சகரியா 9
Tamil Bible (BSI 1957) • 17 verses
1ஆதிராக் தேசத்துக்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான கர்த்தருடைய வார்த்தையாகிய பாரம்; மனுஷரின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கும்.
Relatedசங்கீதம் 25:15 · ஏசாயா 9:8-21 · எரேமியா 49:23-27 · ஆமோஸ் 1:3-5 · ஏசாயா 17:1-3 · சகரியா 8:21-23
2ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும் சீதோனும் அதின் எல்லைக்குள்ளாயிருக்கும்.
Relatedஎசேக்கியேல் 28:12 · எரேமியா 49:23 · எசேக்கியேல் 28:2-5 · ஏசாயா 23:1-18 · ஒபதியா 1:20 · I இராஜாக்கள் 17:9
3தீரு தனக்கு அரணைக் கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.
Relatedயோசுவா 19:29 · யோபு 27:16 · எசேக்கியேல் 27:33 · எசேக்கியேல் 28:4-5 · II சாமுவேல் 24:7 · ஏசாயா 23:8
4இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது அக்கினிக்கு இரையாகும்.
Relatedஎசேக்கியேல் 28:18 · எசேக்கியேல் 26:17 · ஆமோஸ் 1:10 · எசேக்கியேல் 28:8 · எசேக்கியேல் 27:26-36 · எசேக்கியேல் 28:16
5அஸ்கலோன் அதைக் கண்டு பயப்படும், காத்சாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்றிருக்கும்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 8:26 · செப்பனியா 2:4-7 · எரேமியா 47:1 · வெளிப்படுத்தின விசேஷம் 18:9-17 · பிலிப்பியர் 1:20 · எரேமியா 47:4-7
6அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் வாசம்பண்ணுவார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன்.
7அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும், அவனுடைய அருவருப்புகளை அவன் பல்லுகளின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான்.
Relatedகலாத்தியர் 3:28 · ஏசாயா 60:14-16 · எரேமியா 48:47 · I சாமுவேல் 17:34-36 · ஏசாயா 49:22-23 · எசேக்கியேல் 16:57-61
8சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படும்படி அதைச் சுற்றிலும் பாளயம்போடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
9சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.
Relatedமத்தேயு 21:4-7 · செப்பனியா 3:14-15 · யோவான் 12:13-16 · சகரியா 2:10 · எரேமியா 23:5-6 · லூக்கா 19:37-38
10எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்.
Relatedஓசியா 2:18 · ஓசியா 1:7 · வெளிப்படுத்தின விசேஷம் 11:15 · II கொரிந்தியர் 10:4-5 · கொலோசெயர் 1:20-21 · சங்கீதம் 72:7-11
11உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.
Relatedஏசாயா 51:14 · யாத்திராகமம் 24:8 · சங்கீதம் 102:19-21 · ஏசாயா 42:7 · மத்தேயு 26:28 · I கொரிந்தியர் 11:25
12நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
13நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் புத்திரரைக் கிரேக்குதேசப் புத்திரருக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்துக்கு ஒப்பாக்குவேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 17:14 · ஏசாயா 49:2 · சகரியா 10:3-7 · சகரியா 12:2-8 · சகரியா 1:21 · சங்கீதம் 45:3
14அவர்கள் பட்சத்தில் கர்த்தர் காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; கர்த்தராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார்.
15சேனைகளின் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் பட்சித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் குடித்துக் களிப்பினால் ஆரவாரிப்பார்கள்; பானபாத்திரங்கள்போலவும், பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள்.
16அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள்.
17அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.
RelatedI யோவான் 4:8-11 · ஏசாயா 33:17 · ஏசாயா 62:8-9 · சங்கீதம் 31:19 · சங்கீதம் 36:7 · யாத்திராகமம் 15:11
📖 சகரியாAll 14 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS