யோனா 2
Tamil Bible (BSI 1957) • 10 verses
1அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:
Relatedபுலம்பல் 3:53-56 · சங்கீதம் 91:15 · சங்கீதம் 130:1-2 · யோபு 13:15 · சங்கீதம் 50:15 · ஏசாயா 26:16
2என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.
Relatedசங்கீதம் 18:4-6 · சங்கீதம் 120:1 · சங்கீதம் 34:6 · சங்கீதம் 86:13 · சங்கீதம் 88:1-7 · I சாமுவேல் 30:6
3சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
Relatedசங்கீதம் 42:7 · புலம்பல் 3:54 · சங்கீதம் 69:1-2 · சங்கீதம் 88:5-8 · சங்கீதம் 69:14-15 · யோனா 1:12-16
4நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.
Relatedசங்கீதம் 31:22 · சங்கீதம் 5:7 · II நாளாகமம் 6:38 · ஏசாயா 38:17 · தானியேல் 6:10 · I இராஜாக்கள் 8:38-39
5தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது; ஆழி என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.
6பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்.
Relatedசங்கீதம் 30:3 · சங்கீதம் 16:10 · ஏசாயா 38:17 · சங்கீதம் 143:7 · நீதிமொழிகள் 8:25-29 · சங்கீதம் 104:8
7என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.
Relatedசங்கீதம் 18:6 · II நாளாகமம் 30:27 · I சாமுவேல் 30:6 · சங்கீதம் 143:5 · சங்கீதம் 11:4 · சங்கீதம் 77:10-11
8பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.
Relatedசங்கீதம் 31:6 · எரேமியா 2:13 · II இராஜாக்கள் 17:15 · I சாமுவேல் 12:21 · எரேமியா 10:8 · ஆபகூக் 2:18-20
9நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.
Relatedசங்கீதம் 3:8 · சங்கீதம் 50:14 · பிரசங்கி 5:4-5 · எபிரெயர் 13:15 · சங்கீதம் 50:23 · சங்கீதம் 116:17-18
10கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.
📖 யோனாAll 4 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS