யாத்திராகமம் 9
Tamil Bible (BSI 1957) • 35 verses
1பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு.
Relatedயாத்திராகமம் 8:1 · யாத்திராகமம் 10:3 · யாத்திராகமம் 9:13 · யாத்திராகமம் 8:20 · யாத்திராகமம் 4:22-23 · யாத்திராகமம் 5:1
2நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்தாயாகில்,
Relatedயாத்திராகமம் 8:2 · லேவியராகமம் 26:23-24 · லேவியராகமம் 26:27-28 · சங்கீதம் 68:21 · ஏசாயா 1:20 · வெளிப்படுத்தின விசேஷம் 16:9
3கர்த்தருடைய கரம் வெளியிலிருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின் மேலும் இருக்கும்; மகா கொடிதான கொள்ளை நோய் உண்டாகும்.
Relatedயாத்திராகமம் 7:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:11 · யாத்திராகமம் 8:19 · I சாமுவேல் 5:6-11 · I சாமுவேல் 6:9 · யாத்திராகமம் 5:3
4கர்த்தர் இஸ்ரவேலின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார்.
5மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார்.
Relatedயாத்திராகமம் 8:23 · யோபு 24:1 · மத்தேயு 27:63-64 · எண்ணாகமம் 16:5 · பிரசங்கி 3:1-11 · யாத்திராகமம் 10:4
6மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.
7பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை.
Relatedயாத்திராகமம் 7:14 · யாத்திராகமம் 8:32 · தானியேல் 5:20 · யாத்திராகமம் 9:12 · ஏசாயா 48:4 · நீதிமொழிகள் 29:1
8அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன்.
Relatedயாத்திராகமம் 8:16
9அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப்பண்ணும் என்றார்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 16:2 · உபாகமம் 28:27 · யோபு 2:7 · உபாகமம் 28:35 · லேவியராகமம் 13:18-20
10அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று.
Relatedஉபாகமம் 28:27
11அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர் எல்லார்மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்களின் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது.
Relatedஏசாயா 47:12-14 · II தீமோத்தேயு 3:8-9 · வெளிப்படுத்தின விசேஷம் 16:2 · யாத்திராகமம் 8:18-19 · யாத்திராகமம் 7:11-12
12ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
Relatedயாத்திராகமம் 4:21 · சங்கீதம் 81:11-12 · யாத்திராகமம் 7:13-14 · வெளிப்படுத்தின விசேஷம் 16:10-11
13அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.
14விடாதிருந்தால், பூமியெங்கும் என்னைப்போல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர்மேலும் உன் ஜனங்கள்மேலும் அனுப்புவேன்.
Relatedயாத்திராகமம் 8:10 · உபாகமம் 28:59-61 · லேவியராகமம் 26:21 · ஏசாயா 46:9 · I நாளாகமம் 17:20 · எரேமியா 10:6
15நீ பூமியில் இராமல் நாசமாய்ப்போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்.
Relatedயாத்திராகமம் 3:20 · யாத்திராகமம் 9:16 · யாத்திராகமம் 9:3 · I இராஜாக்கள் 13:34 · யாத்திராகமம் 9:6 · நீதிமொழிகள் 2:22
16என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.
Relatedரோமர் 9:17 · நீதிமொழிகள் 16:4 · சங்கீதம் 83:17-18 · I நாளாகமம் 16:24 · சங்கீதம் 64:9 · யாத்திராகமம் 14:17
17நீ என் ஜனங்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாய் உன்னை உயர்த்துகிறாயா?
18எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப்பண்ணுவேன்.
RelatedI இராஜாக்கள் 20:6 · சங்கீதம் 83:15 · யாத்திராகமம் 9:22-25 · I இராஜாக்கள் 19:2 · II இராஜாக்கள் 7:1 · II இராஜாக்கள் 7:18
19இப்பொழுதே ஆள் அனுப்பி, உன் மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகத்தக்கதாய் அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல் என்றார்.
Relatedஆபகூக் 3:2
20பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப்பண்ணினான்.
Relatedநீதிமொழிகள் 13:13 · நீதிமொழிகள் 22:3 · எபிரெயர் 11:7 · மாற்கு 13:14-16 · யோனா 3:5-6 · நீதிமொழிகள் 22:23
21எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற்போனானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.
Relatedநீதிமொழிகள் 24:32 · தானியேல் 10:12 · யோபு 7:17 · I சாமுவேல் 4:20 · யாத்திராகமம் 7:23 · யோபு 34:14
22அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசம் எங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற சகலவிதமான பயிர் வகைகள்மேலும் கல்மழை பெய்ய, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.
23அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று; எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்;
Relatedசங்கீதம் 18:13 · யோசுவா 10:11 · எசேக்கியேல் 38:22 · ஏசாயா 30:30 · சங்கீதம் 78:47-48 · வெளிப்படுத்தின விசேஷம் 8:7
24கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது; எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை.
25எகிப்து தேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது.
26இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலே மாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது.
Relatedயாத்திராகமம் 11:7 · யாத்திராகமம் 9:4 · யாத்திராகமம் 10:23 · யாத்திராகமம் 9:6 · யாத்திராகமம் 12:13 · யாத்திராகமம் 8:22-32
27அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நான் இந்த முறை பாவம் செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர்.
Relatedயாத்திராகமம் 10:16 · சங்கீதம் 129:4 · புலம்பல் 1:18 · II நாளாகமம் 12:6 · சங்கீதம் 145:17 · தானியேல் 9:14
28இது போதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுங்கள்; நான் உங்களைப் போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை என்றான்.
Relatedயாத்திராகமம் 8:8 · யாத்திராகமம் 10:17 · யாத்திராகமம் 8:28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:24 · யாத்திராகமம் 11:1 · சங்கீதம் 29:3-4
29மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோகும்; அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.
RelatedI கொரிந்தியர் 10:26 · I இராஜாக்கள் 8:38 · ஏசாயா 1:15 · சங்கீதம் 143:6 · I இராஜாக்கள் 8:22 · உபாகமம் 10:14
30ஆகிலும் நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன் என்றான்.
31அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப்பயிருமாயிருந்தது; அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று.
32கோதுமையும் கம்பும் கதிர்விடாதிருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை.
Relatedயாத்திராகமம் 10:22
33மோசே பார்வோனைவிட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமலிருந்தது.
34மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம்செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.
Relatedயாத்திராகமம் 7:14 · யாத்திராகமம் 8:15 · II நாளாகமம் 36:13 · II நாளாகமம் 33:23 · II நாளாகமம் 28:22 · யாத்திராகமம் 4:21
35கர்த்தர் மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.
Relatedயாத்திராகமம் 4:21
📖 யாத்திராகமம்All 40 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS