I இராஜாக்கள் 17
Tamil Bible (BSI 1957) • 24 verses
1கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
Relatedலூக்கா 4:25-26 · யாக்கோபு 5:17 · லூக்கா 1:17 · I இராஜாக்கள் 22:14 · II இராஜாக்கள் 3:14 · வெளிப்படுத்தின விசேஷம் 11:6
2பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:
Relatedஎரேமியா 18:1 · எரேமியா 11:1 · I இராஜாக்கள் 12:22 · ஓசியா 1:1-2 · எரேமியா 7:1 · I நாளாகமம் 17:3
3நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு.
RelatedI இராஜாக்கள் 22:25 · எரேமியா 36:26 · எரேமியா 36:19 · எபிரெயர் 11:38 · யோவான் 8:59 · வெளிப்படுத்தின விசேஷம் 12:14
4அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
RelatedI இராஜாக்கள் 17:9 · சங்கீதம் 147:9 · மத்தேயு 4:4 · யோபு 38:41 · I இராஜாக்கள் 19:5-8 · சங்கீதம் 33:8-9
5அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.
6காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
Relatedசங்கீதம் 78:23-24 · மத்தேயு 6:31-33 · சங்கீதம் 78:15-16 · எரேமியா 37:21 · மத்தேயு 14:19-21 · மத்தேயு 19:26
7தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று.
8அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:
9நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன் என்றார்.
Relatedலூக்கா 4:26 · ஒபதியா 1:20 · II கொரிந்தியர் 4:7 · மத்தேயு 15:21-22 · I இராஜாக்கள் 17:4 · ரோமர் 4:17-21
10அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.
11கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்.
Relatedமத்தேயு 25:35-40 · I இராஜாக்கள் 18:4 · ஆதியாகமம் 24:18-19 · I இராஜாக்கள் 17:9 · மத்தேயு 10:42 · ஆதியாகமம் 18:5
12அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.
Relatedமத்தேயு 15:33-34 · I இராஜாக்கள் 17:1 · எசேக்கியேல் 12:18-19 · ஆதியாகமம் 21:16 · II இராஜாக்கள் 4:2-7 · எரேமியா 4:2
13அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம்.
Relatedமல்கியா 3:10 · மத்தேயு 6:33 · ஆதியாகமம் 22:1-2 · யாத்திராகமம் 14:13 · ஏசாயா 41:13 · II இராஜாக்கள் 6:16
14கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Relatedமத்தேயு 15:36-38 · மத்தேயு 14:17-20 · II இராஜாக்கள் 4:42-44 · II இராஜாக்கள் 3:16 · II இராஜாக்கள் 7:1 · II இராஜாக்கள் 9:6
15அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்.
Relatedஎபிரெயர் 11:17 · மத்தேயு 15:28 · மாற்கு 12:43 · ஆதியாகமம் 6:22 · எபிரெயர் 11:7-8 · ரோமர் 4:19-20
16கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.
Relatedமத்தேயு 9:28-30 · லூக்கா 1:37 · யோவான் 4:50-51 · லூக்கா 1:45 · I இராஜாக்கள் 16:12 · மத்தேயு 19:26
17இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது.
18அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள்.
19அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:
20என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு;
Relatedமத்தேயு 21:22 · யாக்கோபு 5:15-18 · I இராஜாக்கள் 18:36-37 · யோசுவா 7:8-9 · சங்கீதம் 99:6 · I சாமுவேல் 7:8-9
21அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 20:10 · II இராஜாக்கள் 4:33-35 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:40 · எபிரெயர் 11:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:10
22கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.
Relatedஉபாகமம் 32:39 · வெளிப்படுத்தின விசேஷம் 11:11 · யோவான் 5:28-29 · ரோமர் 14:9 · எபிரெயர் 11:35 · யோவான் 11:43
23அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.
24அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.
Relatedயோவான் 16:30 · யோவான் 2:11 · யோவான் 3:2 · யோவான் 4:42-48 · I தெசலோனிக்கேயர் 2:13 · I யோவான் 2:21
📖 I இராஜாக்கள்All 22 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS