II நாளாகமம் 18
Tamil Bible (BSI 1957) • 34 verses
1யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; அவன் ஆகாபோடே சம்பந்தங்கலந்து,
RelatedII நாளாகமம் 17:5 · II நாளாகமம் 21:6 · II இராஜாக்கள் 8:18 · II நாளாகமம் 19:2 · II இராஜாக்கள் 8:26-27 · மத்தேயு 6:33
2சில வருஷங்கள் சென்றபின்பு, சமாரியாவிலிருக்கிற ஆகாபிடத்துக்குப் போனான்; அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற ஜனத்திற்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை ஏவினான்.
RelatedII இராஜாக்கள் 9:1 · II நாளாகமம் 19:2 · I இராஜாக்கள் 1:9 · நெகேமியா 13:6 · லூக்கா 17:27-29 · I இராஜாக்கள் 17:7
3எப்படியெனில், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடே வருகிறீரா என்று கேட்டதற்கு அவன்: நான் தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், உம்மோடேகூட யுத்தத்திற்கு வருகிறேன் என்றான்.
4பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.
Relatedஎரேமியா 21:2 · I சாமுவேல் 23:4 · II சாமுவேல் 5:19 · I சாமுவேல் 23:2 · II சாமுவேல் 5:23 · I சாமுவேல் 23:9-12
5அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள்: போம், தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
Relatedஎசேக்கியேல் 13:3-16 · I இராஜாக்கள் 18:19 · மீகா 3:11 · II இராஜாக்கள் 3:13 · எரேமியா 38:14-28 · II தீமோத்தேயு 4:3
6பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்.
7அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.
8அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.
RelatedI நாளாகமம் 28:1 · தானியேல் 1:3 · ஏசாயா 39:7 · தானியேல் 1:7-8 · I இராஜாக்கள் 22:9 · II நாளாகமம் 18:25-26
9இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுகவாசலுக்கு முன்னிருக்கும் விசாலமான இடத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்திலே உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
Relatedமத்தேயு 11:8 · ரூத் 4:1 · I இராஜாக்கள் 22:10-12 · மத்தேயு 6:29 · ஏசாயா 14:9 · எரேமியா 27:14-16
10கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
RelatedII தீமோத்தேயு 3:8 · எரேமியா 23:31 · எரேமியா 23:21 · எரேமியா 28:10-14 · சகரியா 1:18-21 · எசேக்கியேல் 22:28
11சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போம், உமக்கு வாய்க்கும், கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
RelatedII நாளாகமம் 18:33-34 · யூதா 1:16 · II பேதுரு 2:1-3 · II நாளாகமம் 18:5 · வெளிப்படுத்தின விசேஷம் 16:13-14 · II நாளாகமம் 18:12
12மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடனே பேசி: இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்.
13அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
Relatedஎண்ணாகமம் 22:35 · எண்ணாகமம் 24:13 · எண்ணாகமம் 22:18-20 · II கொரிந்தியர் 2:17 · எண்ணாகமம் 23:26 · எசேக்கியேல் 2:7
14அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போங்கள்; உங்களுக்கு வாய்க்கும்; உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்றான்.
RelatedI இராஜாக்கள் 18:27 · பிரசங்கி 11:1 · மத்தேயு 26:45 · ஆமோஸ் 4:4-5 · புலம்பல் 4:21 · I இராஜாக்கள் 22:15
15ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வெறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.
RelatedI இராஜாக்கள் 22:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:13 · மாற்கு 5:7 · I சாமுவேல் 14:24 · மத்தேயு 26:63
16அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.
Relatedமத்தேயு 9:36 · எசேக்கியேல் 34:5-6 · மாற்கு 6:34 · எண்ணாகமம் 27:17 · எசேக்கியேல் 34:8 · I இராஜாக்கள் 22:17
17அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான்.
18அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரம சேனையெல்லாம் அவர் வலது பக்கத்திலும் அவர் இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.
Relatedதானியேல் 7:9 · ஏசாயா 6:1-5 · I இராஜாக்கள் 22:19-23 · எரேமியா 2:4 · சங்கீதம் 103:20-21 · ஆதியாகமம் 32:2
19அப்பொழுது கர்த்தர்: இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.
RelatedII நாளாகமம் 25:8 · ஏசாயா 54:16 · II நாளாகமம் 25:19 · யாக்கோபு 1:13-14 · எசேக்கியேல் 14:9 · ஏசாயா 6:9-10
20அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனைசெய்வேன் என்றது; எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார்.
21அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப் பண்ணுவாய்; போய் அப்படியே செய் என்றார்.
Relatedயோவான் 8:44 · I இராஜாக்கள் 22:21-22 · வெளிப்படுத்தின விசேஷம் 20:8 · சங்கீதம் 109:17 · ஆதியாகமம் 3:4-5 · நியாயாதிபதிகள் 9:23
22ஆனதினால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.
23அப்பொழுது கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டே வந்து: மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.
Relatedமாற்கு 14:65 · எரேமியா 20:2 · II நாளாகமம் 18:10 · மத்தேயு 26:67-68 · I இராஜாக்கள் 22:23-25 · ஏசாயா 50:5-6
24அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
Relatedஎரேமியா 29:32 · ஏசாயா 26:11 · I இராஜாக்கள் 20:30 · எரேமியா 28:16-17 · எரேமியா 29:21-22 · ஏசாயா 26:20
25அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்துக்கும், ராஜகுமாரனாகிய யோவாசிடத்துக்கும் திரும்பக் கொண்டுபோய்,
RelatedII நாளாகமம் 18:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:25-27 · II நாளாகமம் 34:8 · எரேமியா 38:6-7 · எரேமியா 37:15-21
26அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.
RelatedII நாளாகமம் 16:10 · நீதிமொழிகள் 14:16 · சங்கீதம் 102:9 · உபாகமம் 29:19 · I தெசலோனிக்கேயர் 5:2-3 · ஏசாயா 30:20
27அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான்.
Relatedமாற்கு 7:14 · மத்தேயு 15:10 · லூக்கா 20:45-46 · ஆமோஸ் 9:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:10-11 · எண்ணாகமம் 16:29
28பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
RelatedI இராஜாக்கள் 22:29-33
29இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி யுத்தத்திலே பிரவேசித்தான்.
RelatedI சாமுவேல் 28:8 · I இராஜாக்கள் 14:2-6 · I இராஜாக்கள் 20:38 · யோபு 24:15 · நீதிமொழிகள் 26:25 · எரேமியா 23:24
30சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.
Relatedஆதியாகமம் 19:11 · I இராஜாக்கள் 20:33-34 · II நாளாகமம் 15:13 · உபாகமம் 1:17 · I இராஜாக்கள் 20:42
31ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன் தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்.
RelatedII நாளாகமம் 13:14 · சங்கீதம் 118:13 · சங்கீதம் 46:1 · நீதிமொழிகள் 21:1 · II கொரிந்தியர் 1:9-10 · சங்கீதம் 116:1-2
32இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள்.
RelatedI இராஜாக்கள் 22:33
33ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலேபட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான்.
34அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; இஸ்ரவேலின் ராஜா சீரியருக்கு எதிராக இரதத்தில் சாயங்காலமட்டும் நின்றிருந்து, சூரியன் அஸ்தமிக்கும்போது இறந்துபோனான்.
📖 II நாளாகமம்All 36 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS