II நாளாகமம் 16
Tamil Bible (BSI 1957) • 14 verses
1ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான்.
RelatedII நாளாகமம் 15:9 · II நாளாகமம் 11:13-17 · I இராஜாக்கள் 12:27 · II நாளாகமம் 15:5 · I இராஜாக்கள் 15:16-22
2அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வாசம்பண்ணுகிற பென்னாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி:
3எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பினேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படிக்கு நீர் வந்து, அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லி அனுப்பினான்.
Relatedசங்கீதம் 15:4 · II நாளாகமம் 19:2 · யாத்திராகமம் 32:21 · II தீமோத்தேயு 3:3 · II கொரிந்தியர் 6:16 · ரோமர் 1:31-32
4பென்னாதாத் ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும், தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி பட்டணங்களின் எல்லாப் பண்டகசாலைகளையும் முறிய அடித்தார்கள்.
RelatedII நாளாகமம் 8:6 · I இராஜாக்கள் 15:20 · நியாயாதிபதிகள் 20:1 · யாத்திராகமம் 1:11 · I இராஜாக்கள் 9:19 · நியாயாதிபதிகள் 18:28-29
5இதைப் பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைவிட்டு ஒழிந்தான்.
6அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
RelatedI சாமுவேல் 7:6 · I நாளாகமம் 6:60 · யோசுவா 15:38 · I இராஜாக்கள் 15:22 · யோசுவா 18:24-26 · சகரியா 14:10
7அக்காலத்திலே ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டபடியினால், சீரியா ராஜாவின் இராணுவம் உமது கைக்குத் தப்பிப்போயிற்று.
RelatedII நாளாகமம் 19:2 · I இராஜாக்கள் 16:1 · சங்கீதம் 146:3-6 · ஏசாயா 31:1 · II நாளாகமம் 32:7-8 · II நாளாகமம் 20:34
8மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரை வீரருமுள்ள எத்தியோப்பியரும் லூபியரும் மகா சேனையாயிருந்தார்கள் அல்லவா? நீர் கர்த்தரைச் சார்ந்து கொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே.
RelatedII நாளாகமம் 12:3 · II நாளாகமம் 14:9-12 · II நாளாகமம் 13:16 · II நாளாகமம் 16:7 · சங்கீதம் 37:39-40 · சங்கீதம் 9:9-10
9தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.
RelatedI பேதுரு 3:12 · நீதிமொழிகள் 15:3 · எரேமியா 16:17 · நீதிமொழிகள் 5:21 · சங்கீதம் 34:15 · யோபு 34:21
10அதினிமித்தம் ஆசா ஞானதிருஷ்டிக்காரன்மேல் சினந்து கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதல்லாமலும் அக்காலத்தில் ஜனங்களுக்குள் சிலரைக் கொடூரமாய் நடப்பித்தான்.
RelatedII நாளாகமம் 18:26 · எரேமியா 29:26 · நீதிமொழிகள் 9:7-9 · II நாளாகமம் 26:19 · ஏசாயா 51:23 · எரேமியா 51:34
11ஆசாவின் ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
RelatedII நாளாகமம் 34:18 · II நாளாகமம் 26:22 · II நாளாகமம் 9:29 · II நாளாகமம் 12:15 · II நாளாகமம் 20:34 · II நாளாகமம் 25:26
12ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.
Relatedஎரேமியா 17:5 · மாற்கு 5:26 · II நாளாகமம் 28:22 · I நாளாகமம் 10:14 · II நாளாகமம் 16:9 · மாற்கு 2:17
13ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருஷத்தில் மரித்து, தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்.
RelatedI இராஜாக்கள் 15:24
14தைலக்காரரால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனை வளர்த்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்கு வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்பண்ணினார்கள்.
Relatedஎரேமியா 34:5 · ஆதியாகமம் 50:2 · II நாளாகமம் 21:19 · மாற்கு 16:1 · பிரசங்கி 10:1 · யாத்திராகமம் 30:25-37
📖 II நாளாகமம்All 36 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS