யோபு 36
Tamil Bible (BSI 1957) • 33 verses
1பின்னும் எலிகூ:
2நான் பேசிமுடியுமட்டும் சற்றேபொறும்; இன்னும் தேவன் பட்சத்தில் நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன்.
Relatedயோபு 21:3 · யோபு 13:7-8 · II கொரிந்தியர் 5:20 · எசேக்கியேல் 2:7 · எபிரெயர் 13:22 · எரேமியா 15:19
3நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன்.
Relatedயாக்கோபு 3:17 · யாக்கோபு 1:17 · தானியேல் 9:7 · சங்கீதம் 145:17 · வெளிப்படுத்தின விசேஷம் 15:3 · யோபு 8:3
4மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்.
Relatedநீதிமொழிகள் 8:7-8 · யோபு 37:16 · சங்கீதம் 49:3 · II தீமோத்தேயு 3:16-17 · I கொரிந்தியர் 14:20 · நீதிமொழிகள் 22:20-21
5இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.
Relatedசங்கீதம் 22:24 · சங்கீதம் 138:6 · எரேமியா 10:12 · யோபு 37:23 · சங்கீதம் 147:5 · எரேமியா 32:19
6அவர் துன்மார்க்கரைப் பிழைக்க ஒட்டாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.
Relatedசங்கீதம் 72:12-14 · சங்கீதம் 140:12 · II பேதுரு 2:9 · சங்கீதம் 72:4 · யோபு 5:15 · யோபு 21:7-9
7அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடே கூட சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார்.
Relatedசங்கீதம் 34:15 · சங்கீதம் 33:18 · I சாமுவேல் 2:8 · சங்கீதம் 113:7-8 · II தெசலோனிக்கேயர் 3:3 · எஸ்தர் 10:3
8அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,
9அவர், அவர்கள் கிரியையையும், மிஞ்சிப்போன அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,
RelatedI கொரிந்தியர் 11:32 · யோபு 15:25 · சங்கீதம் 119:71 · சங்கீதம் 119:67 · புலம்பல் 3:39-40 · II நாளாகமம் 33:11-13
10அக்கிரமத்தை விட்டுத் திரும்பும்படி அவர்கள் செவியைத் திறந்து கடிந்துகொள்ளுகிறார்.
11அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.
12அடங்கார்களேயாகில் பட்டயத்துக்கு இரையாகி, ஞானம் அடையாமல் மாண்டுபோவார்கள்.
13மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.
Relatedரோமர் 2:5 · யோபு 27:8-10 · யோபு 36:8 · II நாளாகமம் 28:13 · மத்தேயு 22:12-13 · சங்கீதம் 107:10
14அவர்கள் வாலவயதிலே மாண்டுபோவார்கள்; இலச்சையானவர்களுக்குள்ளே அவர்கள் பிராணன் முடியும்.
15சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு நீங்கலாக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கையில் அவர்கள் செவியைத் திறக்கிறார்.
16அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.
17ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறப் பார்ப்பீர்; நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும்.
18உக்கிரமுண்டாயிருக்கிறதினால் அவர் உம்மை ஒரு அடியினால் வாரிக்கொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; அப்பொழுது மீட்கும் பொருளை மிகுதியாய்க் கொடுத்தாலும் அதற்கு நீர் நீங்கலாகமாட்டீர்.
19உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே.
Relatedநீதிமொழிகள் 11:4 · நீதிமொழிகள் 11:21 · ஏசாயா 2:20 · நீதிமொழிகள் 10:2 · யாக்கோபு 5:3 · சங்கீதம் 33:16-17
20ஜனங்கள் தங்கள் இடத்தைவிட்டு வாரிக்கொள்ளப்படப்போகிற இரவை வாஞ்சிக்காதிரும்.
Relatedயோபு 34:20 · II இராஜாக்கள் 19:35 · யோபு 34:25 · யாத்திராகமம் 12:29 · யோபு 3:20-21 · யோபு 7:15
21அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; உபத்திரவத்தைப்பார்க்கிலும் அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.
Relatedஎபிரெயர் 11:25 · சங்கீதம் 66:18 · I பேதுரு 3:17 · மத்தேயு 16:24 · எசேக்கியேல் 14:4 · மத்தேயு 13:21
22இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப் போல் போதிக்கிறவர் யார்?
23அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தக்கவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?
24மனுஷர் நோக்கிப்பார்க்கிற அவருடைய கிரியையை நீர் மகிமைப்படுத்த நினையும்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 15:3 · லூக்கா 1:46 · சங்கீதம் 72:18 · சங்கீதம் 145:10-12 · சங்கீதம் 111:2-4 · எரேமியா 10:12
25எல்லா மனுஷரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனுஷருக்கு வெளிப்படுகிறது.
26இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.
27அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.
Relatedசங்கீதம் 147:8 · யோபு 38:25-28 · சங்கீதம் 148:8 · சங்கீதம் 65:9-13 · யோபு 5:9 · எரேமியா 14:22
28அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது.
29மேகங்களின் பரவுதலையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?
30இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை விரிக்கிறார்; சமுத்திரத்தின் ஆழங்களையும் மூடுகிறார்.
Relatedசங்கீதம் 18:11-16 · யோபு 38:8-11 · யோபு 38:34-35 · ஆதியாகமம் 1:9 · யாத்திராகமம் 14:28 · சங்கீதம் 104:5-9
31அவைகளால் ஜனங்களை தண்டிக்கிறவரும், ஆகாரங்கொடுத்து இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்.
Relatedசங்கீதம் 136:25 · யோபு 37:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:17 · சங்கீதம் 104:13-15 · யோபு 38:26-27 · சங்கீதம் 65:9-13
32அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது இன்னின்னதை அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.
Relatedயோபு 37:15 · சங்கீதம் 147:8-9 · சங்கீதம் 148:8 · சங்கீதம் 18:11 · சங்கீதம் 135:7 · யாத்திராகமம் 10:21-23
33அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும், மந்தாரம் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் அறியப்படுத்தும்.
Relatedயோபு 37:2 · யோபு 36:29 · II சாமுவேல் 22:14 · I இராஜாக்கள் 18:41-45 · எரேமியா 14:4-6 · யோவேல் 2:22
📖 யோபுAll 42 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS