மத்தேயு 2
Tamil Bible (BSI 1957) • 23 verses
1ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
2யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள்.
Relatedஎண்ணாகமம் 24:17 · எரேமியா 23:5 · வெளிப்படுத்தின விசேஷம் 22:16 · ஏசாயா 9:6-7 · சகரியா 9:9 · ஏசாயா 60:3
3ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுங்கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 17:6-7 · யோவான் 11:47-48 · மத்தேயு 23:37 · மத்தேயு 8:29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:24-27
4அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 23:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:12 · எரேமியா 8:8 · மத்தேயு 21:23 · மத்தேயு 7:29 · லூக்கா 20:19
5அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:
6யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.
Relatedஎசேக்கியேல் 34:23-25 · மீகா 5:2 · யோவான் 7:42 · ஏசாயா 9:6-7 · ஆதியாகமம் 49:10 · வெளிப்படுத்தின விசேஷம் 11:15
7அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:
Relatedஏசாயா 7:5-7 · யாத்திராகமம் 1:10 · I சாமுவேல் 18:21 · சங்கீதம் 64:4-6 · சங்கீதம் 55:21 · சங்கீதம் 83:3-4
8நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.
RelatedI கொரிந்தியர் 3:19-20 · லூக்கா 20:20-21 · எரேமியா 41:5-7 · நீதிமொழிகள் 26:24-25 · யோபு 5:12-13 · நீதிமொழிகள் 21:30
9ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.
10அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
11அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
12பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
Relatedமத்தேயு 2:19 · மத்தேயு 2:22 · மத்தேயு 2:13 · மத்தேயு 27:19 · ஆதியாகமம் 20:6-7 · ஆதியாகமம் 31:24
13அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.
Relatedமத்தேயு 2:12 · யாத்திராகமம் 1:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:7 · மத்தேயு 1:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:19
14அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,
15ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
16அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
Relatedஏசாயா 59:7 · நீதிமொழிகள் 28:15 · வெளிப்படுத்தின விசேஷம் 17:6 · நியாயாதிபதிகள் 16:10 · ஓசியா 10:14 · தானியேல் 3:13
17புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,
18எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
Relatedஎரேமியா 31:15 · எரேமியா 9:17-21 · எரேமியா 4:31 · ஆதியாகமம் 35:16-20 · எசேக்கியேல் 2:10 · ஆதியாகமம் 37:30
19ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு:
Relatedமத்தேயு 1:20 · தானியேல் 8:25 · எசேக்கியேல் 11:16 · சங்கீதம் 139:7 · தானியேல் 11:45 · ஏசாயா 51:12
20நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்துபோனார்கள் என்றான்.
Relatedயாத்திராகமம் 4:19 · I இராஜாக்கள் 12:1-3 · மத்தேயு 2:13 · I இராஜாக்கள் 11:40 · I இராஜாக்கள் 11:21 · நீதிமொழிகள் 3:5-6
21அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான்.
22ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,
23நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
Relatedநியாயாதிபதிகள் 13:5 · யோவான் 1:45-46 · மாற்கு 1:24 · மத்தேயு 1:22 · யோவான் 19:19 · யோவான் 18:7
📖 மத்தேயுAll 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS