ஏசாயா 21
Tamil Bible (BSI 1957) • 17 verses
1கடல் வனாந்தரத்தின் பாரம். சுழல் காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்து வருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்தரத்திலிருந்து அது வருகிறது.
2கொடிய தரிசனம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்பண்ணி, பாழாக்குகிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றிக்கைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியப்பண்ணினேன்.
Relatedஎரேமியா 49:34 · ஏசாயா 33:1 · ஏசாயா 24:16 · சங்கீதம் 60:3 · தானியேல் 5:28 · வெளிப்படுத்தின விசேஷம் 13:10
3ஆகையால், என் இடுப்பு மகாவேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைவுகொண்டு, கண்டதினால் கலங்கினேன்.
4என் இருதயம் திகைத்தது; திகில் என்னைத் திடுக்கிடப்பண்ணிற்று; எனக்கு இன்பந்தந்த இரவு பயங்கரமாயிற்று.
Relatedலூக்கா 21:34-36 · உபாகமம் 28:67 · I சாமுவேல் 25:36-38 · ஏசாயா 5:11-14 · II சாமுவேல் 13:28-29 · எரேமியா 51:39
5பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், ஜாமக்காரரை வையுங்கள், புசியுங்கள், குடியுங்கள், பிரபுக்களே, எழுந்து பரிசைகளுக்கு எண்ணெய் பூசுங்கள்.
Relatedஎரேமியா 51:39 · எரேமியா 51:11 · எரேமியா 51:57 · தானியேல் 5:1-5 · I கொரிந்தியர் 15:32 · ஏசாயா 13:2
6ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார்.
Relatedஎசேக்கியேல் 33:2-7 · ஆபகூக் 2:1-2 · எசேக்கியேல் 3:17 · II இராஜாக்கள் 9:17-20 · எரேமியா 51:12-13 · ஏசாயா 62:6
7அவன் ஒரு இரதத்தையும், ஜோடுஜோடான குதிரைவீரனையும், ஜோடுஜோடாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாய்க் கவனித்துக்கொண்டே இருந்து:
8ஆண்டவரே, நான் பகல்முழுதும் என் காவலிலே நின்று, இராமுழுதும் நான் என் காவலிடத்திலே தரித்திருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான்.
9இதோ, ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனுஷன் வருகிறான்; பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் விக்கிரக தேவர்களையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று பிரதியுத்தரம் சொல்லுகிறான்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 18:2 · எரேமியா 51:8 · வெளிப்படுத்தின விசேஷம் 14:8 · எரேமியா 51:44 · ஏசாயா 13:19 · ஏசாயா 14:4
10என் போரடிப்பின் தானியமே, என் களத்தின் கோதுமையே, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரால் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவித்தேன்.
Relatedஎரேமியா 51:33 · மீகா 4:13 · மத்தேயு 3:12 · II இராஜாக்கள் 13:7 · ஏசாயா 41:15-16 · எசேக்கியேல் 3:17-19
11தூமாவின் பாரம். சேயீரிலிருந்து என்னை நோக்கி: ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக்கேட்க;
12அதற்கு ஜாமக்காரன்: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதானால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்லுகிறான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 17:30-32 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:37-38 · எசேக்கியேல் 7:12 · எசேக்கியேல் 18:30-32 · எசேக்கியேல் 7:5-7 · ஏசாயா 55:7
13அரபியாவின் பாரம். திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தங்குவீர்கள்.
Relatedஎரேமியா 25:23-24 · I நாளாகமம் 1:32 · எசேக்கியேல் 27:15 · ஆதியாகமம் 25:3 · I இராஜாக்கள் 10:15 · ஏசாயா 13:1
14தேமாதேசத்தின் குடிகளே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள்.
Relatedஆதியாகமம் 25:15 · யோபு 6:19 · நீதிமொழிகள் 25:21 · ரோமர் 12:20 · I பேதுரு 4:9 · நியாயாதிபதிகள் 8:4-8
15அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின கட்கத்துக்கும், நாணேற்றின வில்லுக்கும், யுத்தத்தின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.
16ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போகும்.
Relatedஉன்னதப்பாட்டு 1:5 · சங்கீதம் 120:5 · ஏசாயா 16:14 · ஏசாயா 60:7 · எசேக்கியேல் 27:21 · எரேமியா 49:28
17கேதார் புத்திரராகிய பராக்கிரம வில்வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சப் பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதை உரைத்தார்.
📖 ஏசாயாAll 66 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS