரசங்கி 3:21
9இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன்; ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வெறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.
Relatedபிரசங்கி 5:8 · பிரசங்கி 5:13 · பிரசங்கி 4:7-8 · II இராஜாக்கள் 14:10-12 · பிரசங்கி 3:10 · யாத்திராகமம் 14:5-9
10பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்துவந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே.
Relatedநீதிமொழிகள் 10:7 · பிரசங்கி 9:5 · பிரசங்கி 2:16 · யோபு 21:32-33 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:13 · II இராஜாக்கள் 9:34-35
11துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.
Relatedஏசாயா 26:10 · ரோமர் 2:4-5 · சங்கீதம் 50:21-22 · II பேதுரு 3:3-10 · மத்தேயு 24:49-50 · சங்கீதம் 10:6
12பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.
Relatedசங்கீதம் 37:11 · லூக்கா 1:50 · II பேதுரு 2:9 · பிரசங்கி 7:15 · பிரசங்கி 3:14 · சங்கீதம் 37:18-19
13துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாக பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.
14பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்.
15ஆகையால் நான் களிப்பைப் புகழ்ந்தேன்; புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.
Relatedபிரசங்கி 2:24 · பிரசங்கி 5:18 · பிரசங்கி 3:12-13 · பிரசங்கி 9:7-9 · I தீமோத்தேயு 4:3-4 · பிரசங்கி 3:22
16நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது,
Relatedபிரசங்கி 2:23 · பிரசங்கி 1:13 · சங்கீதம் 127:2 · பிரசங்கி 8:9 · ஆதியாகமம் 31:40 · பிரசங்கி 8:7
17தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக்கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.
📖 பிரசங்கிAll 12 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS